Friday, March 13, 2009

இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ

இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
சில கைகளினாலே கொய்யாப்பூ

இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யா பூ
சில கைகளினாலே கொய்யாப்பூ

இந்த வண்ணமகள் விழிகள் எனும் வேளை
கண்டு வர்ணணைகள் செய்வது என் வேலை
இந்த வண்ணமகள் விழிகள் எனும் வேளை
கண்டு வர்ணணைகள் செய்வது என் வேலை

தென்றல் மெல்ல மெல்ல நீந்துகின்ற மாளை
இவள் மார்ப்பினில் நான் ஏந்துகின்ற மாலை

இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
சில கைகளினாலே கொய்யாப்பூ

அந்த காமன் விடும் மலர்கனைகள் அஞ்சும்
இவள் கிட்ட நின்றால் பாய்வதற்க்கு அஞ்சும்
அந்த காமன் விடும் மலர்கனைகள் அஞ்சும்ம்ம்ம்
இவள் கிட்ட நின்றால் பாய்வதற்க்கு அஞ்சும்

இந்த கால்கள் மெல்ல உறவுகளை நாடி
கொஞ்சம் குதிகுதிக்கும் காதலனை நாடி

இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ

எந்தன் உள்ளம் எனும் சின்னஞ்சிறு பூவை
இன்ப கிள்ளி கிள்ளி பறித்துக்கொண்டப் பூவை
கை வில் அதனை வளைத்திருக்கும் நாணும்
இந்த மெல்லிதழால் புருவம் கொண்டாள் நாணும்

இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
சில கைகளினாலே கொய்யாப்பூ

Thursday, March 12, 2009

பூஜைக்கேத்த பூவிது

படம்: நீதானா அந்தக் குயில்
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: இளையராஜா& சித்ரா

...
பெ: பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது
பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
அட பூத்தது.. யாரத பாத்தது
ஆ: மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது
பெ: சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது
ஆ: கொக்கு ஒண்ணு கொக்கி போடுது.. ஹோய்..

பெ: பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது
...

ஆ: பாவாடை கட்டையில பாத்தேனே மச்சம்
ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம்
பெ: நோகாம பாத்துப்புட்ட வேறென்ன மிச்சம்
கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம்
ஆ: அச்சு வெல்லப் பேச்சுல ஆளத் தூக்குற
கொஞ்ச நேரம் பாருன்னா கூலி கேக்குற
பெ: துள்ளிப் போகும் புள்ளி மான மல்லு வேட்டி இழுக்குது
மாமன் பேசும் பேச்சக் கேட்டு வேப்பங்குச்சி இனிக்கிது

ஆ: பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது
...

பெ: ஊரெல்லாம் உன்னப் பத்தி வெறும் வாய மெல்ல
தோதாக யாருமில்ல தூது சொல்ல
ஆ: வாய் வார்த்தை பொம்பளைக்கி போதாது புள்ள
கண் ஜாடை போல ஒரு பாஷையில்ல
பெ: சுத்திச் சுத்தி வந்து நீ சோப்பு போடுற
கொட்டிப் போன குடுமிக்கு சீப்பு தேடுற
ஆ: என்னப் பார்த்து என்ன கேட்ட.. ஏட்ட ஏண்டி மாத்துற
கால நேரம் கூடிப் போச்சு.. மாலை வந்து மாத்துற

பெ: பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
அட பூத்தது.. யாரத பாத்தது
ஆ: மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது
பெ: சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது
ஆ: கொக்கு ஒண்ணு கொக்கி போடுது.. ஹோய்..
பெ: பூஜைக்கேத்த பூவிது
ஆ: நேத்துத்தான பூத்தது
பெ: பூத்தது.. யாரத பாத்தது
...
Nice song!

Wednesday, March 11, 2009

Angel Investing and other articles

Very interesting articles from Paul Graham.

Here is a tidbit on Angel Investing.

http://www.paulgraham.com/angelinvesting.html

--
Regards
Vijayashankar