என்னைப்பற்றி.... சுவாரசியாமாயிருக்க... பார்க்கலாம்... விஜயசங்கர். Read about my thoughts in Tamil & English (some may call it ramblings).
Wednesday, February 10, 2010
பதிவர்களின் புத்தக வெளியீடு
பிரபல பதிவர்கள் கேபிள் சங்கரும், பரிசல்காரனும் தங்கள் புத்தகங்களை வெளியிடுகிறார்கள்.
இருவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
புத்தகங்கள் சலுகை விலையில் வாங்க இங்கே கிளிக்குங்கள்.
கேர்ட் ரைஸ் பதிவு + தமிழ் படம்
'தமிழ் படம்' (சினிமா) பார்த்த போது சிரித்த சிரிப்பு, ஜவர்லால் அவர்களின் "கேர்ட் ரைஸ்' பதிவு கொடுத்தது…
இங்கே படியுங்கள்
ஜொனபொன்டாவில் அட்வான்ஸ்ட் இங்க்லீஷ்
நான் ஜொனபொன்டா உடனே போய் ஆக வேண்டும்! ( மனதில் மின்னலடிக்குது 'வேட்டா' கோச்சிங் ஆபர்சுனிட்டி )
//நண்பர் விஜயசங்கர் ஆனந்த பவனில் எத்தனை நேரம் நின்றாரோ?//
காணும் பொங்கல் அன்று பரோட்டா மட்டும், சாதம் இல்லை கூட்டம் இல்லை!
குழந்தைகள் விருப்பம் – லேயர் லேயராக தமிழ்நாட்டில் தான் வரும், பெங்களூரில் அட்டை மாதிரி இருக்கும்!
சுட்டு வைத்தது பத்து நிமிடத்தில் சூடேற்றி வந்தது. என்ன ஐஸ் க்ரீம் தான் – பக்கத்து கடைக்கு சென்று வாங்கி வர லேட் செய்தார்கள்.
***
தமிழ் படம் மிகவும் ரசித்த மசாலா. பூர்ணிமா தியேட்டரில் சென்ற சனி சாயந்திரம் நாலரை மணி சோவுக்கு ( குடும்பத்தோடு ) சென்றோம். பக்கத்து கடையில் வாங்கிய வெஜ் பப்ஸ் , சிப்ஸ், தண்ணீர் பாட்டில் சகிதம் உள்ளே சென்றோம். எழு மணிக்கு வெளியே வந்து பார்க் செய்த ( ஒரே கார் ) எடுக்க - நூறு பைக்குகள் செல்லும் வரை வெயிட்டிங்.
அலை கடலென கூட்டம் இருக்கும் என்று பார்த்தால், பால்கனியில் நாங்கள் நால்வர் மட்டும்! குழந்தை இருவருக்கும் சேர்த்து ஒரு டிக்கட் தான்! ( மீண்டும் சென்னையில் டிஸ்கவுன்ட் டிக்கட் வாங்கிய ஞாபகம் ) ஐநாக்ஸில் இந்த ட்ரிக் செல்லாது!
படம் அட்டகாசம். மிர்ச்சி சிவா சூப்பராக நடிக்கிறார். வாய்ஸ் மாடுலேஷன் ஓவர். அந்த பவுலிங் பரதனாட்டியம் அருமை! ப்ளேஷ் பார்வர்ட் சைக்கிள் சுத்துவது, ஒ மகசியா பாடல் ( சுத்தம்... புரியாத சந்தங்கள்... ), வில்லன் ட்விஸ்ட் ( பாட்டி! ), ஒரு ஹீரோவையும் விட்டு வைக்கவில்லை. கொஞ்சம் தெலுங்கு ஹீரோகளையும் கலாய்துள்ளார்கள் ... அப்புறம் தேவை இல்லாத குத்து டேன்ஸ். அசிங்கம். ராமராஜன் நக்கல் - மேலே உள்ள படம் படத்தில் கட்டு. ராஜ்கிரண் நக்கல் ( சோலையம்மா... ) ... வில்லன்களை கொல்லும் விதம் - ஆங்கில ஸ்பூப் படத்தில் கூட இப்படி யோசித்து இருக்க மாட்டார்கள். வசனகர்த்த சந்துருவும் (ப்ளாகரான) , டைரக்டர் சி.எஸ்.அமுதனும் சூப்பர்.
ஒவ்வொரு சீனையும் அனுபவித்து எடுத்துள்ளார்கள்.
மொத்தத்தில் பாசை புரியாத அனைவருக்கும் புரியும் படம் தமிழ் படம். வெற்றி படம்.
Tuesday, February 09, 2010
ஜோதிடத்தின் உபயோகம்
பழைய தவறுகளை அலச இது ஒரு சமயம். அதன் காலத்தில் தவறு நேரா வண்ணம், எப்படி தடுப்பது என்பது மனம் சொல்லிக்கொடுக்கும்.
ஜோதிடம் தெரிந்தவர்கள், தங்கள் நேரத்தினை விலை மதிக்க முடியாத அளவு உதவி செய்ய வேண்டும். ஓசியில் டைம் வேஸ்ட் செய்பவர்களை தவிர்க்க பணம் சார்ஜ் செய்வது தவறில்லை. சொந்த அனுபவம்எனக்கு.
ஆனால் சிலர் கல், மாணிக்கம், ருத்திராட்சம் அணிந்தால் பெரிய பணக்காரன் ஆவீர்கள் என்று சொல்வது முட்டாள்தனம்! ( விற்பவர்கள் தான் பணக்காரர் ஆகிறார்கள் ). நம்பிக்கை மட்டும் கொடுத்தால், குறைந்த விலையில் எத்தணை மோதிரம் வேண்டுமானாலும் அணியுங்கள்.
ஊரில் சிக்கன்குனியா இருந்தால், வீட்டில் கொசுவர்த்தி சுருள் , ஹோமியோ மருந்து என்ற நாடுவது போல தான், ஜோதிடத்தை நாட வேண்டும்.