Monday, July 21, 2008

ஒரு பக்கெட் தண்ணீர் : என் முதல் கதை

ஒரு பக்கெட் தண்ணீர்

என் பெயர் விஜய். நான் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்கிறேன். எங்களுக்கு கிடைப்பது காலையில் குளிக்க ஒரு பக்கெட் தண்ணீர் தான். அதுவும் கிணற்று உப்பு தண்ணீர். இதற்கக்காகவே பாட்டி வீட்டிற்க்கு லீவு விட்டால் சென்று விடுவோம்.

திருப்பூரில் தண்ணீருக்கு எப்போதும் கஷ்டம் தான். 1977 இக்கு பிறகு எம்.ஜி.ஆர். ஆட்சியில் பனியன் ஏற்றுமதி தொழில் மிகவும் முன்னேற்றம் காணப்படுகிறது.

காடு கழனியில் வேலை செய்தவர்கள் இப்போது, எக்ஸ்போர்ட் கம்பெனியில்.
வருமானம் நன்றாக உள்ளது. ஆனால் தண்ணீர் மட்டும் பிரிச்சனை தான்.

ஒரு லட்சம் மக்கள் இருந்த ஊர் இப்போது ஐந்து லட்சம். அறை அடி பைப் மட்டும் அலாங் கொம்புவிலிரிந்து தண்ணீர் கொண்டு வர பயன் படுகிறது. பிரிட்டிஷ்காரன் போட்ட கட்டளை!

வருமானம் இருந்தும் என்ன பயன்?

ஒரு குடம் நீர் இருபத்தி ஐந்து பைசா. கிணற்று தண்ணீர்
குடம் பத்து பைசா குளிப்பதற்கு மற்றும் கழுவுவதற்கு!

ரோடில் போண்டா பஜ்ஜி விற்கும் கடையில் கை கழுவ தண்ணீர் கிடையாது. சிறு வயதில், சொயிங் சொயிங் என்று போண்டாகார அண்ணா சுடுவது பார்ப்பதற்கு கொள்ளை அழகு! கிடைக்கும் காகிதத்தில் துடைத்து கொண்டு, டோவுசரில் பின் பக்கம் தேய்த்துக்கொண்டு செல்வது ஒரு வாடிக்கை.

பாலச்சந்தர் திருப்பூருக்கு வந்து பார்த்த பிறகு தான் 'தண்ணீர் தண்ணீர்' படம் எடுத்தாக சொல்கிறார்கள்...

வெயில் காலத்தில் சுடு தண்ணீர் கிடையாது, கிணற்றிலிருந்து குடத்தில் அம்மா கொண்டு வரும் தண்ணீர் இளம் சூட்டில் இருக்கும். அதில் குளிப்பது அலாதி சுகம் தரும்.

குளிப்பதே ஒரு மிகுந்த பிரயாசை தான். அதுவும் ஒரு பக்கெட்டில் என்றால் சும்மா சொல்லக்கூடாது, கின்னேஸ் ரெகார்ட் தான். ஒரு மக் (சிறிய வாலி தண்ணீரில்) கால் கழுவவதை பற்றி எழுதி, உங்களை உவ்வே சொல்ல வைக்க எனக்கு முடியவில்லை. பிளுஷ் எல்லாம் கிடையது எடுப்பு பக்கெட் தான். அட்டாச்சிடு பாத்ரூம் பழக்கம் சென்னையில் மாத்திரம் இருந்தது. அதனால் தண்ணீர் குறைவான செலவு தான். என்ன பிரணயாமம் மூக்கை பிடிக்க பழக வேண்டும்!

சென்ட் போடுபவர்கள் அந்தே காலத்தில் பணக்காரர்கள். இந்த இடத்தில் இது எதற்கு? புரிந்தால் சரி. வெள்ளைகாரர்கள் பேப்பரில் தான் துடைபார்களாம்! அட ஆண்டவா, சரஸ்வதியை , எங்கெல்லாம் கொண்டு போகிறார்கள், என்று தாத்தா திட்டுவார், சிங்கப்பூரில் பார்த்த அனுபவம் சொல்லும் போது.

*****

நான் முதலில் ஒரு கப் தண்ணீரில் நின்று கொண்டு தலையில் விட்டு கொள்வேன்.

வழிந்தோடும் நீர் உடம்பை நனைக்கும். முகத்திற்கு சோப்பு போடுவேன். பிற்பாடு இன்னொரு மக் இல் நீர் ஊற்றினால் ஒரு ஏரியா முடிந்தது.

அந்த் ஈரம் உடம்பிற்கு சோப்பு போட உதவும். முதுகிற்கு ஒரு மக் நீர்.

பிறகு தொடை மற்றும் கால். வேலை முடிந்தது. குளிச்சு முடிச்சாச்சு.

இது ஒரு காக்கா குளியல் என்றும் சொல்லலர்ம்.

எங்கள் வழக்கப்படி ஆண்கள் ஜட்டி போட்டு தான் குளிப்பார்கள்!

ஜட்டியை பிழிந்து எடுத்து பக்கெட்டை பார்த்த போது, இன்னும் அரை கப் தண்ணீர் மிச்சம் இருந்தது, அதை அந்த ஓபன் பாத்ரூம் சுவர் மேல் உட்கார்ந்து இருந்த காக்கைக்கு வைத்துவிட்டு அடி எடுத்து வைத்தேன்!

வாரம் ஒரு நாள், தலைக்கு குளித்து, அம்மா வந்து முதுகு தேய்ப்பது (பத்து வயதிற்கு மேல் வெட்கம் பிடுங்கி கொள்ளும்) ஒரு தனி கதை.

*****

பின்குறிப்பு - இந்த கதை 1982 வில் எழுதியது. அமரர் சுஜாதாவின் படிப்பு ரொம்ப அதிகம் அப்போது. என் நண்பன் டி .வி . சுந்தரவடிவேலு தான் என்னுடைய கிரிடிக். அவருடைய அப்பா திருப்பூர் கே.எஸ்.எஸ்.ஹை ஸ்கூலிலே தமிழ் வாத்தியார்.

No comments: