Monday, June 28, 2010

சந்திப்பு

சந்திப்பு

அழையா விருந்தாளிகள் இருவர்
சந்திப்பில் மூக்கை நுழைக்க
அடித்துக்கொள்கிறார்கள் பதிவில்
அசிங்கமாக
அமர்ந்தோர் கசபடைய அனைவரும்
சினிமா பேசியே
கொல்கிறார்கள் என்றவர் கேட்டது
அஜித்தை பாலா
ஆள் வைத்து அடித்தாரா?
என்னே ஒரு தலைப்பற்று?
முகம் சுருங்கியது அவருக்கு
பாலாவே அடித்தார் என்றவுடன்
அதை பார்க்க சகிக்கவில்லை!
சோறிட்டவர் யாரென்று
தெரியாமல்
நிறைவாக உண்டவர்
நன்றி தெரிவிக்க நாதியின்றி
தூர் போற்றல் செய்கிறார்!
இதுவன்றோ இலக்கியம்
செம்மொழி போற்றுதும்!
--
Regards
Vijayashankar

ஜெயமோகன் சந்திப்பு பற்றி

திங்கள் காலை இப்படி துவங்கனுமா?

இந்த பதிவை முதலில் படியுங்கள்.... ஜெயமோகன் சந்திப்பு பற்றி

எழுதிய மணிகண்டன் அவர்களுக்கு ஒரு பதில்.

இதை ஒரு அறிமுக, வரவேற்பு , சந்திப்பு கூட்டமாக தான் நான் நினைத்து ஜெயமோகனிடம் கேட்டு, எந்த ஒரு பார்மட்டும் ( நோக்கு? ) இல்லாமல் நடத்தினோம். ( இணையத்தில் அவரோடு தொடர்புடைய நண்பர்களை அழைத்தேன், சிலர் அவராக வந்து ஒட்டிகொண்டார்கள் - ஜெயமோகனிடம் இடம் கேட்டு ) அடுத்த முறை, யார் இந்த மாதிரி கூட்டம் நடத்த முன் வருகிறார்களோ, அவர்களிடம் உங்கள் அபிலாசையை தெரிவியுங்கள். அல்லது அடுத்த முறை அவர் இங்கு வரும் போது, நீங்களே முன் நின்று நடத்துங்கள்.

முதலில் உங்களை பற்றி ஒருவரிடமும் அறிமுகப்படுத்திக்கொள்ள முயற்சி எடுக்கவில்லை. இன்றோவேர்டாக    இருக்கலாம், என்று நான் நினைத்தேன்.

எவ்வளவு அமைதியாக இருந்து விட்டு, கேவலமாக ஒரு பதிவு வேறு போட்டு, வேதனை பட செய்கிறீர்கள் !

ஜெயமோகன் அவராக தான் சினிமாவை முன் வைத்து பேசினார். சில சமயம் இலக்கியம் சினிமாவினால் அடிபட்டு போகும்!  இது தான் கோவையிலும் நடந்துள்ளது.