வாகன ஓட்டிகளின் மூட நம்பிக்கைகள்:
-------------------------------------------------------
• ஹார்ன்-லிருந்து கை எடுத்தால் வண்டி நின்று விடும் அல்லது விழுந்துவிடும்.
• ஹார்ன் அடித்தால் முன்செல்லும் வாகனங்கள் எல்லாம் மாயமாக மறைந்துவிடும்.
• சிக்னலில் 4 என்கிற எண்தான் 0வுக்கு சமம். 4 விநாடி என்று காட்டப்பட்டாலே வண்டிகள் விரைய வேண்டும்.
• நான்கு விநாடி காட்டப்பட்ட பின்னரும், 0-வுக்குக் காத்திருந்து,
வாகனத்தை எடுக்காமல் நின்றிருப்பவன் இந்த உலகத்தில் வாழத் தகுதியற்றவன்.
• பெட்ரோல் டேங்கைப் பாதுகாக்க, ஹெல்மெட்டை அதன் மீது வைத்தே ஓட்ட வேண்டும்.
• ஹெல்மெட் அணிவதால் முடி கொட்டும். உயிரை விட மயிரே பிரதானம்.
• ஹெல்மெட்டைப் போட்டுக் கொண்டாலும், அதன் ஸ்ட்ராப்பைப் போடுவதோ, அல்லது காரில் சீட் பெல்ட் போட்டுக் கொள்வதோ ஆண்மைக்கு இழுக்கு.
• பின்னால் வருபவர்கள், நம்மை விட அறிவாளிகள். நாம் வண்டியை எந்தப் பக்கம்
திருப்பப்போகிறோம் என்பதை, அவர்கள் இண்டிகேட்டர் போடாமலே அறிந்து
கொள்வார்கள்.
• டூவீலரில் ரியவியு மிர்ரர் வைத்திருப்பது வண்டியின் அழகைக் குறைத்துவிடும்.
• யு டர்ன் இல்லாத இடத்தில், வாகனத்தைத் திருப்புவதால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது.
• காலை 8 மணிக்கு முன்னரும், இரவு 10 மணிக்குப் பின்னரும் சாலைவிதிகளைக் கடைபிடிக்க வேண்டியதில்லை.
• FREE LEFT என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், சாலையை அடைத்துக் கொண்டு
வாகனத்தை நிறுத்துவதை, ட்ராஃபிக் போலீஸ் உட்பட எவரும் கேள்வி கேட்க
முடியாது.
• சிக்னலில் வாகனங்கள் நின்று கொண்டிருக்க, அவற்றின்
பின் நிறுத்துவது தேவையில்லாத வேலை. முடிந்த வரை முண்டியடித்து, முன்
சென்று நிறுத்தவேண்டும்.
• ஸ்பீட் ப்ரேக்கரைத் தாண்டும்போது,
வேகத்தைக் குறைக்காமலே தாண்டவேண்டும். அல்லது, ஸ்பீட் ப்ரேக்கரின் இரு
முனைகளிலும் இருக்கும் சிறுவழியில் கடக்க வேண்டும்.
• பார்க்கிங்-கில் வாகனத்தை நிறுத்தும்போது எப்படி வேண்டுமானாலும் நிறுத்தி, முன் நிறுத்தியவருக்கு இடைஞ்சல் தருவது நம் உரிமை.
• கார், பைக், பஸ், லாரி, வேன் போன்ற வாகனங்களில் டிம் லைட் என்கிற ஒரு
வசதி இல்லவே இல்லை. அல்லது அப்படி ஒன்றைப் பயன்படுத்துவது தவறு.
* அரசு - தனியார் பேருந்துகள் பயணிகளை இறக்கிவிட, நடுரோட்டில் மட்டுமே நிறுத்தவேண்டும். ஓரமாக நிறுத்தினால் நிற்காது.
My Comment
Super!
Same applies to Bangalore too. Here Traffic Police is ornamental....
they just stand and watch and work only when the ministers, or VIP pass.