Tuesday, July 19, 2016

New Movie Idea

You guys (4 upcoming Cinema directors) take 4 different stories happening in 4 corners of Tamilnadu (connected in someway later - could be Social Media connection too, running away from a villain Blackmailer) and merge those stories - with those hero-heroines @ Chennai, getting a closure! Could be 2 Heros & 2 Heroines. Navin, Moodar Koodam type comedy & dialogues will be added advantage! My idea / wish!

Tuesday, June 28, 2016

சிறுகதை : லதா

ஜூலை 23.....

இன்று லதாவிற்கு கல்யாணம். என் அருமை காதலி அவள்.

என்னோடு ப்ளஸ் 2 படித்தவள். இருபத்தொன்பது வயதாகிறது!


காலையில் அவளிடமிருந்து ஒரு மிஸ்ட் கால்.


*

பதினைந்து வருடம் பழக்கம். ஒரே பள்ளி. இருவரும் ஒன்றாக தான் பள்ளி செல்வோம். நாங்கள் இருந்த நல்லூருக்கு அருகில் இருந்த தனியார் பள்ளியில் தான் ஏசுவை வணங்கிக்கொண்டு படித்தோம்.

அவள் கொண்டு வரும் புளிக்காயச்சலும் தயிர் சாதமும், இன்னும் நாக்கில் ஊருகிறது. அம்மா செய்யும் பருப்பு துவையல் அவளுக்கு இஷ்டம்.

அவள் அப்பா ஒரு ப்ரோகிதர். பாவப்பட்ட குடும்பம் என சொல்லும் வீடு. எங்கள் தெரு அருகில் தான்... ஒட்டு உடைசல். புளியோதரை மனம். தேங்காய் வாசம்... என்னை அம்பி என்று அழைப்பார்கள். அவள் அம்மாவிற்கு தெரியும், என் காதல். விதி?

நன்றாக ஸ்லோகம் சொல்லுவாள். நிறைய மந்திரங்கள் எனக்கு கற்றுக்கொடுத்தாள் !  காயத்ரி மந்திரம்... இப்போ மன நிம்மதிக்கு உகந்த மந்திரம்.

என்னோடு நன்கு பழகியவள்.... மனதோடு ஒன்றியவள்...  இருவருக்கும் தெரிந்த அவரவருக்கு ஒரு தலை காதல்!

நன்றாக படித்தாள் ... பி.ஏ. ஆங்கிலத்தில் கோல்டு மெடல். நான் எப்படியோ தாக்கி தடுமாறி ஐ.டி. ... பிரைவேட் காலெஜ், சென்னையில் ட்ரெயினிங் வேலை என்று இப்போது பெங்களூரில் வந்து நிறுத்தியுள்ளது. ஏழு வருடமாக வெளிநாடு போக ஆசை தான். இன்னும் விசா வந்தபாடில்லை.

லதாவிற்கு பி.எட் முடித்தவுடன் அரசாங்க பள்ளியில் உத்தியோகம் வந்தது. சில வருடங்களில் பெர்மனென்ட் ஆகுமாம். அப்பப்போ கால்கள் வரும்.

நான் எந்த ஊரில் இருந்தாலும் , வீடு செல்லும் போது அவளை சென்று பார்ப்பேன்...

சென்ற மாதம் கூட அவள் பாடம் நடத்தும் பள்ளிக்கு சென்று பார்த்தேன். அவளுக்கு பிடிக்கும் என்று பளு பெல் டர்கிஷ் அல்வா எடுத்து சென்றேன்!

சென்ற மாதம் சென்ற போது கிளம்பும் நாள் தான் பார்த்தேன். அவள் முகம் வாடியிருந்தது... என்னை பார்த்ததும் முகம் மலர்ந்தாள்.. "அப்பா எனக்கு கல்யாணம் பிக்ஸ் செஞ்சுட்டார்... மாபிள்ளை பிசிக்ஸ் வாத்தியார், பொள்ளாச்சியில். ப்ளஸ் 2  ஸ்டுடண்ட்ஸ், டுசன் வருமானமும் அதிகம்! "...

"டேட் இன்னும் முடிவாகலே.. ஒரு மாசத்திலே இருக்கும்... ஐ.டி. மாப்பிள்ளை இந்த காலத்திலே வேண்டாம்னு எல்லோரும் சொல்லிட்டா.. இதிலேயும் அப்பா  ப்ரோகிதம் பண்றது நின்னுடும், நான் உங்களை கல்யாணம் செஞ்சா... "


முதல் முறையாக காதல் சொல்லப்பட்டது!

அந்த விசும்பல் ஆயிரம் அர்த்தங்கள் சொன்னது.

"உனக்கு வசதி இருக்கு.... எங்கே வேண்டாம்னு, அப்பாவையும் அம்மாவையும் பெங்களூர் அழைச்சுண்டு போவீங்க. ஆனா எங்க வழக்கங்கள், கலாச்சாரம்... சொந்தங்கள்.. எங்கு போய் நிக்கிறது? தம்பி வேறு வளர்ந்துட்டான். அடுத்த வருஷம் ப்ளஸ் 1. அவன் படிப்பு செலவு மாப்பிள்ளை எத்துண்டார்! "

மீண்டும் விசும்பல்....

"நாமோ இனிமே சந்திக்க கூடாது.."

மீண்டும் விசும்பல்...

ஓடிவிட்டாள்.

மல்லிகை மனம் இன்னும் இருந்தது.

மறக்காமல், கையில் நான் கொடுத்த பொட்டலத்தை எடுத்துக்கொண்டு சென்றாள்..

*

ஒரு வாரம் கழித்து என் மொபைல் சிணுங்கியது... லதா தான்.

"ஜூலை 23 கல்யாணம் முடிவாகியிருக்கு ...  வரும் ஞாயிறு அப்பா ராமேஷ்வரத்திலே. ப்ரோகிதம் பண்ண போறார். பெரிய சாமியாரெல்லாம் வாராலாம்.  நாங்களும் போறோம், மாப்பிள்ளையும் வர்றார். சூரிய கிரகணத்துக்கு அடுத்த நாள். நல்ல நாளாம்... நாங்கோ இருக்குறே லாட்ஜ் அட்ரெஸ் எஸ்.எம்.எஸ் பண்ணிடுறேன்...வரியாடா ஷங்கர்?"

"ஹும்.. பாக்குறேன்.. " என் குரல் கணகணத்தது...

கால் கட்.

*


என்ன தான் எதிர்பார்க்கிறாள்?

அடுத்த மாதம் ஊருக்கு போகும் போது பார்க்கவேண்டும்!

என் முன்னே bharatmatrimony தளம் பறந்து விரிந்து பெண்களின் பெயர்களோடு மிதந்தது!

லதாவை தேட ஆரம்பித்தேன்.

Monday, June 06, 2016

பிறந்த நாள்

பிறந்த நாள் என்றாலே
ஒரு புரியாத சந்தோசம்!
குழந்தைத்தனம் மனதில்!
மனைவியும் பீரோவில்
எப்போதோ வாங்கிய
ஒரு புதிய துணியை
தேடி எடுத்து தருகிறார்!
குழந்தைகள் சந்தோசமாக
தங்கள் பள்ளி
வேலைகளை செய்கிறார்கள்!
சாயந்திரம் கேக் வாங்கணும்!

Friday, May 20, 2016

சாவைப்போல

சாவைப்போல
நிம்மதியை கொடுக்கும்
அருமருந்து
இவ்வுலகில்
வேறு எதுவும்
கிடையாது
தனக்கும் பிரச்சனையில்லை
சேர்ந்தவருக்கும் ஒன்றுமில்லை
காலமது
கடமையை செய்துவிடும்
இயற்கையோடு
இணைத்து விட்டால்!எப்போதோ சிறு வயதில் ரசித்து எழுதிய கவிதை... அசை போடுகிறேன்.

Tuesday, May 17, 2016

நவகிரக ஸ்தலங்களில்

navagraha1

1.    திங்களூர் (சந்திரன்) நவகிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன. இதன் மூலம் பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.30 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 7 மணிக்கு கும்பகோணம் கிளம்பலாம்.
2.   கும்பகோணத்தில் காலை உணவை முடித்துக்கொண்டு 8.30 மணிக்கெல்லாம் ஆலங்குடி கிளம்ப வேண்டும். கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து ஆலங்குடி செல்ல எண்ணற்ற பேருந்துகள் கிடைக்கின்றன. அதோடு கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் 30 நிமிடங்களுக்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 9.30 அல்லது 9.45 மணியளவில் கும்பகோணத்திற்கு திரும்ப வேண்டும்
3.   கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10 அல்லது 15 நிமிடங்களில், 10.45 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி ஆலயம் 100 தூண்களை கொண்ட பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க 30 நிமிடங்களுக்கு மேல் ஆகும். பின்னர் 11.15 மணிக்கு கும்பகோணம் திரும்ப வேண்டும்.
4.   சூரியனார் கோவில் கும்பகோணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எனவே நீங்கள் 11.45-க்கு புறப்பட்டால் கூட 12.15 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.45 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.
5. சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் பேருந்து அல்லது கார் மூலமாக 10 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே 1 மணிக்கு முன்பாகவே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் கால் மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.
6. நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் பேருந்தில் ஏறினால் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2 அல்லது 2.15 மணிக்கெல்லாம் அடைந்து விடலாம். அதன் பின்பு மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.15 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.45 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 4.30 மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.
7. வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 4.30 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5 மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் தரிசித்துவிட்டு 5.30 மணிக்கு கிளம்ப வேண்டும்.
8. திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் அடைந்து விடலாம். இந்த கீழ்பெரும்பள்ளம் கோயிலையும் தஞ்சாவூரில் இருக்கும் பிரகதீஸ்வரர் கோயிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை ஒன்று இங்கு அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.
9. நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து 6.15 அல்லது 6.30 மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக 8 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் தரிசிக்கலாம்
-முகநூல் பதிவு

Wednesday, March 30, 2016

என் அறிவிப்பு

என்  அறிவிப்பு

எவ்வளோவோ முயன்றும் இதுவரை ஒரு நிரந்தர வேலை கிடைத்தப்பாடில்லை.

சொந்தமாக இதுவரை 2008 முதல் பல தொழில் (மென்பொருட்கள்) செய்து ஒன்றில் அதிகம் லாபமும், இரண்டில் சம்பளமும், மற்றவற்றில் எக்ஸ்பீரியன்சும் தான் மிச்சம். 

மொத்தமாக ஒரு ரிடயர்ட் மனநிலையில் 40 வயது முதல் இருக்கிறேன். 

சொந்த தொழில் செய்ய வேண்டி இருந்த மோகம் தான் (அதிகம் காசு கிடைக்குமே!) எவனுக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை என்ற எண்ணமும் கூட. (இது என் பிரச்சனைக்கு பதில் அல்ல).

என்னிடம் இருக்கும் எச்க்ச்பீரியன்ஸ் ஏன் உதவவில்லை என்பது தெரியவில்லை.

குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதால் , அதிகம் வேண்டி இருக்கும் சிலருக்கு வேலை கிடைக்கவில்லை என்பதை அறிவேன்.

நானோ கொடுப்பதை கொடுங்கள் என்கிறேன்.

நண்பர்கள் யாரும் எனக்கு உதவவில்லை. ஒருவன் உங்களிடம் தான் காசு உள்ளதே. இருக்கும் வரை என்ஜாய் பண்ணு என்கிறான்.

நானும் யாருக்கும் உதவும் நிலையில் இல்லை. இருந்த வாடகை ஆபிசும் 2015 அக்டோபரோடு கொடுத்தாச்சு. தேவையில்லாமல் கைக்காசு போனது.

நான் வேலை கொடுத்து எக்ஸ்பீரியன்ஸ் நிறைத்து, அமெரிக்காவிற்கு அனுப்பியவர்கள் எல்லாம் இப்போது நன்றாக செட்டில் ஆகியுள்ளனர். 

அவர்கள் மூலம் உதவி ஒன்றும் கிடைக்கவில்லை. அவர்கள் வேலை செய்த விவரம் விசாரிக்க யாரவது கூப்பிடுவார்கள் நடுநிசியில் - அதையும் பொறுத்துக்கொண்டு விபரம் கொடுக்கிறேன்.

இதுவரை நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் பல லட்சம் கடன் வாங்கியுள்ளேன் - தொழில் மீது தான். தனிப்பட்ட முறையில் கொடுத்தவர்களுக்கு திருப்பிக்கொடுப்பேன் ... ஸ்டாக் ரிஸ்க் என்று தெரிந்தும் ஒருவர் 15 லட்சம் கொடுத்தார். அசலாவது கொடுக்க எண்ணம்.

 வேலை என்று ஒன்று கிடைத்தால் நலம்.

 மிகவும் போர் அடிக்கிறது.

 தனியாக எதோ டெவலப் செய்கிறேன். அதுவும் போர் தான். என்ன செய்ய?

 உதவ முடிந்தவர்கள் தனி மடலில் தெரிவிக்கவும்.

vijayashankar.india @ gmail

 

Wednesday, January 13, 2016

உதவி

உதவி என்று கேட்டு சென்றால் யாரும் உதவ முன் வருவதில்லை. நான் செய்த உதவிகளை அசைப்போட்டுக்கொண்டே காலத்தை கழித்து விட வேண்டியது தான். கடைசியில் குழந்தைகளுக்கு கொடுக்கும் நல்ல படிப்பு தான் சொத்து. காலேஜ் வரை கரை சேர்த்துவிட்டால், எப்படியோ பிழைத்துக்கொள்வார்கள்!

 உனக்கு தான் அங்கே இவ்வளவு இங்கே அவ்வளவு இருக்கே என்ற நக்கல் வேறு. சொத்தை வித்து திங்க வேண்டியது தானே... இது சிலர்... அது தான் பாரீன் போய் நிறைய சம்பாரிச்சு பேங்கிலே போட்டு வச்சிருக்கே இல்லே... உக்காந்து என்ஜாய் பண்ணு...

 அது  வந்து என்னாலே அஞ்சாயிரம் தான் சம்பளம் கொடுக்க முடியும் ... ஒரு ஆறு மாசம் ப்ரீயா வேலை செய்யறியா? ஒரு கோடி அளவு ப்ராஜக்ட் புடிச்சு கொடுத்திடு என்னா? ஆனா அதில் லாபம் பாதி வரணும் ஓகேவா? அப்போ தான் உனக்கு அதில் அஞ்சு பர்சண்ட் தர்றேன்...

இந்த அஞ்சாயிரம் வாங்குறதுக்கு ஆறு கிலோ மீட்டர் வண்டிலே போகணும் வரணும். அதுக்கே சரியாயிடும். சாப்பாடு வேற தனி.

ஹோட்டலில் நன்றாக நொறுக்கி விட்டு - பில்லை நீ கட்டு என்பார்கள்... மகா கொடுமை. நொந்துக்கொண்டே, பாதி தான் நம் கணக்கல்லவா... என்று மனதிற்குள் அழ வேண்டும்.

விதி வலியது!