Tuesday, October 09, 2012

திட்டமில்லாமல் வாழ்பவர்கள்

வாழ்க்கையில் அலட்டிக் கொள்ளாமல் அதிகம் சாதித்த மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் கடுமையாக உழைப்பது போல் பார்வைக்குத் தெரியாது. ஆனாலும் அவர்கள் நிறைய சாதனைகள் புரிந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் வாழ்க்கை முறையைக் கூர்ந்து பார்த்தால் அதற்கு காரணம் கண்டிப்பாக விளங்கும். அவர்கள் திட்டமிட்டு ஒரு ஒழுங்குமுறையுடன் செயல்படுபவர்களாக இருப்பார்கள்.
அந்தோணி ராபின்ஸ் என்ற பிரபல சுயமுன்னேற்ற எழுத்தாளர் திட்டமில்லாமல் வாழ்பவர்கள் நயாகரா சிண்ட்ரம் (The Niagara Syndrome) என்ற பிரச்னையில் கண்டிப்பாக ஒரு நாள் மாட்டிக் கொள்வார்கள் என்று கூறுகிறார். அந்தப் பிரச்னையில் திட்டமில்லா மனிதர்கள் எப்படி மாட்டிக் கொள்கிறார்கள் என்பதை அவர் வார்த்தைகளிலேயே பார்ப்போம்.
“வாழ்க்கையை ஒரு நதியாகச் சொல்லலாம். பெரும்பாலான மக்கள் எங்கே போய் முடிய வேண்டும் என்ற சிந்தனை இல்லாமலேயே அதில் குதித்து விடுகின்றனர். விரைவிலேயே வாழ்க்கை நதியின் அவ்வப்போதைய நீரோட்டத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். அப்போதைய நிகழ்வுகள், அப்போதைய பயங்கள், அப்போதைய சவால்களை எதிர்கொள்வதிலேயே அவர்கள் மும்முரமாக இருக்கிறார்கள். வாழ்க்கை நதியில் கிளைகள் வரும் போதும் அவர்கள் எந்தப் பக்கம் போவது என்றோ, எதில் செல்வது இலாபகரமானது என்றோ கவனம் கொடுத்து தீர்மானிப்பதில்லை. தானாக எதில் கொண்டு போய் விடுகிறதோ அதில் பயணிக்கிறார்கள். அதனால் அவர்கள் வாழ்க்கை அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. இப்படி அரை மயக்கத்தில் செல்லும் வாழ்க்கையிலிருந்து அவர்களைத் தட்டி எழுப்புவது தண்ணீர் ஆர்ப்பரித்து விழும் ஓசை தான். விழித்துக் கொள்ளும் போது தான் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு ஐந்தடி தூரத்தில் துடுப்பில்லாத படகில் வேகமாக வந்து கொண்டு இருப்பது தெரிகிறது. ஆனால் அந்த நேரத்து ஞானோதயம் காலம் கடந்ததாக இருந்து விடுகிறது. அந்த வீழ்ச்சியில் விழுந்தே தீர வேண்டியிருக்கிறது. அது உணர்ச்சிகளின் வீழ்ச்சியாக இருக்கலாம், ஆரோக்கியத்தின் வீழ்ச்சியாக இருக்கலாம், பொருளாதார வீழ்ச்சியாக இருக்கலாம். எதுவாக இருப்பினும் ஆரம்பத்திலேயே புத்திசாலித்தனமாக சரியான முடிவுகளைத் திட்டமிட்டு எடுத்திருந்தால் இதைக் கண்டிப்பாக தடுத்திருக்க முடியும்.”
திட்டமிடா விட்டாலும் வாழ்க்கை நகரத்தான் போகிறது. ஆனால் அது போகும் பாதை நமக்கு அனுகூலமாக இருக்கத்தான் வாய்ப்பில்லை. அந்தோணி ராபின்ஸ் கூறுவது போல அது ஏதோ ஒரு வீழ்ச்சியில் என்றோ ஒரு நாள் உங்களை வீழ்த்தக்கூடும். திட்டமில்லா மனிதர்களுக்குத் திறமையும், உழைப்பும், உற்சாகமும் பெரிதாக பயன்பட்டு விடப்போவதில்லை. காரணம் அவற்றைத் தக்க வைத்துக் கொள்வதில் அவர்கள் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. காட்டாறு போல பிரவாகம் எடுத்து வரும் அனைத்தும் கட்டுப்பாடான கரைகளுக்குள் இல்லாமல் கண்டபடி எல்லா பக்கங்களிலும் போவதால் சீக்கிரமே வடிந்து விடுகிறது. அதனால் ஒரு சமயத்தில் பிரம்மாண்டமாகத் தெரிகிற வளர்ச்சி இன்னொரு சமயத்தில் கண்ணிற்கே தென்படுவதில்லை.
திட்டமிடாதவர்கள் வாழ்க்கையை அவர்களைத் தவிர அனைவரும் தங்கள் விருப்பத்திற்கு நகர்த்துகிறார்கள். மற்ற சூழ்நிலைகளும் அவர்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. மற்ற மனிதர்களும் சூழ்நிலைகளும் தீர்மானிக்கும் போது அதை எதிர்க்கும் சக்தி திட்டமில்லா மனிதர்களுக்கு இருப்பதில்லை.
வாழ்க்கை என்ற நீண்ட ஓட்டத்தை விடுங்கள். ஒரு விடுமுறை நாள் என்ற குறுகிய காலம் கூட திட்டம் என்று ஒன்று இல்லா விட்டால் நமக்கு பயன்படும்படி அமைவதில்லை. அந்த நாளில் ஒரு பகுதியை வம்புப் பேச்சு கழித்து விட முடியும். இன்னொரு பகுதியை டிவி திருடிக் கொண்டு விட முடியும். இன்னொரு பகுதியைத் தேவையோ, உபயோகமோ இல்லாத இன்னொரு செயல் இழுத்துச் சென்று விட முடியும். மீதிப்பகுதியை சோம்பலோ, ஊர்சுற்றலோ எடுத்துக் கொண்டு விட முடியும்.
ஆனால் முன்கூட்டியே திட்டம் என்று ஒன்றிருக்குமானால், நாம் செய்ய வேண்டியவை இன்னதெல்லாம் என்று முன்கூட்டியே தீர்மானம் ஒன்று இருக்குமானால் அந்த நாளை மேலே சொன்ன எதுவும் நம்மிடம் இருந்து பிடுங்கிச் சென்று விட முடியாது. அதற்கான அவகாசத்தையே நாம் தந்து விடப் போவதில்லை.
திட்டமிட்டால் மட்டும் அப்படியேவா நடத்தி விட முடிகிறது என்ற நியாயமான கேள்வியைக் கேட்கலாம். நாம் ஒன்று நினைத்தால் நாம் சற்றும் எதிர்பாராத சூழ்நிலை அத்தனை திட்டத்தையும் பாழடிக்கிற மாதிரி வந்து சேரலாம். அது தான் வாழ்க்கையின் யதார்த்தமும். ஆனால் திட்டம் என்று ஒன்று இருக்கையில் அந்த சூழ்நிலையில் இருந்து எவ்வளவு வேகமாக வர முடியுமோ அந்த அளவு வேகமாக வெளியே வந்து விடுகிறோம். முன்னமே திட்டம் இட்ட சில வேலைகளையாவது செய்து முடிக்கிறோம்.
நமக்கு என்னவெல்லாம் ஆக வேண்டி இருக்கிறது, நம் வாழ்க்கை எந்தப்பாதையில் செல்ல வேண்டும் என்ற தெளிவு நமக்கு உறுதியாக இருக்குமானால் அது நம் தினசரி வாழ்க்கையிலேயே சிறு சிறு மாற்றங்களை அவ்வப்போது செய்ய வைக்கும். பாதை விலக ஆரம்பிக்கும் போதெல்லாம் ஆரம்பத்திலேயே உணர வைத்து மாற வைக்கும். தேவை இல்லாத, பயனில்லாத செயல்களில் இறங்க ஆரம்பத்திலேயே அனுமதிக்காது. நம் சக்தியையும், காலத்தையும் வீணாக்குவது மிக மிகக் குறையும். ஊர்வம்பில் சேர்வதற்கோ, அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பதற்கோ நம்மை அது விடாது. இப்படி நமக்கு பயன்படுவதற்கு மட்டுமல்லாமல் அடுத்தவரைத் தொந்திரவு செய்யாமல் இருப்பதற்கும் திட்டமிட்டு செயல்படுவது உதவும்.
திட்டமில்லாத மனிதர்கள் கடைசி நேரத்தில் பரபரப்பு காட்டுவார்கள். என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்கு கடைசி நேரத்தில் தான் உறைக்கும். நயாகரா சிண்ட்ரம் என்று அந்தோணி ராபின்ஸ் சொன்னது போல என்ன நிலவரம் என்பது வீழ்ச்சிக்கு முன்னால் தான் புரியும். அந்த நேரத்தில் என்ன தான் ஆர்ப்பாட்டம் செய்தாலும், அதிக வேகமும், செயல்திறனும் காட்டினாலும் அது பயன் தருவது மிக அபூர்வமே.
ஒரு நாளை, ஒரு வாரத்தை, ஒரு மாதத்தை, ஒரு வருடத்தை, மொத்த வாழ்க்கையை இப்படி இருக்க வேண்டும், இத்தனை சாதிக்க வேண்டும் என்று திட்டமிடுங்கள். உங்கள் திட்டம் நூறு சதவீதம் நிறைவேறாது. முன்பே சொன்னது போல நாம் நினைத்திராத எத்தனையோ தடைகளும், சூழ்நிலைகளும் வந்து சேரலாம். அதற்கென்று திட்டமே வேண்டாம் என்று முடிவு கட்டி  விடாதீர்கள். தடைகளைத் தாண்ட முடியுமா என்றும் சூழ்நிலைகளை மாற்ற முடியுமா என்றும் பாருங்கள். முடிந்தால் செய்யுங்கள். அப்போது தான் நம் திறமைகளே நமக்கு அறிமுகமாகும்.  அப்படி முடியா விட்டாலும் எவ்வளவு சீக்கிரம் அதிலிருந்து விடுபட்டு பழையபடி திட்டமிட்ட வாழ்க்கைக்கு வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திரும்பி வாருங்கள். செய்ய வேண்டியதைத் தொடர்ந்து செய்யுங்கள்.
திட்டமிடும் வாழ்க்கையில் 100 சதவீத வெற்றி கிடைக்காமல் போனாலும் சுமார் 60 சதவீத வெற்றியாவது கிடைக்கும். ஆனால் திட்டமே இல்லாத வாழ்க்கையில் ஒரு சதவீதம் கூட வெற்றி நமக்கு நிச்சயமல்ல. மேலும் திட்டமிட்டு வாழும் வாழ்க்கையில் எதிர்பார்த்த நன்மைகள் நினைத்த அளவுக்கு கிடைக்கா விட்டாலும் தீமைகள் கண்டிப்பாக விளைய வாய்ப்பே இல்லை. ஆனால் திட்டமிடாத வாழ்க்கையில் தீமையே அதிகம் விளையும். எனவே திட்டமிடுங்கள். வாழ்க்கையை ஒரு அர்த்தத்தோடு கொண்டு செல்லுங்கள். அப்படிச் செய்தீர்களானால் பின்னால் என்றும் நீங்கள் வருந்தக் காரணமிருக்காது.
நன்றி: -என்.கணேசன் – வல்லமை

மீள் குழப்பங்கள் 8

இன்று உணர்ந்த்தது காசு இல்லாதவன் அலப்பறை அதிகம். empty pot makes more noise.

so daytime earners are கஞ்ஞன்சஸ்? 

கிட்ஸ் கடி. பாய்சஸனா? விளையாட்டு கடி.

என்ன? எங்கே? 

என்ன ஆச்சு? சரத்பாபு குழுவில் NJ usa மேடை நாடகம் 1996 மறக்க முடியாது. பானுசந்தரும் இருந்தார் 

 a tweet is a proper tweet if it has 8 words minimum. rt's and replies not included. else total kekkepikke only

ஆன்லயினா லிங்க் ப்போடுங்க 

என் அண்ணன் பெண் பேர் ஜனனி . ராஜா ரசிகர்!

லச்சம் பெரும். மவுஸ் மாதிரி ஒன்னு என் கிட்டே இருக்கு 

ஈரோடு? நல்ல விலை கிட்டுமா

இங்கு வியாபாரம் பண்ணனும் 

அப்போ?

மேகி டின்னர் பிள்ளைகள் ஸாய்ஸ் 

கனகராஜ் என்பவர் ஒருத்தர் அங்கு தெரியும். வெப்சைட் விற்பனையாளர்

அப்ப அனு'தினம்' ஆசைப்பட்டபடி ஆடிடுவார் அண்ணன் 

பசங்க தவழுறது குறைவு

எவ்லொ வயது  ?

 என் மகன் 10 மாதத்தில் டிவி ஸ்டெண்ட் பிடித்து கார்டுன் பார்ப்பான்!

ஜோஸப் முதலியார் என்பவர் எங்க கோத்தகிரி துனிக்கடைக்கு பெட்ஷீட் சப்பளை பன்னுவார் #கருர் 

சென்னையில் மழை. யெஸ்!

திருப்பூர் பாதாளச்சாக்கடைகள் அமைக்க மக்களிடம் ஏன் வசூல்? 

கரடி ரயில் டில்லி

கடுமை டுனியா மையாள் 

சாருலதா கன்னட படம் , தமிழில் நன்றாக ஓடுதாம். இப்போ தெலுகிலும், மலையாளத்திலும் டப் ஆகிறது. 

டொண்ட் கோ. ஜஸ்ட் கால்.

போர்க்களம் என்று ஒரு படம் முதலில் இதே கதை 

2012ல் உலகம் அழியும் என சொல்பவர்க்ளை அழிக்கனும் . ஜோக்.

மர உச்சி 

விஜய் பெஸ்ட்

 டை. சூப்பர் ஒவர்.

வூட்லெ இல்லையா 

இது ஸில்க் பொர்ட் உனவகமா  ?

கரக்ட்! நாங்க எப்போதும் 2 ப்ளேட். பட்டர் நான் ஸூப்பர். கிறேவி அளவு கம்மி. #புரட்டாசி பாவம் விட்டுட்டேன் 

வீட்டு பாடம் செய்ய வைத்து கொல்கிறார்கள் என் இரண்டு பிள்ளைகள் 

spb கட்சேரியில் 1995-98 கவனித்தது - தென்னகம் வரும் ! தமிழ் மட்டுமல்ல! 30$

சென்னையில் ரவா தோசை என்ட்றாலே வெங்காயத்தோடு வரும். பெங்களுரில் தனி. விலை கூட.

கனகனக்கும் மனியோசை மாதிரி தமிழா 

இல்லைங்க. மிடில் யெஜ் 30-45, கரக்டா இருக்கும்

உணவிர்க்காக சின்ன வீடு வைத்துக்கொல்லடி தமிழா!

மேகமலை பாக்கோனும். தேனி கம்பம் பார்த்த னாபகம் 

டு ய்உ ஹாவ் எனி அக்ரிமென்ட்? 5% இஸ் னார்ம்

உள்ளுர் வசதிகள் தனி. சென்னை பார்டரில் இறஙகினால் எனி வன்டி என்று மாத்ரனும் 

ரிடர்ன் பாலிசி பாத்தீங்களா?

வாழ்த்து தெரிவிப்பது கட்டாயம் என்றது சினிமா பால பாடம் :-) 

காரைக்காலில் தங்கவும். லொகல் ஆட்டோ. வி ஐ பி 100 ரு டிக்கட்டில் குடும்பம் தரிசிக்கலாம் அர்சனை உட்பட

டெய்லி பஸ் பாஸ் எடுத்தா எங்கே வேனா ஏறி இறங்கலாம் 

வார்த்தைகளும் !

 பணம் வராது என்ட்ரால் ட்ராப் அவசியம்

எப்போது ப்ரஜெக்ட் முடித்தாலும் roi அனாலிஸஸ் செய்வது அவசியம். கடைசி ஒன்று 9 மடங்கு பிஸ்னஸ் அதிகம் பெற்றது 

அமெரிக்கர்கள் அதுவும் யூதர்கள் எப்போது வேன்டுமானலும் டராப் பண்ணுவாங்கோ.

வீட்டுக்கு வரமாட்டாங்களா. இங்கு உண்டு. 250 ரு போலிஸ் கையூட்டு 

மால்களின் பலசரக்கு சுத்தம். விலை குறைவு. வீட்டிர்க்கே டெலிவரி

2, ஒர் போட்டி இருக்கும் 

மல்டிமிக்ஸ் வேணும்

தங்கள் இல்லத்தில? வயது வித்தியாசம் அதிகம் ஆனால் சூப்பர் 

என்ன ஸ்பெஸல்?

4 ஒர் வகையில் முதலாளி தொழிலாளி போல். எம்.ஜி.ஆர் + நாகேஸ் மாறி 

தோழர் உங்க பதில் பிடிச்சிருக்கு. காமடியொடு பாடல்கள். முரண்தொடை.

கxடப்பட்டு IDAY என்றெல்லாம் சங்கேதமாக ட்வட்டர் விடுதலை என்றேன்

பேச்சிலர்ஸ் கடுப்பேத்தாதீங்க.

நங்கெ ஊட்டி வர்க்கி பேக்கு! பெங்களுரிலி எல்லி? 

Where do I get OOTY varkey in Bangalore? ready to pay rs 200/kg

பெரிய மண்டை  !

(த)டுமாரொ இன்டியா. @ icct20 , சனி விடாது. கெப்டென் மாறுவார்.

என்ன ஆள் வெளியூரா? காண்லெ. #அனைத்து வசதி மீன்ஸ் காடு உண்டு 

வீடு எவடெ ? #ஏரியா

"ஒரு "COMPOUND sentence" சொல்லுடா! "STICK NO BILLS""

dont sleep. அதுக்கு தான். 

ஈஸ் இட் தமிழ் பிக்சர்? தமிழே வர்லியே... " லன்டன் கதை. அப்படித்தான்!

ஸார் யாராவது பாடி தூங்கிடாதீங்க! :-) 

தனியா படம் பாக்குறாரு! பயமா இருக்குதாம் :-)

நேற்று இண்டியா. இன்று வெஸ்ட் இண்டீஸ். பிக்ஸ்ட். 

திருப்பூர்ல இருப்பதே ஆறு பேர்தான் டுவிட்டர்ல" பரிசல் மட்டுமே!

உ இண் அணதர் ஐடி? 

கவலைத்தடம் - வினையெச்சம். superlative verb.

பெஸ்டு க்விட்டு ஜாப்பு . டேக்கு பெட்ஸீட் மட்டும். 

நன்பர் ஒருவர் டைவர்ஸ் அப்ளை செய்ய தேதி பார்க்க சொன்னார் ஜாதகப்படி. இப்படியும் உலகம்.

பாவம் tl லெ ஆள் இல்லெ 

மெண்டர்சிப் ஒரு கலை. இது வரை எனக்கில்லை. ரிடயர்ட்!

இன்று பாக்கிஸ்தான். படம் பார்ப்போம். கிரிக்கெட் வேஸ்ட். 

தெலுகு நன்பர் ஒருவர் 2 வீடு மெய்ன்டெய்ன் பன்றார். முதல் டாக்டர். அடுத்து சாப்ட்வெர். ரியல் எஸ்டேட் தொழில். ஸெம தில்

கண்ணு படும். இரு வேறு வீடு. sw from kerala. லன்ச் மதியம் டாக்டர் வீட்டில். 4 பிள்ளைகள் மொத்தம். எல்லாரும். :-) வாழ்வு. 

உண்மை ! last 1 hr my wife was pulling my legs! மல்லுத்தமிழ் அழகு! சிலருக்கு மச்சம்.

ஹாப்பி பார்த்டே கயல். கேக் எங்கே? 

என்னமோ சொட்டை தொப்பை வாழ்க்கையில் இல்லாத கெரன்டி இருக்கிற மாரி

திருப்பூரிலிருந்து கல்ப் சென்ற சிலர் 5வருடமாகியும் திரும்பவில்லை. கடமை. தேவை. நானும் பார்த்தேன்.

அதுவும் அழகு! அவுங்க பேர் என்ன? 

அது மாதிரி சொல்லி தான் இன்டியா திரும்பினேன் :-) usa மிஸ்டு மீ! இன்னும் செட்டில் ஆகலே!

தேவர்கள் இன்னும் ஆடவில்லை. :-) 

வேலையில் இருந்தால் மாப்பிள்ளை! ஸூர்.

உண்மையா?

ஒரு காலத்தில் சேட்ல எல்லோருக்கும் ஹிக்ஸ் அண்ட் கிஸ்ஸஸ் போட்ட அம்மனி. 

வாட் இஸ் யுவர் நேம் ரியலி

காண்டி ஜெயண்தி ஸ்பெஸல். ஸார் . 

பர்சில் காந்தி தண்மானத்தை ஸொள்கிறார். 

அநியாயமாக தனியார் கல்லூரிகளில் நடக்கும் டொனேசன் வேட்டைகளை எப்போது கட்டுப்படுத்துவார்கள்?

20 முதல் 40 வரை ஒவ்வொரு மெடிகல் சீட்டுக்கும்... மேனேஜ்மென்ட் கோட்டா. கோவை பி.எஸ்.ஜி. 2009-2010

எனக்கு இந்த வெப்சைட் பிடிச்சிருக்கு. ரசிச்சு எடுத்திருகான்யா போட்டோவை.

கடைசி போட்டோ கோணங்கியின் குடும்பமா? எந்த ஊரு? 

கருப்பு துனி எரிப்பார்கள். அனிவதில்லை.

எங்கள் கோத்திரத்தில் (உட்குலம்) அணிவதில்லை. எங்கள் பீட குரு அறிவுறுத்தல். 

காவேரி தீவிரவாதிகள் கொட்டம் என்று அடங்குமோ! மழையால் மாண்டியா கிராமங்கள் வெள்ளத்தில். தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட அழுகை

SC சொன்ன டிஎம்சி விட ஒன்றிரண்டு அதிகம் திறந்து விட்டால் தான் கால்வாய்கள் வெள்ளமில்லாமல் இருக்கும் காவேரி பேசினில். PWD நண்பர் சொன்னது.

கர்நாடகாவில் எட்டு டேம்கள் நிரம்பி வழிகின்றன. எப்போதும் போல இல்லாமல் அதிக அளவு தண்ணீர் தேக்கம். நில அதிர்வு அபாயம் மைசூரில். 

சிறுமுகை சத்தி வழியில் இருக்கும் பவானிசாகர் கால்வாய் நீர் லாரிகள் கழுவத்தான் பயன்படுகின்றன. விவசாயம் யாரும் செய்வதில்லை.

இந்த வாரமும் ஹோசூர் சென்று வருவது இந்த காவேரித்தாயின் கட்டளையால் நின்றுவிட்டது. பிழைக்க விடமாடாங்கோ. 

யாரை சொல்றீங்க? 

இண்டைய சாப்ட்டு மெனு ரெண்டு வடை, ஒரு செட் தோசை.

புரட்டாசி விரதம் பற்றி நண்பர் சொன்னது. கோழி ஆடு போன்றவைகள் பிரீடிங் சீசனாம். கோழி முட்டை போடும், ஆடு குட்டிகள் பிறக்கும் சமயமாம். 

நீங்கள் இரண்டாம் வலம் சென்னையில் (கோலிவுடில்) வரப்போகிறீர்கள் என பட்சி சொல்லுது.

mind over matter! மெடிகல் என்ட்ரன்ஸ் படிப்பு மேற்றியல் வருடம் ரூ.50000 ( ஏழாம் வகுப்பு முதல் ). 

நினைத்த மாத்திரத்தில் அந்த கோவில் போக முடியாது என்பது ஐதீகம். :-) நீங்கள் சொன்னவர்கள் இந்தியர்களா?

ஐதீகம் உண்மையாயிற்று. ஒருவர் உள்ளே செல்லவில்லை. எங்கள் குடும்பம் செல்லும் போதெல்லாம், பெண்ணாவது வெளியில் நிற்பார். ப்ராப்தம்

இன்று பவரும் தள்ளு முள்ளு தான்.

முதல் மூன்று ரேங்குக்கு பீஸ் வேயவர் என்றார்கள். இன்னும் தரவில்லை என் பிள்ளைகள் பள்ளியில். வாழ்கையே மார்கெடிங். 

நவகிிரஹத்தில் குருவுக்கு சிவப்பு. எங்கே மஞ்ஜள்?

அட கன்னடத்திலும் பெயர் ஒன்று தான்.

ஒரு ட்ரிப் முடிந்து திரும்பியப்பிறகு, அடுத்த ற்றிப்பிற்கு, டாலர் ஷாப்பில் டீல்ஸ் பார்க்கும் நமது தேசி கதை இந்த காலத்தில் எப்படி? 

பரிகார பூஜை.

இந்த முறை ப ஜ க ஒர் தமிழர்க்கு பிரதமர் பதவி கொடுக்கணும்! 

ஒருவரின் பழமை சோக கதைகளை படித்தால் அபூர்வமாக இருகின்றது. இதற்கும் வெளிநாடு என்று செட்டில் ஆனவர்கள். நாங்க கோவைக்கு அலைகிறோம்

சந்தோசமாக இருகின்றீர்கள்!

ஆள் மேய்க்கும் வேலை கோவையில் தேவை. ஆபரேசன் டைப். 20 வருட IT கஷ்டம். இனி ரிலேக்ஸ்! 

ஸீரியல் டயம்!

கருருக்கு டிவி யுபிஎஸ் பார்சல். :-) 23900 apc 8 hrs 

நமது தேசி கதை






Monday, October 08, 2012

LESS

Life today has become So "LESS"
Phone Cordless
Cooking Fireless
Food Fatless
Dress Sleeveless
Youth Jobless
Leaders Shameless
Govt Hopeless
Job Thankless
Police Clueless
Policies Aimless
Conduct Worthless
Relations Meaningless
Attitude Careless
Feelings Heartless
Education Valueless
Arguments Baseless
Days Restless
Nights Sleepless
Future: Directionless
&
Still The Expectations Are ENDLESS
Have A Happy time With A Cup Of Tea Sugarless......