Thursday, March 06, 2014

என் கீச்சல்கள்

என் கீச்சல்கள்


பிரபலங்களிடம் இருந்து ம்ம் மட்டுமே பதிலாக வருகிறது.

ஒருவரிடம் எங்கிருந்து இந்த படத்தை எடுத்தீர்கள் என்றேன்.. உடனே கில்டி கான்சியச்னேஷ்..  தப்பா  என்று பதில். அட மடயரே... இது பிரபலம் அதனால் கேட்டேன்.

கோச்சடையான் ஏப்ரல் 11 ரிலீஸ்.

படத்தை கொஞ்சம் சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க. கார்டூன் தானே...குழந்தைகள் கேட்கிறாங்க.

சம்பளம் எஷ்டு ? பேமிலி அக்கோ கஷ்டம் என்றீர் !

பையன் எம்.எஸ். (சி.எஸ்.) நார்த் டகோட்டா. விஸ்கான்சின்லே 6 வருடம். அங்கே பனி உலகம் தான். மைய்க்ரோசாப்ட்டர். இந்தியாலே அப்பாக்காக லாஸ்ட் ஒரு வருடம். இப்போ வாண்ட்ஸ் ஆப்சன்ஸ். பர்ண்ட் ப்ரிஜஸ். பச்சை அட்டை ஆப்சன் இன்னும் ரெடி இல்லே.

அவருக்கு பத்தாயிரம் திர்ஹம்ஸ் வேலை துபாஇய்லெ வேண்டாம்னு சொன்னார் அதனாலே தான் சம்பளம் கேட்டேன். அங்கு வேலை  பண்ணுன நண்பர் இப்போ டென்வர் மூவ் ஆனார்.

அரசியல் ஒரு சாக்கடை தொழில் என்று தெரியும் வரை நாம் பிள்ளைகளை வளர்ப்பது மிகவும் கடினம்.

நானும் அந்த ரத்தம் தான். எங்கப்பன் சொத்து இழந்தது தான் மிச்சம்.

உங்க ஊர்லயும் இந்த கூட்டணி தமாசு இருக்கா?

வீட்டில் இந்த தலை வாரும் பிரச்சனைக்கு ஒரு முடிவே இல்லையா? மதியம் தலை வாருவதற்கும் பதிமூன்று வயது மகள் பெரும் புயலை கிள்ளபுகிறாள். கெட்டவார்த்தை ஆனது இதனால்.

துப்பாக்கி வைத்துக்கொள்ள பக்கத்து நாட்டில் அனுமதி மிகவும் சுலபமாம்.

நாம் மட்டுமே சார்ந்து படி எடுப்போம், ஆனால் மற்றவர் படிக்க எதுக்கு?
இருக்கட்டும்... அதன் மதிப்பு தீரும் போது  மற்றவர்க்கு உபயோகப்படட்டுமே.

அங்கேயும்... மான் வேட்டைக்கு பென்சில்வேனியாவில் ஏர் ரைபிள் வாங்க இந்திய பாஸ்போர்ட் போதவில்லை.


Monday, March 03, 2014

அவன்

நண்பன்டா ....  அவன்...


கல்லூரிக்கு பிறகு அவன் இத்தனை காலம் கோவையில் பிஸினஸ் செய்வதாக சொல்லிக்கொண்டு இருந்தார். தவறுதலாக லிங்க்டின் அழைப்பில் உண்மை வந்தது.
 
அந்த நண்பர் 6 வருடங்கள் நிஜமாக பிஸினஸ் செய்துவிட்டு விசா கோர்ஸ் மூலம் அமெரிக்கா சென்று இப்போ இன்போசிஸில் டெக்சாஸ் க்ளையண்ட். எப்படியோ நல்லா  இரு!
 
கோவை சென்றபோதெல்லாம் அவன் இந்தியா போன் நம்பரை கால் பண்ண முடியலே. மெயில் காண்டெக்ட் மட்டுமே. அப்போ என்னை இந்தியா வரும்போது மட்டுமே அழைத்துள்ளான்.

குடும்பக் காரணத்திற்காக நான் இந்தியா 99 திரும்பிய நேரம் அவன் அமேரிக்கா புறப்பட்டு சென்றுள்ளான். அவன் வீட்டிருக்கும் ஏரியா போயுள்ளேன்.

எதற்காக இப்படி இருந்தான் என தெரியலே. இதற்கும் கல்லூரியில் வேறு டிபார்ட்மெண்ட். தமிழ் மன்றம் மூலம் பழக்கம்.

ஒருவன் எதற்காக நல்ல நிலைமையில் இருப்பதை வெளியில் காட்டிக்கொள்வதில்லை? அவனிடம் வேறு ஒரு குறையும் இல்லை.

அமெரிக்காவை பற்றி மிகவும் கேவலமாக சொல்லிக்கொண்டு திரிந்தவன் அவன். நான் அமெரிக்க பல்கலைகழகத்திற்கு அப்பளை செய்ததை வெறுத்தவன். இப்போ அவன் எம்பியே.
.
லிங்கடின்னில் பார்த்தால் கல்லூரி நண்பர் ஒருவரும் அவன் க்ரூபில் இல்லே. கல்லூரி பெயர் குறிப்பிடாமல் போடோ மட்டும் வைத்துள்ளான்.

என் பிரச்சனை என்னவென்றால், சில மாதங்கள் முன் பேசியவன் முதல் முறையாக வெளிநாடு செல்கிறேன் என்றான். இதில் என்னமோ உள்குத்து இருக்கு.

ஆதங்கத்தை வெளிபடுத்த சோசியல் மீடியா தான் துணை.  இதையும் அவன் படிப்பான் உணர்ந்துக்கொள்வான். நல்லா இருடா நீ.