ஆம் மழை ஒரு சுகானுபவம். 
பெங்களூரில் கேட்கவே வேண்டாம்! 
எப்போது வேண்டுமானாலும் வரும். 
காரமாக சாப்பிட தோன்ற வைக்கும். 
இங்கு சிறிது மழையில் நனைந்தாலும், காய்ச்சல் வரும். நேற்று கடைக்கு சென்று வீடு திரும்புவதற்குள் தூறல்! என்ன செய்ய. சிறிது நனைந்தேன். ஆனந்தம் தான்!
 
 கோத்தகிரியில் இருந்த காலத்தில் நன்றாக மழையில் நனைவோம். பள்ளியில் வீடு திரும்பும் போது இது நடக்கும். சிற்சமயம், வீட்டில் அடி விழும். நன்றாக தைலம் தேய்த்து தூங்கவைப்பார்கள். 
 
 என்றும் மாறாத இனிமை மழை!
 
 இங்கு சிலரை பைக்கில் ரேயின்கொட்டோடு மழையில் நனைவதை பார்க்கிறேன்!
:-)
 
 
