Showing posts with label ஊழல். Show all posts
Showing posts with label ஊழல். Show all posts

Thursday, October 13, 2011

ஊழல்

அரசாங்கத்தில் பங்கு பெரும் மக்கள் தொடர்ச்சியாக ஒரு பொறுப்பில் இருந்துக்கொண்டு இருந்தால் இந்த நிலைமை வரும். அமெரிக்காவில் இரு முறைக்கு மேல் எந்த பொறுப்பிலும் (அதே பதவி) இருக்க முடியாது. அந்த மாதிரி இருந்தால் இந்தியா உருப்படும். என்ன மனைவி மக்களுக்கும் அந்த பதவி வராது என்று இருக்கணும். புடின் ரஷ்யாவில் மீண்டும் ப்ரெசிடென்ட் ஆவதற்கு நடைமுறை கொண்டு வந்துள்ளார். எங்கு போகிறது மக்களாட்சி?  சர்டிபிகேட் வாங்க கமிசன் லஞ்சம் முறைக்கு பதிலாக தட்கல் ( ரயில்வே போல) அவசரம் கருதி அதிக பணம் கொடுத்து வாங்கும் முறை செயல்படுத்தலாம். அரசாங்க ஊழியர்களுக்கு நல்ல சம்பளமும், இலவச மருத்துவமும் (எந்த ஆஸ்பத்திரியிலும்) அவர்கள் குழந்தைகளுக்கு எந்த பள்ளியிலும் இலவச கல்வி என்பது வந்து விட்டால், எல்லோருக்கும் எல்லாம் என்ற நல்ல நிலை வரும்.  நான் கம்ப்யுனிஸ்ட் இல்லை.