Showing posts with label திருப்பூர். Show all posts
Showing posts with label திருப்பூர். Show all posts

Sunday, September 05, 2010

சந்திப்புகள்

சந்திப்புகள் சில சுவாரசியமானவை.

சென்ற வாரம் அம்மா பெங்களூரு வந்து திரும்ப சென்றார். அம்மாவின் சொந்தங்கள் ( ரொம்ப பழைய... விஜய நகர், ஒசல்லி ரோடு ஏரியா.. ) வந்த பார்த்து சென்றார்கள். தாத்தாவின் உதவிகள், இன்றும் மரியாதை கொடுக்கிறது.

திருப்பூர் - பெங்களூரு - இரண்டு வழியிலும், சென்று அம்மாவை அழைத்து - திரும்ப திருப்பி விட்டு வந்தேன். வரும் போதெல்லாம் ஒரு வாரம் தான் இங்கு இருக்கிறார்கள். திருப்பூர் போல வருமா என்கிறார்கள்.

இப்போதெல்லாம் திருப்பூர் தூரம் அதிகமில்லை என்றே தோன்றுது.

வழுக்கி செல்லும் சாலைகள்...  120 கிலோ மீட்டர் வேகம் செல்லலாம்... ஒரு முறை ப்ரேக் எடுத்தால் போதும்.

நாங்கள் இருக்கும் பி ஜி ரோடு - எலக்ட்ரானிக் சிடி - ஹோசூர் - சேலம் - திருப்பூர். செல்லும் போது சூலகிரி காமத்தில் டிபன். வரும் போது லஞ்ச தொப்பூர் அருகில்

முதலில் மேட்டூர் வழி தான் செல்வோம். ரோடு சரியில்லை. செங்கப்பள்ளி - சேலம் டோல் ரோடு வந்ததில் இருந்து மகிழ்ச்சி.

பெட்ரோல் விலை பெங்களூரில்  57.84 ஹோசூரில் 56.33 மிச்சம் அதிகமில்லை. :-) திருப்பூர் சென்று  வர - 600 கிலோமீட்டருக்கு சுமார் 40 லிட்டர் பெட்ரோல் ஆகுது.

என்னை சந்தித்த திருப்பூர் தே.மு.தி.க நண்பர் ( கூட பள்ளியில் படித்தவர் ) என்னை மாதிரி படித்த ஆட்கள் தான் அரசியலுக்கு வர வைக்கிறாராம்!

அடுத்த ட்ரிப் இனி தீபாவளிக்கு தான்!

நேற்றிரவு பலே பாண்டியா படம் நண்பரோடு பார்த்தேன். மிக இழுவை. உட்கார முடியலே. விஜய் டிவி சிங்கர்கள் தான் எல்லா பாடல்களும் பாடினார்களா? பாடகர்களும் திரையில்!

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

Wednesday, February 03, 2010

எழுத்துப்பணி

சொக்கன் எழுதிய இந்த பதிவை படித்தேன்...

பேஜர் கதை (’பேஜார்அல்ல)

//அடப்பாவிகளா, எனக்கு எதுக்குப் பேஜர்? அதுக்குப் பதிலா அஞ்சோ, பத்தோ கொடுத்தா டீ குடிக்க ஆவும்.//

முழு நேர எழுத்தாளர் இப்படி தான் சிந்திப்பாங்களோ?

எனக்கு எழுத தூண்டியது, சுஜாதா சிறுகதைக்கு "ஷ்... ஆ.. " (கல்கி என நினைவு) நான் எழுதிய பாராட்டு கடிதம், திருப்பூர் விஜயஷங்கர் என்ற பெயரில் வெளி வந்தது. ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த சமயம்... 1981 ... நண்பன் எல்.ஐ.சி சதீஸ் எழுத சொல்லி, நான் ஒரு ஐந்து பைசா கார்டில் அனுப்ப... பிறகு கையெழுத்து பிரதி "தூறல்" என்ற பெயரில் நடத்தி ( எழுதியவர் ஸ்ப்ரிங் நிட்டிங் கே. ஸ்ரீ சரவணன் ) சில இதழ்களில் நின்றது. பிறகு "சங்கமம்" என்ற பெயரில் ஒரே ஒரு இதழ் 1985 இல் வந்தது.

அந்த சமயம் என் முழு கவனம் தமிழ்,ஆங்கில டிபேட் மட்டும் தான். பல பரிசுகள் காலேஜ் வரை பெற்றேன். ( குத்தி காட்டுதல்... அதில் பழகியது )

1987 இல் ஜி.சி.டி யில் நடந்த தமிழ் மன்ற போட்டியில் கதை ( தலைப்பு மட்டும் கொடுத்தார்கள் - மருதானிக்கனவுகள் ), மற்றும் கவிதை போட்டியில் - ஏதோ ஒருபரிசு.

அதோடு சரி... பிறகு 2006 முதல் எழுத்துப்பணி ப்ளாகில்.

***

முக்கியமாக ஆறாம் வகுப்பு முதல், செயின்ட் ஜோசப்ஸ் திருப்பூர் பள்ளியில், தமிழ் நாடகங்கள் போட்ட அனுபவம் - நண்பர் சுந்தரவடிவேலு உடன் ( பணத்தின் லீலைகள் இரண்டு முறை மேடை ஏறியது ) - மறக்க முடியாதது. தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் நாடகங்கள் எழுதி இயக்கி நடித்தேன்!

***

அதே எல்.ஐ.சி சதீஸ் ( அவுங்க அப்பா பனி புரிந்த நிறுவனம்! ) தான் ஜோதிடம், கைரேகை குறித்து படிக்க தூண்டியவன் (ர்). திருப்பூர் லைப்ரரியில் பழியாக கிடந்த சமயங்கள் அதிகம்.

***

இப்போது திருப்பூர் பரிசல் கிருஷ்ணா கதை தொகுப்பு ஒன்று வருகிறது. சங்கர் நாராயணனும் ( கேபிள் சங்கர் ) ஒரு சிறுகதை தொகுப்பு போடுகிறார்.

வாழ்த்துக்கள்!

Thursday, July 30, 2009

தொழில்

நான் திருப்பூரில் பார்த்துள்ளேன். சில நேரங்களில் எந்த வேலையானாலும் ஒக்கே என்று வருவார்கள். மதுரை சைடிலிருந்து நிறைய இப்போ வருகிறார்கள் என கேள்வி. செய்யும் தொழில் என்று அதற்க்கு மட்டும் கற்றுவிட்டு, அதிலேயே காலம் தள்ளுவார்கள்.

வார சம்பளம் அந்த வாரத்தில் செலவாகும்.

வருடம் ஒரு போனஸ், ஊதிய உயர்வு. கந்து வட்டி செலவு. மனைவியும் வேலையில் என்று போகும் அவர்களின் வாழ்க்கை முறை.

குழந்தைகளை கூட பதினான்கு வயதில் இன்னொரு கம்பெனியில் சேர்த்துவிடுவார்கள். சிறிய கைகள் தேவை பனியன் அடுக்கி கட்ட.

ஸ்ட்ரயிக் என்று வந்தால், அவர்கள் பாடு திண்டாட்டம் தான்.

சிலர் வெளிநாடு ( துபாய் ) சென்று அதே பனியன் தொழில் செய்துள்ளார்கள். அந்த பணத்தை வைத்து பனியன் கான்ற்க்ட் தொழில் செய்து முன்னேறிய பலர் உண்டு.

தொழில்

நான் திருப்பூரில் பார்த்துள்ளேன். சில நேரங்களில் எந்த வேலையானாலும் ஒக்கே என்று வருவார்கள். மதுரை சைடிலிருந்து நிறைய இப்போ வருகிறார்கள் என கேள்வி. செய்யும் தொழில் என்று அதற்க்கு மட்டும் கற்றுவிட்டு, அதிலேயே காலம் தள்ளுவார்கள்.

வார சம்பளம் அந்த வாரத்தில் செலவாகும்.

வருடம் ஒரு போனஸ், ஊதிய உயர்வு. கந்து வட்டி செலவு. மனைவியும் வேலையில் என்று போகும் அவர்களின் வாழ்க்கை முறை.

குழந்தைகளை கூட பதினான்கு வயதில் இன்னொரு கம்பெனியில் சேர்த்துவிடுவார்கள். சிறிய கைகள் தேவை பனியன் அடுக்கி கட்ட.

ஸ்ட்ரயிக் என்று வந்தால், அவர்கள் பாடு திண்டாட்டம் தான்.

சிலர் வெளிநாடு ( துபாய் ) சென்று அதே பனியன் தொழில் செய்துள்ளார்கள். அந்த பணத்தை வைத்து பனியன் கான்ற்க்ட் தொழில் செய்து முன்னேறிய பலர் உண்டு.

Friday, May 08, 2009

பேருந்து பயணம்

நாங்கள் எங்கு சென்றாலும் கார் தான் என ஆகிவிட்ட நிலையில், பேருந்து மூலம் செல்லலாம் என்று எண்ணம் பெங்களூரில் வால்வோ பஸ் வந்த பிறகு நிகழ்வு ஆனது.

சென்ற வார இறுதியில் மெஜெஸ்டிக் வரையில் சென்று வந்தோம்.

ஒருவருக்கு இருபது ரூபாய். குழந்தைகள் உட்பட நான்கு பேருக்கு என்பது ரூபாய்.

அரக்கரை தொடங்கி மெஜெஸ்டிக் வரை பயணம்...

********

ப்லேஷ்பேக்...

அமெரிக்காவில் இருந்து திரும்பியவுடன், ஒரு முறை சாதா பஸ்ஸில் டரியல் செய்தோம்.... குமார பார்க் முதல் போஸ்ட் ஆபிஸ் வரை.... சந்தோசமாக ஆஹா என்று இருந்தோம்... போஸ்ட் ஆபிஸ் (ஜெனெரல்) அருகில் இறங்கியவுடன் தான் கவனித்தோம்... என் மனைவி பர்சில் இருந்த ஒரு குட்டி பர்சை பிக் பாக்கட்டில் தொலைத்து விட்டார். முன்னூற்றி சொச்சம் காலி. அடித்தவர் ஒரு காலேஜ் பெண்ணாக தான் இருக்கும்... பக்கத்தில் உட்கார்ந்தவர்.

நல்ல வேலை என் பாக்கட்டில் பர்ஸ் பாத்திரம்... சாளுக்கியாவில் சாப்பாடு எதோவென்று இறங்கியது... சினிமா பிளானும் கட். அந்த சமயத்தில், ஆட்டோ எடுத்து, அலங்கார் பிளாசா சென்றோம்.

அது முதல் பெங்களூரில் எங்கு சென்றாலும் ஆட்டோ தான். ( ஆகஸ்ட் 1999 இல் கார் வாங்கியவுடன், முடிந்த வரை கார் பயணம், சில இடங்களுக்கு கார் நிறுத்தம் ப்ராப்ளம் என்றபடியால் - அப்போதே சர்ச் ஸ்ட்ரீட் குளறுபடி தான் ).

திருப்பூருக்கு போனால் மட்டும், லோகல் ட்ரிப் பஸ். மனைவி ஊருக்கு போய் வருவது கார் தான் என்றாலும், சில சமயம், நான் வேண்டுமென்ற பஸ்சில் செல்ல ஆசைப்பட்டு செல்வோம்.

பஸ் பயணம் மீது ஒரு காதல் தான்...

நான்கு வருடம் நான் பி.எஸ்.ஜி டெக்கில் படித்த காலத்தில், தினமும் 1986 முதல் 1990 வரை, காலை ஏழு மணி பஸ் தான். சரியாக எட்டே காலுக்கு காலேஜ் வாசலில் இறக்கி விடுவார்கள். வீடு திரும்புவது, சாயந்திரம் ட்ரெயினில்... மதியம் வகுப்பு இல்லாவிட்டால், உடனே ஒரு மணி சி.டி.சி பஸ்!

பஸ் ஏறி உட்கார்ந்த வுடன் ஒரு மப்போடு தூக்கம் வரும். கண்டக்டர் சரியாக எழுப்பி விட்டுவிடுவார். கலங்கலான கண்களுடன், நன்றி கலந்த பார்வை செலுத்திவிட்டு இறங்குவேன்!

எக்சாம் சமயம் எல்லாம், திறந்து வைத்த புத்தகம், பாட்டு சத்தம் என படிப்பு. மதியம் எக்சாம் இருக்கும் சமயம், 12 மணிக்கு கிளம்பினால், இரண்டு மணி எக்சாம் எழுத சரியாக இருக்கும், மூன்று மணி நேரம் எழுதிவிட்டு ஆறு பத்து ட்ரெயின் பீளமேட்டில் பிடிப்பேன். ஒரு ரூபாய்க்கு வருத்த கப்பி சிப்ஸ் வாங்கினால் கொருக்கிக்கொண்டே ஒரு புத்தகம் படித்துக்கொண்டு, திருப்பூர் இறங்க எழேகால் ஆகும். பி.எஸ்.ஜி ஆர்ட்ஸ் மக்கள் சிலர் பழக்கமானது அப்படி தான். சில சமயம், சுஜாதா, சுபா, ராஜேஷ்குமார் புத்தகங்கள் துணைக்கு வரும்...

ஜி.ஆர்.ஈ., டோபுல், ஜி.மேட்., கேட் என எக்சாம் பேப்பர்கள் பற்றி பேசுவோம். அப்படி கிடைத்த ஒரு நண்பர், இப்போது என் மனைவியின் ஒன்று விட்ட தங்கை மாப்பிள்ளை. திருப்பூரில் நல்ல பணக்கார வியாபாரிகள், இப்போது கண்டுக்கொள்வதில்லை. கல்யாணம் சமயமும் தெரிந்ததாக காட்டிக்கொள்ளவில்லை. என்ன வீரா?

ஒரு முறை ஆறாம் செமஸ்டர் சமயம், அவினாஷி தாண்டி தெக்கலூர் அருகில் ஒரு பெரிய ஆக்சிடன்ட், 1989ம் வருடம். ஒரு மணி நேரம் வண்டி லேட். இரண்டரைக்கு தான் எக்சாம் ஹாலில் இருந்தேன். எப்படியோ அந்த பேப்பர் பாஸ் செய்தேன்...

****

நிகழ்காலம்,

அரக்கரை ஏறியவுடன், கடைசி சீட்டில் அமர்ந்துக்கொண்டோம். ஏசி காற்றில் குழந்தைகள் நன்றாக சந்தோஸித்தனர்! நல்ல வேலை பஸ்சில் பிக் பாக்கட்ஸ் இல்லை... ( இருக்கிறதா தெரியவில்லை )

அலங்கார் பிளாசா அருகில் இறங்கி சுற்றினோம்..... சில துணிகள், கண்டி ஸ்வீட்சில் காஜு பக்கோடா வாங்கினோம்.

மீண்டும், பத்து நிமிட நடை தூரத்தில், இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் 365 J ஏறி, வீடு சென்றடைந்தோம்!

என்ன இருந்தாலும் பேருந்து பயணம் மாதிரி கார் அல்லது ஆட்டோ பயணம் இருக்காது!

---

நன்றி
விஜயஷங்கர்
பெங்களூரு

Sunday, August 03, 2008

Who from Tirupur reading my blog?

If you are reading my blog from Tirupur or you are from Tirupur, please mail me at vijayashankar.india at gmail

Appreciate it.

I am looking online for Salman Harris, T V Sundaravadivelu, B Prakash, Aslam of Khader knitting and Muthukumar of SLR and many more....

There is one Dr.Srinivas I am looking for, who is son of Mr P Ramalingam, Ghee Merchant...

There is one Veera I am looking for with whom I shared the GRE and TOEFL books....

திருப்பூர் நண்பர்கள் மின்னஞ்சல் செய்யவும்.

Tuesday, July 15, 2008

கூடு விட்டு கூடு

கூடு விட்டு கூடு

15 ஜுலை 2068 10 AM

அவர்களுடைய ஹோண்டா அகார்ட் ஹேலீவேர்சொன் 2 மாக்ல் கோவைக்கு போய்க்கொண்டு இருந்தது.
கட்டிடங்கள் இடயே பெங்களுறு-ம்ய்சுறு டூவின் ஸிடீஸ், மேகங்கள் நடுவில் மறைய தொடங்கியது.

"மச்சான் கிரீன் பீஸ் மட்டும் இல்லாமெ போய் இருந்தால், ரெண்டு மரம் கூட மிச்சம் இருந்திருக்காது!" வசந்த் அதிர்ததான். "டர்ப்யுலெந்ஸ் போல! சரி ரெண்டு மாசமா ஓB அடிச்சு. இப்போ பாஸ் கேட்ட என்ன சொல்றது?".

"யுரேநீயம் எல்லாம் தீந்து போச்சு! பிளுடோனீம் வேஸ்ட் மட்டும் தான் இருக்கு. ஆத வெச்சு ஏதாவது பண்ணலாம்.
டைம் திராவெல் கண்டுபிடிச்சு, அடுத்த நூற்றாண்டுல என்ன பண்றங்கோனு, அல்லித்து வரலாம்." என்றான் சங்கர்.
" க்ரூட் ஆயில் சுத்தமா உருஞ்சி குடிசாச்சு. ஸோலார் பவர் மட்டும் தான் இருக்கு".

"டைம் த்ரவெல் எல்லாம் ரோம்போ பழசு டா" என்றான் வசந்த். "தலைவா உருப்பட்ட மாதிரி தான்.
பாஸ், ப்ராஜெக்ட் பண்ண சொல்லி இருக்கார். ஸூட்‌கேஸ் சைசூலே ப்லுடோநீயம் ந்யூக்லியர் பவர் ரியாக்டர் மாதிரி ஏதாவது பண்ணுவோம?" கோபித்து கொண்டான் வசந்த்.

அவனுக்கு இப்போதெல்லாம் ஸிக்ஸ்-ஸிக்ஸ் ஆறு ஓவர் அ ஸைட், க்ரிகெட் மாட்ச் தான் புடிக்குது,
"ஆம்பலெ பொம்பளெ மிக்ஸ்ட் டீம்! கொண்டாட்டம்!". "புதுசா கோழி குண்டு கேம், செம ஃபாஸ்டா பிகப் ஆகுதத டா". அவன் வாழ்க்கையே தனி!

"60 வருசம் முநதி, இது மாறி பேசி இருந்த, ஓ கே ம்..." சலித்து கொண்டான், சங்கர். "எலா மச்சான், ஒரு தடவை,
நாம படிச்சொமில்லெ பழையெ இந்திரா சௌந்தரராஜன் நாவெல் - கூடு விட்டு கூடு பாயுற மாதிரி.... ஏதாவது,
டெலிபோர்‌டிங் ப்ராஜெக்ட் பண்ணுவோம?".

வசந்த் துள்ளி குதித்தான். "ஸூபர் ஐடியா. க்வாஂன்டம் ஃபிஸிக்ஸ்ல ஓஷோ சொன்ன மாதிரி, கான‌ஸியீனஸ் எல்லாம், ரியல் ஆயிட்டு வருது.அத்த கஂனட்ரோல் பண்ற மாதிரி, லொள்ளு சமாசாரம் பண்ணுவோம்! கீதா ஒத்துக்கொள்வாளா?"

கீதா அவர்கள் இருவரை விட 20 வயது மூத்தவள். ப்ராஜெக்ட் டைரெக்டர். ஸ்ட்ரிக்ட். "42இல்லும், சும்மா சொல்லக்கூடாது. ரொம்ப இஂடெலிஜெஂட்!" வசந்த் பெருமி கொண்டான்.

"டிக்‌டேட் பன்றா. பத்து பாயஂன்ட் பவர் ஷொவிலே!" அவசரமாக சொன்னான்.

பீப் பீப்...

*****

10.15 AM

கோவை ஹெலிபோர்டில் அவர்கள் தரையை தொட்டு.... மெ து வா க



ங்கி
னார்
கள்!

இந்தியாவில் தொழில் வாரியாக ஸ்டேட் பெயர் வைத்திருந்தார்கள். மோடீ குழு பரிந்துரைபடி. பைழய நான்கு ஸௌத் ஸ்டேட்ஸ் இப்போது I.T. ஸ்டேட் ஆகி விட்டது. வெஸ்ட்ல் ஃபைனன்ஸ் ஸ்டேட். நார்தில் பாலிடிக்ஸ். ஈஸ்ட் ஃபோர்ஸ்.

"வாங்கோ டூ இன் ஒண்ணு சங்கர் & வசந்த், என்ன ம்யாடர்? முப்பது நிமிசம் தான் அப்ரூவ்ட் டைம். ப்ராஜெக்ட் டீடேல்ஸ் சொல்லுங்க. கிழடு, ரொம்ப மூசுடு மூடுல இருக்குது."

பவர் ஷொவில, தான் கையில் இருந்த பேனா போன்ற வஸ்துவை க்லிக் செய்து, ஒவ்வொரு பேஜ் ஆகா காட்டினான் சங்கர்.

இடேயில் வசந்த்தின் விவரிப்பு. விவரிப்பு!

அவளுக்கு அவனிடம் இருந்து கேட்டது எல்லாம் "ஸூபர் ஐடியா மாடம்" மட்டும் தான். "கொஞ்சம் விட்டால், மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்ஸ் கேட்க ஆரம்பித்து விடுவான் இவன்" மனதில் நினைத்து கொண்டாள், கீதா.

"ப்ராஜெக்ட் பண்ற மாதிரி தான் இருக்குது! ஆனா..." இழுத்தாள்.

"என்ன மேடம் ஏதாவது...." சங்கர் அவசரப்பட்டான், "அப்ரூவல் ப்ராப்லம்ஸ்?"

"நோ நோ" இருமி கொண்டாள் கீதா. "லைஃப் ஸைந்ஸஸ் டிபார்ட்‌மென்ட் அருணா சிங், கொஞ்சம் லைஃப் எக்ஸ்‌பெரிமெஂட் பதி கோடைவா. ஜாக்கிரதை."

"சரி உங்க டீம் மென்பர்ஸ் யார் யார். லிஸ்ட் கொடுங்க."

காஃபீ கப்ஸ் வந்தது. ஸிஂந்தெஸிஸ்ட் பேச்சில், ரோபோ கேட்டது "சக்கறை எவ்ளோ?"

வசந்த் சொன்னான் "வாங்கி பாத் கெடைகுமா?". ரோபோ "புரியவில்லை" என்றது. "மற்ற் ரெஸிபீஸ் எல்லாம் 2050லே க்யாந்ஸல்ட்!".

சங்கர் யோசித்து கொண்டே மெதுவாக பருகினான். "அருணா என்ன கேட்பாள்?".

*****
11 AM

விஜய் விறு விருப்போக வந்தார். 100 வயுது என்று சொல்ல முடியாது. ரெண்டு மூன்ற தடவை, இதய அறுவை அப்புறம் ஒரு பசியல்முக தூக்குப் மாத்திரம் தான்.
நூத்தி சொச்சம் கிலோ... ஸ்ஸ்ஸ்ஸ்.... பெருமூச்சு கொஞ்சம் அதிகம், பெருஸிக்கு.

அழகான அம்சமான நாற்பது வயது பெண் புயல் அருணா சிங், அவரோடு வந்தாள்.
"டியர் கீட்ஸ். ரெண்டு மாசமா பென்சூல என்ன தடுவிது இருந்தீங்க? இந்திய ஸூபர் பவர் ஆனதிலே இருந்து, இந்த பெரிக்கா (அமெரிக்காவை அப்படி தான் சொல்வார்) பசங்க, ஓவொரு மந்த்லீ மீட்டிங்கில் (2018ல இருந்த க்வார்டர் ரிஸல்ட்ஸ் போய் மஂத்லீ வந்தாச்சு) கொல்ரணுக பா. ஏதாவது புதுசா பண்ணனும்.
கம் ஆன் சொல்லுங்க" இருமிக் கொண்டார் விஜய்.

"கீதா எக்ஸ்‌ப்லேஂட் ஆல் பிஃபோர் கமிங் ஹியர்".

சங்கர் மீண்டும் ஒரு முறை, பவர் ஷோவீண் ஹாலொக்ர்யாஃப் டீஸ்ப்லயில், அந்தெ பத்து பேஜ் ஐ காட்டினான்.

விஜய் முகத்தில் சிறு சலனம் கூட இல்லை. "கீழடு ஃபேஸ் டக் உப் பண்ணுநாதில்ல் இருந்து, ஒண்ணுமே புரியேல. 60 வருசம் முன்னாடி வந்த
கமல் D10 மாதிரி. எவ்வளவு நேரம் தான் கண்ணை பார்த்து அர்த்தம் பண்றது?" கீசு கீசுதன் வஸந்த்.

"வொன்தேர்புள்" என்றாள் அருணா. அவள் முகத்தில் ஒரு புன்னகை. "ஸக்ஸெஸ் மச்சி. வூடு ஜூட்!" ஆனந்த பட்டான் வஸந்த். "அப்ரூவல்
கெதைசாசு!".

"கீட்ஸ், நீங்க சொல்றத பார்த்தால், நான் 2038இல் பண்ணுன ஒரு ஸ்மால் ப்ரோட டைப் ஞாபகம் வருது!. ப்ராஜெக்ட் திருப்பூர்.
இ வில் கிவ் இட் டு யூ." என்றார் விஜய். "ஜஸ்ட் அ டெலிபோர்ட் எக்ஸ்‌பெரிமெஂட்! கீதாவை ரிவைவ் பண்ண சொல்லி இருக்கேன்."

"சூர் ஸர்", சங்கர் சொன்னான். "எப்போ ஸ்டார்ட் பண்ணனும்?".

"இ வில் டேக் யூ டு த லாப்." கொஞ்சினாள் அருணா. "இட் இஸ் ஒன் ப்ராஜெக்ட் தட் ஐ வான்ட் டு ரிவைவ்!".

*******

5 PM

அந்த லாபீலே, அவர்கள் இருவர் மட்டும். பலவித கான்‌ட்ரொல்கல் பீப்பிட்டு கொண்டிருந்தன.

"ஓகே டா அந்த ப்ரோடடைப் ஃபிக்ஸ் பண்ணியாச்சு." வஸந்த் சந்தோசம் ஆனான். "கிரீன் லைட்!".

"மானுல்ல சொன்ன மாதிரி எல்லாம் ரெடீ" சங்கர் ஆனந்தித்தான். "GPSலெ கோ-ஆர்டிநேட்ஸ் செட் பண்னிட்டா, எஸ்கேப்!".
"இது சக்செஸ் பண்னிட்டா, நெக்ஸ்ட் ஸ்டெப், நாம டைம் கன்ட்ரோல் பண்ணலாம்!" என்றான் வசந்த் "ஃபாஸ்தேன் யுவர் ஸீட் பெல்ட், சங்கர்! ஒன்று, இரண்டு, மூன்று..."

"டாய் டாய்" அலறினான் சங்கர் "என்ன ஸ்விச் டா தொட்டே? உடம்பெலம் எறியுது. ஆ..."

இருவரும் மாறிக்கொண்டு இருந்தார்கள்....

******

15th July 2008 5.01 PM கோவை

அங்கே இரண்டு குருவிகள் பறந்து கொண்டு இருந்தன. சங்கருக்கும் வஸந்துக்கும், கீதாவோட குருவி ரெக்‌ரியாட்ஸ்ன் ப்ராஜெக்ட் பற்றி தெரிந்திருக்க நீயாயம் இல்லை.!

*********************************************************************************
Author's note:

I am in the அறிவியல் சிறுகதைப் போட்டி!

The idea was to participate in spirit. Sorry for any font issues and spellings. I use Firefox to the core, and http://quillpad.in/tamil to convert.

If you have tough time reading, please read the Tamlish version here ...

I am getting so many comments and I will post some good ones only! Sorry!