Tuesday, December 08, 2009

பார்வேட் டு மேனேஜர்

1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுனு எதிர்பார்க்கறீங்க… ஆனா சாயந்திரம் 5 மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும் எப்படி பர்சனல் ஒர்க் வந்துடுது…? தெரியுதே, எங்களை மாதிர் தான் நீங்க இருந்து வந்தீங்கன்னு? ( புது கல்யாணம் ஆன மேனேஜர்கள் பத்தி தான் தெரியுமே... வீட்டிலிருந்தே வேலை செய்வாங்க! Telecommute)

2. அது எப்படி நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலைனா Dont make it too complicatedனு சொல்றீங்க… ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா He is Dumbனு சொல்றீங்க..? கொடுமையடா சாமி, வாங்குற சம்பளத்திற்கு! என்னை எங்களை விட நாலு மடங்கு இருக்குமா?

3. அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு சனிக்கிழமை நீங்க வீட்டுக்கு கிளம்பும் போது Happy Weekend னு கூச்சப்படாம சொல்லிட்டு போக முடியுது..? அடுத்த முறை சொல்லும் போது, விஷ் யு ஏ வெரி பேட் வீக்கெண்டுன்னு மனசுலே சொல்லப்போறேன். ( ரிசெசன் பயம்! )

4. அது எப்படி உங்களுக்கு ஒரு சாப்ட்வேர் அப்ளிகேஷன் சரியா வேலை செய்யலைனா, அப்ளிகேஷன்ல பிரச்சனைனு சொல்றீங்க… அதே எங்களுக்கு வேலை செய்யலைனா, உனக்கு சாப்ட்வேர் தெரியலைனு சொல்றீங்க..?

5. ஏதாவது நல்ல நாள் வந்தா ஏதோ உங்க வீட்ல மட்டும் விசேஷம் மாதிரி எல்லா வேலையையும் எங்க தலைல கட்றீங்களே. ஏன் எங்க வீட்லயும் விசேஷம் இருக்கும்னு உங்களுக்கு தெரிய மாட்டீங்குது..? நாங்க என்ன டெஸ்ட் ட்யூப் பேபியா… நல்ல வேலை கவர்ன்மென்ட் லீவு டைம் தொட மாட்டீங்க! இரு இரு ரிசசென் முடியட்டும்! வச்சுக்கிறேன் - ஆப்பு உண்டு, 360 டிக்ரீ பீட்பேக் பார்மிலே!

6. உங்களுக்கு சம்பள ஹைக் வரலைனா மட்டும் கம்பெனி ரொம்ப மோசமாகுதுனு சொல்ற நீங்க, எங்களுக்காக மட்டும் பேச மாட்டேன்கிருறீங்க? எப்படியும் நாங்க அநியாய சம்பள உயர்வு தான் கேட்போம். கொடுக்கிறது உங்க இஷ்டம்!

7. ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா மட்டும், I was very busy in some other issueனு சொல்றீங்க. அதே நாங்க மறந்தா, you should concentrate on workனு சொல்றீங்க…? அட அவுட்லூகிலே ஒரு ரிமேய்ண்டர் கூட போட மாட்டீங்களா?

8. ஆபிஸ் நேரத்துல நீங்க ஃபோன் பேசிட்டு இருந்தா மட்டும், அது ஏதோ தலை போற விஷயம் மாதிரி எடுத்துக்கறீங்க, அதே நாங்க பண்ணா வேலையை சரியா செய்ய மாட்றானு சொல்றீங்க…? நாங்க மத்தவங்க கிட்டே கேட்டு கேட்டு தானா வேலையே பண்ணறோம்! எப்படியோ கோட்டா சீட்டுலே இடம் வங்கி, பிட் அடிச்சாவது மார்க் வாங்கி - வேலை இன்டர்வியு க்வேச்டியன் பேப்பர் ( மத்தவங்க கிட்டே கேட்டு கேட்டு ) உருப்போட்டு இங்கே வந்து குப்ப கொட்டுறோம்!

9. சாயந்திரம் 5 மணிக்கு நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லை, ஆனா அப்ப நாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர போனா மட்டும் ஏதோ கொலை குத்தம் செய்யற மாதிரி பாக்கறீங்க…? என்ன ஒரு ஒரு மணி நேரம் ஆகுமா, எங்களுக்கு அப்படியே ஜாலியா ஒரு வாக் போயிட்டு டி குடிச்சிட்டு வரதுக்கு? சில சமயம் ஒன்றரை மணி நேரம் கூட ஆகும், ஆப்டியே சத்யம்லே ஒரு இங்க்லீஷ் படம் பார்த்துட்டு வரதுக்கு!

10. காலைல வந்ததுல இருந்து ICICI Direct, Gmail ,Geogit, Sharekhanனு செக் பண்ணிட்டு இருக்கீங்க. அதே நாங்க மதியம் சாப்பிட்டு வந்து மெயில் செக் பண்ணா மட்டும் Don’t use company resources for your personal workனு சொல்றீங்க…? நாங்களும் கொஞ்சம் ஸ்டாக் மார்கட்லே காசு பண்ணிட்டா என்ன?

ஏன் சார் ஏன்?

இதை தான் ஐயன் வள்ளுவர்.... திருக்குறள்ள சொல்றார்!

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

அது இது தாங்க! புரிஞ்சு படியுங்க.

ஆப்பீசுக்கு போனா ஆணிபுடுங்காம
சும்மா இருப்பதே சுகம்

அப்படின்னு வள்ளுவர் எப்பவோ எழுதிவச்சுட்டாரு.

இந்த மடபசங்க மேனேஜர்களுக்கு இது தெரிய மாட்டேங்குது.....

இத நான் எழுதலிங்க...... நண்பர்கள் எழுதியது எனது மெயிலுக்கு பார்வேடு ஆகி இருந்தது என்னாலயும் மேனேஜர்கிட்ட கேட்க முடியல.... அவர் எனது பதிவை படிப்பார்னு தெரியும் இப்படியாவது அவருக்கு சொல்லலாம்னு தான்........

நீங்களும் உங்க மேனேஜர்க்கு பார்வேடு பண்ணுங்க.......

ஒக்கே? பார்வேட் டு மேனேஜர்!