இப்பொழுதெல்லாம் செய்திகள் அனைத்தும் துபாய் பற்றி தான்... வெறுங்கையில் முழம் போடுவது என்று சொல்லுவார்கள்... அதனால் தான் அறுபது பில்லியன் யு.எஸ். டாலர்கள் கடனில் தத்தளிக்கிறது அந்நாடு. எண்ணெய் வளம் இல்லாத நாடு துபாய். அபுதாபி, ரஸ் அல் கைமாஹ் மட்டும் தான் எண்ணெய் வளத்தில் வாழ்கின்றன. ப்ரீ ட்ரேட் ஜோன் வைத்து பணம் பண்ணுகிறார்கள். எல்லாம் ரியல் எஸ்டேட் மாயம். ஷாபிங் வித்தை. சந்தை.
சென்ற முறை துபாய் சென்ற போது கவனித்தது, மூன்று மாத டூரிஸ்ட் விசாவில் திருட்டு டிவிடி விற்க வரும் தாய்லாந்த் பெண்கள்... வேறு வேலைக்கு வரும் ரஷ்ய பெண்கள்... டூரிஸ்ட் விசாவில் வந்து தங்கி வேலை பார்க்கு தெலுங்கு அன்னையாக்கள்...
நான் சிறிது காலம் வேலை செய்த அலுவலகத்தின் ஊழியர், ஒரு பெண் ( ப்ரோக்ராம்மர் ) சார்ஜாவில் தங்கி, துபாயில் வேலை பார்த்து விட்டு, இரண்டு மணி நேரம் இரண்டு குழைந்தைகளுக்கு டூஷன் சொல்லிக்கொடுத்துவிட்டு, வீடு திரும்புவார். எல்லாம் சீக்கிரம் இந்தியா திரும்பலாம் என்று எண்ணத்தில் தான் என்றார்! கணவர் கன்ஸ்ட்ரக்சன் இஞ்சினீர்.
அவர்கள் வீட்டில் சிறு வயதில் விதவையான அத்தை தான். குழந்தைகள் கவனித்துக்கொண்டு வீட்டு வேலைகள் பார்த்தபடி இருந்தார்.
இப்போது நடக்கும் துபாய் திவால் நிலை, நிறைய பேருக்கு வேலை இல்லாமல் செய்கிறது... கத்தார் பஹரின் சென்று விட்டார்கள்.
***
நண்பர் ஒருவர் பதினைந்து வருடம் அங்கு குடும்பத்தோடு வாழ்ந்தவர், இப்போது ஒரு கன்சல்டண்டாக ( இரு நிலைகள் கீழ் ) கத்தாருக்கு பயணமாகிவிட்டார்! குழந்தைகள் எப்படியோ படிக்க வைக்கிறார்!
நல்ல நிலையில் இருந்து கீழே வருவது மிகவும் கொடியது!
இருக்கும் போதே சிக்கனத்தோடு வாழ்வது நல்லது.