Friday, May 08, 2009

அலைகளும் நிலாவும்

அலைகள் ஆர்ப்பரிக்கின்றன
கடற்கரை மீது படர்கிறது
நிலா எழுகிறது
நோகாமல் பிரிக்கிறது

நீ நடந்த
கால் தடங்களை
அழிக்காமல் இருக்கவா
நிலா செய்தது பெண்ணே?

காண கண்டேன் அற்புத காட்சி
நிலா மீண்டும் வரும் முன்
மீண்டும் ஒரு முறை
மெல்ல நடந்துவிடு!

பேருந்து பயணம்

நாங்கள் எங்கு சென்றாலும் கார் தான் என ஆகிவிட்ட நிலையில், பேருந்து மூலம் செல்லலாம் என்று எண்ணம் பெங்களூரில் வால்வோ பஸ் வந்த பிறகு நிகழ்வு ஆனது.

சென்ற வார இறுதியில் மெஜெஸ்டிக் வரையில் சென்று வந்தோம்.

ஒருவருக்கு இருபது ரூபாய். குழந்தைகள் உட்பட நான்கு பேருக்கு என்பது ரூபாய்.

அரக்கரை தொடங்கி மெஜெஸ்டிக் வரை பயணம்...

********

ப்லேஷ்பேக்...

அமெரிக்காவில் இருந்து திரும்பியவுடன், ஒரு முறை சாதா பஸ்ஸில் டரியல் செய்தோம்.... குமார பார்க் முதல் போஸ்ட் ஆபிஸ் வரை.... சந்தோசமாக ஆஹா என்று இருந்தோம்... போஸ்ட் ஆபிஸ் (ஜெனெரல்) அருகில் இறங்கியவுடன் தான் கவனித்தோம்... என் மனைவி பர்சில் இருந்த ஒரு குட்டி பர்சை பிக் பாக்கட்டில் தொலைத்து விட்டார். முன்னூற்றி சொச்சம் காலி. அடித்தவர் ஒரு காலேஜ் பெண்ணாக தான் இருக்கும்... பக்கத்தில் உட்கார்ந்தவர்.

நல்ல வேலை என் பாக்கட்டில் பர்ஸ் பாத்திரம்... சாளுக்கியாவில் சாப்பாடு எதோவென்று இறங்கியது... சினிமா பிளானும் கட். அந்த சமயத்தில், ஆட்டோ எடுத்து, அலங்கார் பிளாசா சென்றோம்.

அது முதல் பெங்களூரில் எங்கு சென்றாலும் ஆட்டோ தான். ( ஆகஸ்ட் 1999 இல் கார் வாங்கியவுடன், முடிந்த வரை கார் பயணம், சில இடங்களுக்கு கார் நிறுத்தம் ப்ராப்ளம் என்றபடியால் - அப்போதே சர்ச் ஸ்ட்ரீட் குளறுபடி தான் ).

திருப்பூருக்கு போனால் மட்டும், லோகல் ட்ரிப் பஸ். மனைவி ஊருக்கு போய் வருவது கார் தான் என்றாலும், சில சமயம், நான் வேண்டுமென்ற பஸ்சில் செல்ல ஆசைப்பட்டு செல்வோம்.

பஸ் பயணம் மீது ஒரு காதல் தான்...

நான்கு வருடம் நான் பி.எஸ்.ஜி டெக்கில் படித்த காலத்தில், தினமும் 1986 முதல் 1990 வரை, காலை ஏழு மணி பஸ் தான். சரியாக எட்டே காலுக்கு காலேஜ் வாசலில் இறக்கி விடுவார்கள். வீடு திரும்புவது, சாயந்திரம் ட்ரெயினில்... மதியம் வகுப்பு இல்லாவிட்டால், உடனே ஒரு மணி சி.டி.சி பஸ்!

பஸ் ஏறி உட்கார்ந்த வுடன் ஒரு மப்போடு தூக்கம் வரும். கண்டக்டர் சரியாக எழுப்பி விட்டுவிடுவார். கலங்கலான கண்களுடன், நன்றி கலந்த பார்வை செலுத்திவிட்டு இறங்குவேன்!

எக்சாம் சமயம் எல்லாம், திறந்து வைத்த புத்தகம், பாட்டு சத்தம் என படிப்பு. மதியம் எக்சாம் இருக்கும் சமயம், 12 மணிக்கு கிளம்பினால், இரண்டு மணி எக்சாம் எழுத சரியாக இருக்கும், மூன்று மணி நேரம் எழுதிவிட்டு ஆறு பத்து ட்ரெயின் பீளமேட்டில் பிடிப்பேன். ஒரு ரூபாய்க்கு வருத்த கப்பி சிப்ஸ் வாங்கினால் கொருக்கிக்கொண்டே ஒரு புத்தகம் படித்துக்கொண்டு, திருப்பூர் இறங்க எழேகால் ஆகும். பி.எஸ்.ஜி ஆர்ட்ஸ் மக்கள் சிலர் பழக்கமானது அப்படி தான். சில சமயம், சுஜாதா, சுபா, ராஜேஷ்குமார் புத்தகங்கள் துணைக்கு வரும்...

ஜி.ஆர்.ஈ., டோபுல், ஜி.மேட்., கேட் என எக்சாம் பேப்பர்கள் பற்றி பேசுவோம். அப்படி கிடைத்த ஒரு நண்பர், இப்போது என் மனைவியின் ஒன்று விட்ட தங்கை மாப்பிள்ளை. திருப்பூரில் நல்ல பணக்கார வியாபாரிகள், இப்போது கண்டுக்கொள்வதில்லை. கல்யாணம் சமயமும் தெரிந்ததாக காட்டிக்கொள்ளவில்லை. என்ன வீரா?

ஒரு முறை ஆறாம் செமஸ்டர் சமயம், அவினாஷி தாண்டி தெக்கலூர் அருகில் ஒரு பெரிய ஆக்சிடன்ட், 1989ம் வருடம். ஒரு மணி நேரம் வண்டி லேட். இரண்டரைக்கு தான் எக்சாம் ஹாலில் இருந்தேன். எப்படியோ அந்த பேப்பர் பாஸ் செய்தேன்...

****

நிகழ்காலம்,

அரக்கரை ஏறியவுடன், கடைசி சீட்டில் அமர்ந்துக்கொண்டோம். ஏசி காற்றில் குழந்தைகள் நன்றாக சந்தோஸித்தனர்! நல்ல வேலை பஸ்சில் பிக் பாக்கட்ஸ் இல்லை... ( இருக்கிறதா தெரியவில்லை )

அலங்கார் பிளாசா அருகில் இறங்கி சுற்றினோம்..... சில துணிகள், கண்டி ஸ்வீட்சில் காஜு பக்கோடா வாங்கினோம்.

மீண்டும், பத்து நிமிட நடை தூரத்தில், இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் 365 J ஏறி, வீடு சென்றடைந்தோம்!

என்ன இருந்தாலும் பேருந்து பயணம் மாதிரி கார் அல்லது ஆட்டோ பயணம் இருக்காது!

---

நன்றி
விஜயஷங்கர்
பெங்களூரு

எழுத்துப்பணி

எழுத்துப்பணி இரு வகை... ஜனரஞ்சகம் மற்றும் மாற்று பாணி. இரண்டிலும் வாசகர் பார்வைக்கு தான் (வேண்டி விரும்பி செல்கிறது).

இருபத்தைந்து வருடம் முன்னாள், ராஜேஷ்குமார், சுபா போன்றோர் எழுதும் க்ரைம் நாவல்கள் விடாமல் படித்தேன். சுஜாதா பின் ஒரு தாக்குதல் ஏற்படுத்தினார். கம்ப்யுட்டர் துறை பற்றி விரிவாக அவர் எழுதியது, நான் எட்டாம் வகுப்பு படித்த சமயம் 1981 - 82.

சிலர் எழுத்தார்கள், எதோ எழுத வேண்டும் என்று எழுதுகிறார்கள். சிலர், வாசகர் திருப்திக்காக எழுதுகிறார்கள்.

நான் எழுதும் வகை, என் மன அலைகளை சொல்லும் விதம்...

பகிர்வுகள்...

இப்போது சில காரணங்களினால், நிறைய நேரம் ( கட்டுகோப்பாக செலவு செய்ய முடியவில்லை ) உள்ளது...

நல்லபடியாக சில பகிர்வுகளை தொடரவேண்டும் என்பது ஆவல்.

எல்லோருக்கும் பிடித்த மாதிரி எழுதும் ஜனரஞ்சக படைப்புக்கள், வார பத்திரிக்கையில் தான் வருகின்றனவே.

இணையத்தில் ஷொர்ட் அண்ட் ஸ்வீட் பத்தி எழுத்துக்கள் தான் பிரபலம்.

Thursday, May 07, 2009

உங்கள் கவிதைகள்

திரு. மனுஷ்யபுத்திரன்

உங்கள் கவிதைகள் ஐந்து ஒரு தளத்தில் படித்தேன். நன்று. ஒரு அனுமாச்ய அமைதி எற்படுதியிருப்பவை அவை. நான் 1989 சமயம், பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில், மண்டைக்காட்டு கலவரங்கள் பற்றி எழுதி பரிசு பெற்றது ஞாபகம் வந்து நிற்கின்றது...

எனக்கு புரியாத விஷயம்... தமிழ் பேசும் ஒரே உறவு காரணமாக, ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு சப்போர்ட் செய்வது கொஞ்சம் அபத்தமாக இருக்குது. அதை வைத்து பெரும் விசயமாக அரசியல் செய்வது, அதை விட அபத்தம்.  வருத்தமாக இருக்குது. நம் வீடு, நம் நாடு என்று பார்த்து, ஒரு நிலை அடைந்த பின், மற்றவர்களுக்கு அனுதாபப்படுவது தான் உலக நியதி.

ஒரு உதாரணம், விமானத்தில் ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டால் முதலில் நீங்கள் மாஸ்க்கை அணிந்துக்கொண்டு தான், பிறகு குழந்தைக்கு அணிவிக்க வேண்டும் என்கிறது ஆவணம்...

இன்னொரு உதாரணம், மலையேறுகிறார்கள் இருவர். எவரெஸ்ட் உச்சி அடைய ஒரு நிமிடம் இருக்கும் தருவாயில், ஒருவன் அவனது தவறால் கிழே விழ எத்தனிக்க, அவனை காப்பாற்றுவது நியாயமா, இல்லை இலக்கை எட்டுவது மனு நீதி தர்மமா? இல்லை அப்படியே காப்பாற்றினாலும், மலையேறும் சாஸ்திரப்படி, இருவர் எடையை ஒரு கயிறு தாங்காது... முயற்சி தேவையில்லை.

மேற்கூறிய சிறு கூற்று இப்போது நடக்கும் இலங்கை நிலைக்கும் பொருந்தும்.

ஆணவம், மக்கள் பணம் சூறையாடல் ( எதற்கு வேண்டும் பங்க்கரில் நீச்சல் குளம்? ) , போதை மருந்து கடத்தல், ஆள் கடத்தல் ( அசைலம் கேசுகள் ) , மகனுக்கு தலைமை பதவி... இப்படியிருக்கும் ஒரு வஞ்சக கூட்டம் தான் அவர்களுக்கு தீர்வா?

நார்வே மூலம், குறைந்த பட்சம், ஒரு மாநில அந்தஸ்து ( சுய ஆட்சி ) கிடைத்திருக்கும் வாய்ப்பையும் இழந்து தவிக்கின்றனர் தமிழர், அங்கு.

இப்போது இருக்கும் நிலைமை, அங்கு உள்நாட்டு பிரச்சனையை என்று காரணம், வேறு எந்த நாடும், தட்டி கேட்க்க முடியாது... அங்குள்ளவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்பது தான் பெரும் விஷயம் ஆகிறது.. ராஜபக்சே செய்வது நியாயம் இல்லை. பிணைக்கைதிகளை ( பரிதாப மக்களை ) பிடித்து வைத்திருக்கும் கூட்டம் செய்வதும் நியாயம் இல்லை.

மற்ற நாட்டில் ( கனடா, யுரோப் மற்றும் மலேசியா - சிங்கப்பூரை தவிர்த்து..) இருக்கும் தமிழரின் நிலைமையும் பரிதாபத்துக்குரியது...

--
நன்றி
விஜயஷங்கர்
பெங்களூர்