Thursday, July 30, 2009

தொழில்

நான் திருப்பூரில் பார்த்துள்ளேன். சில நேரங்களில் எந்த வேலையானாலும் ஒக்கே என்று வருவார்கள். மதுரை சைடிலிருந்து நிறைய இப்போ வருகிறார்கள் என கேள்வி. செய்யும் தொழில் என்று அதற்க்கு மட்டும் கற்றுவிட்டு, அதிலேயே காலம் தள்ளுவார்கள்.

வார சம்பளம் அந்த வாரத்தில் செலவாகும்.

வருடம் ஒரு போனஸ், ஊதிய உயர்வு. கந்து வட்டி செலவு. மனைவியும் வேலையில் என்று போகும் அவர்களின் வாழ்க்கை முறை.

குழந்தைகளை கூட பதினான்கு வயதில் இன்னொரு கம்பெனியில் சேர்த்துவிடுவார்கள். சிறிய கைகள் தேவை பனியன் அடுக்கி கட்ட.

ஸ்ட்ரயிக் என்று வந்தால், அவர்கள் பாடு திண்டாட்டம் தான்.

சிலர் வெளிநாடு ( துபாய் ) சென்று அதே பனியன் தொழில் செய்துள்ளார்கள். அந்த பணத்தை வைத்து பனியன் கான்ற்க்ட் தொழில் செய்து முன்னேறிய பலர் உண்டு.

No comments: