Friday, July 18, 2008

வேலை

வேலை

பாலாவிற்கு சொல்ல கொஞ்சம் கூச்சமாக இருந்த்து. எப்படி சொல்வான் அவர்கள் குடும்பம் நல்ல நிலைமையில் இருந்து இப்போது சண்டையால், கொடுமை பட்டு நஷ்டப்பட்டு, பரிதாப நிலைமையில் இருந்தார்கள். சென்னையில் நல்ல பெயர் எடுத்த செட்டியார் சமுகத்தை சேர்ந்தவர்கள்.

அவனுடைய அப்பாவும் மாமாவும் மதுரையில் இருந்து லாரியில் மதராசுக்கு மூட்டை தூக்கி பிழைக்க வந்தவர்கள். பிற்பாடு துணிக்கடை, நகைக்கடை என்று செட்டியார்களுக்கே உரித்த வியாபாரிகள் ஆனார்கள். ஏ . சி. இல்லாமல் இருக்க முடியாது!

ராமுவும் பாலாவும் ரொம்ப நல்ல நண்பர்கள். ராமு வியாபாரி குடும்பம் தான். சொந்த ஊர் திருப்பூர். காலேஜ் படி
க்ககையில். பணக்காரர்கள் ஒன்றாக கூத்தடிபார்கள். கும்மி அடிப்பார்கள். டூர் மற்றும் டெபார்ட்மென்ட் படிபல்லாத வேலை நன்றாக செய்து தப்பித்து பாஸ் செய்தார்கள். கூஜா தூக்கினார்கள் மாஸ்டர் களுக்கு. நாயர் கடை போண்டாவும், கிஒஸ்க் முட்டை பஜ்ஜியும் வாங்கி வாங்கி செலவு செய்தார்கள்.

இன்ஜினியரிங் படித்து முடிந்தவுடன் ராமு வேலைக்கு சென்று விட்டான். நல்ல கம்பெனி உயர்வான சம்பளம். அமெரிக்கா படிப்பு வேண்டாம் என்று விட்டு விட்டான். மார்க்கெட்டிங் வேலை விருப்பப்பட்டு இண்டேர்வ்யுவ் கொடுத்து டெவெலொபெர் ஆனான். மாற்றங்கள் ஆரம்பம்!

பாலா வெளிநாடு சென்று இரண்டு வருட படிப்பை மூன்று வருடம் படித்து முடித்து இந்தியா திரும்பி, பெயர் அளவில் ஒரு சாப்ட்வேர் கம்பெனி வைத்தான். ஜீவன் டெக்நோலோஜிஸ். வெத்து வேட்டு ஏமாற்று கம்பெனி. காசு கொடுத்து வேலை பார்த்தார்கள் தமிழ் மக்கள், எக்ஸ்ப்பீரியன்சுகாக. செப்டம்பர் 2001 இக்கு பிறகு கல்லா நிரம்பவில்லை. (இரட்டை கோபுரம் )

பெரிய சொந்த கம்பெனி இருபதாக காட்டி தான் கோடிக்கணக்கான சொத்தோடு பாலாவிற்கு ஒரு நடிகையை கல்யாணம் செய்து வைத்து இருந்தார்கள். என்ன கருமமோ! ப்ராஜெக்ட் இல்லாமல் வியாபாரம் நஷ்டம். பழைய தொழில் படுத்துவிட்டது.

யு எஸில் அவன் ஒரு முல்லா ப்ரொபெஸ்சாரிடம் பார்ட் டைம் ஆக எவருக்கும் தெரியாமல் 'டைம் மிஷன்' ப்ராஜெக்டில் வேலை செய்து,
சில நாட்கள் முன் பின் சென்று வரும் முறை அறிந்திருந்தான். வீட்டில் அது தன் அவன் பொழுது போக்கு. ஸ்டாக் மார்க்கெட்டில் விளையாடி பணம் பண்ணினான். எது விழுகிறது என்று சாயந்திரம் பார்த்துவிட்டு , காலை சென்று ஷார்ட் செய்து, காசு அள்ளுவான். வாழ பணம் வேனும் அல்லவா?

இரண்டு யு எஸ் ட்ரிப்பில் 'டைம் மிஷன்' பார்ட்ஸ் பூராவும் கொண்டு வந்திருந்தான். இந்த விஷயம் யாருக்கும் தெரியாது. ரகசியமாய் ஓரிடத்தில் வைத்து இருந்தான்.

ராமு நன்றாக வேலை செய்து வெளிநாடு எல்லாம் சென்று பிறகு இந்தியா திரும்பி வருடம் ஒரு கம்பெனி விதத்தில் மாற்றி வாழ்க்கை ஒட்டி கொண்டு இருந்தான்.

இருவரும் அவ்வபோது சந்தித்து கொண்டார்கள். ராமுவிற்கு பாலாவின் மனைவி அந்த முன்னாள் நடிகையை பார்க்க விருப்பமே இல்லை. வேறு வழி இல்லை. அவள் நடித்த சில படங்கள் விரும்பி பார்த்திருந்தான். நண்பனின் மனைவியாக பார்க்க முடியவில்லை. இது தான் வாழ்க்கை தர்ம சங்கடம் என்பதோ? கனவுக்கன்னி அவன் கனவிலே இன்னும் வாழ்ந்தாள். இருவரும் அவளுடைய படம் பற்றி பலமுறை ரசித்து பேசி இருக்கிறார்கள். முகுந்தா முகுந்தா பெருமாளே!

இப்படி இருக்கையில் அவன் நண்பன் (இப்போது முன்னாள்) ராமுவிற்கு வேலை மாற்றினால், பாலா தான் அறிமுக ரெப்ரென்ஸ் செக் கொடுப்பான். அப்போது அந்தே கம்பெனி விஷயம் முழுதும் கிடைக்கும். உதவிக்கு உதவி. பெருமையும் வேறே. பீரோடு ஒரு சாப்பாடு. ஒரு கேள்வி விடாமல் ராமு சொல்வான். நல்ல பதில் எது என்று டிஸ்குஸ் செய்வார்கள்.

"டே பாலா , இந்தே கம்பெனில சொதப்பல், ஸோ ஒரு புது கம்பெனிலே சீனியர் மேனேஜர் வேலை இருக்கு. ஈமெயில் பண்ணி இருக்கேன். ரெப்ரென்ஸ் செக் குடுடா என்றான் ராமு. ஓ.கே. என்றான் பாலா.

அதே வேலைக்கு அப்ளை செய்ய வேண்டியது தான் என்று நினைத்து கொண்டு, சங்கடம் பார்க்காமல், 'டைம் மிஷன்'இல் வேலை செய்து அந்த கம்பெனியில் உள்ளே நுழைய மனு செய்தான், அந்த ராமுவிற்கு முன்பாக.
இப்படியாக டைம் டிராவல் மூலம் அவன் முதலில் ராமுவிற்கு முன்னால் நுழைந்தது யாருக்கும் தெரியாது. வேலைக்கு என்ன தேவை என்பதை அறிந்தவன் ஆயிற்றே?

காக்கை உட்கார பனைபழம் விழுந்த கதையாக, அந்த
கம்பெனியில் பாலாவிற்கு கீழே வேலை செய்த குமார் ஜெனரல் மேனேஜர் ஆக நுழைந்துவிட்டார். அந்தே விஷயம் கேள்வி பட்டவுடன், பாலா ரொம்ப சந்தோசம் அடைந்து, பழைய நட்பு பாராட்டி, வேலையை விட்டு துரத்தி இருந்தாலும், துட்டு குடுத்து, சரி செய்து, தானே வேலைக்கு சேர்ந்து விட்டான்.

பலன். தனக்கு கீழே வேலை பர்த்தவனிடம் வேலை பார்க்க அவனுக்கு வருத்தம் இல்லை. ராமுவிற்கு பட்டை நாமம். என்ன கொடுமை சரவணன் இது?

முதன்முதலாக ராமுவிற்கு வருத்தம். பாலா எப்படி எனக்கு சொல்லாமல் அந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தான்?

ராமுவிற்கு வேறு வேலை கிடைத்த்து, ஆனால் ஏதோ ஒன்று மாறியது போலவே இருந்தது. அவன் நேருக்கு நேர் இண்டேர்வியுவில் எப்போதும் சக்செஸ் தான்.

இப்போது எல்லாம் பாலா யாரோடும் டச் வைத்து கொள்வதில்லை. எப்படி முடியம் ராமுவின் வேலைக்கு வேட்டு வைத்தவன் ஆயிற்றே! நண்பர் கூட்டம் முழுதும் அவனை சீண்டுவதில்லை. ராமு அப்ளை செய்த வேலையில், குமாரோடு அவன் வேலை செய்வது அவர்களுக்கு உறைத்தது.

பாலாவிற்கு வேலை ஒன்று என்று இப்போது இருந்தாலும், சுகமில்லை. ஒரு நாள் அவர்கள்
துணிகடையில் தீ. டைம் மிஷன் அங்கே தான் இருந்தது. அதுவும் அதோடு காலி. வேலை தான் வாழ்க்கை என்று ஆகிவிட்டது!

ராமு வேலை செய்த கம்பெனி பாலா வேலை செய்த கம்பெனியை விலைக்கு வாங்கியது. ராமுவே பாலாவிற்கு மேனேஜர் ஆக வந்தான்.

"என் நன்றி செய்தார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகர்க்கு!"

சும்மாவா சொல்லி இருக்கார் திருவள்ளுவர்.
எங்கோ ஒரு சென்னை குப்பை மேட்டிலே அந்த டைம் மிஷனின் பாதி சிரித்து கொண்டது. அதனருகில் பழைய பஸ் தகரம் அந்த குறளோடு கிடந்ததது.

1 comment:

Unknown said...

அந்த துணிகடை சரவணா ஸ்டோர்தானே