Sunday, September 05, 2010

சந்திப்புகள்

சந்திப்புகள் சில சுவாரசியமானவை.

சென்ற வாரம் அம்மா பெங்களூரு வந்து திரும்ப சென்றார். அம்மாவின் சொந்தங்கள் ( ரொம்ப பழைய... விஜய நகர், ஒசல்லி ரோடு ஏரியா.. ) வந்த பார்த்து சென்றார்கள். தாத்தாவின் உதவிகள், இன்றும் மரியாதை கொடுக்கிறது.

திருப்பூர் - பெங்களூரு - இரண்டு வழியிலும், சென்று அம்மாவை அழைத்து - திரும்ப திருப்பி விட்டு வந்தேன். வரும் போதெல்லாம் ஒரு வாரம் தான் இங்கு இருக்கிறார்கள். திருப்பூர் போல வருமா என்கிறார்கள்.

இப்போதெல்லாம் திருப்பூர் தூரம் அதிகமில்லை என்றே தோன்றுது.

வழுக்கி செல்லும் சாலைகள்...  120 கிலோ மீட்டர் வேகம் செல்லலாம்... ஒரு முறை ப்ரேக் எடுத்தால் போதும்.

நாங்கள் இருக்கும் பி ஜி ரோடு - எலக்ட்ரானிக் சிடி - ஹோசூர் - சேலம் - திருப்பூர். செல்லும் போது சூலகிரி காமத்தில் டிபன். வரும் போது லஞ்ச தொப்பூர் அருகில்

முதலில் மேட்டூர் வழி தான் செல்வோம். ரோடு சரியில்லை. செங்கப்பள்ளி - சேலம் டோல் ரோடு வந்ததில் இருந்து மகிழ்ச்சி.

பெட்ரோல் விலை பெங்களூரில்  57.84 ஹோசூரில் 56.33 மிச்சம் அதிகமில்லை. :-) திருப்பூர் சென்று  வர - 600 கிலோமீட்டருக்கு சுமார் 40 லிட்டர் பெட்ரோல் ஆகுது.

என்னை சந்தித்த திருப்பூர் தே.மு.தி.க நண்பர் ( கூட பள்ளியில் படித்தவர் ) என்னை மாதிரி படித்த ஆட்கள் தான் அரசியலுக்கு வர வைக்கிறாராம்!

அடுத்த ட்ரிப் இனி தீபாவளிக்கு தான்!

நேற்றிரவு பலே பாண்டியா படம் நண்பரோடு பார்த்தேன். மிக இழுவை. உட்கார முடியலே. விஜய் டிவி சிங்கர்கள் தான் எல்லா பாடல்களும் பாடினார்களா? பாடகர்களும் திரையில்!

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

No comments: