சொக்கன் எழுதிய இந்த பதிவை படித்தேன்...
பேஜர் கதை (’பேஜார்’ அல்ல)
//அடப்பாவிகளா, எனக்கு எதுக்குப் பேஜர்? அதுக்குப் பதிலா அஞ்சோ, பத்தோ கொடுத்தா டீ குடிக்க ஆவும்.//
முழு நேர எழுத்தாளர் இப்படி தான் சிந்திப்பாங்களோ?
எனக்கு எழுத தூண்டியது, சுஜாதா சிறுகதைக்கு "ஷ்... ஆ.. " (கல்கி என நினைவு) நான் எழுதிய பாராட்டு கடிதம், திருப்பூர் விஜயஷங்கர் என்ற பெயரில் வெளி வந்தது. ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த சமயம்... 1981 ... நண்பன் எல்.ஐ.சி சதீஸ் எழுத சொல்லி, நான் ஒரு ஐந்து பைசா கார்டில் அனுப்ப... பிறகு கையெழுத்து பிரதி "தூறல்" என்ற பெயரில் நடத்தி ( எழுதியவர் ஸ்ப்ரிங் நிட்டிங் கே. ஸ்ரீ சரவணன் ) சில இதழ்களில் நின்றது. பிறகு "சங்கமம்" என்ற பெயரில் ஒரே ஒரு இதழ் 1985 இல் வந்தது.
அந்த சமயம் என் முழு கவனம் தமிழ்,ஆங்கில டிபேட் மட்டும் தான். பல பரிசுகள் காலேஜ் வரை பெற்றேன். ( குத்தி காட்டுதல்... அதில் பழகியது )
1987 இல் ஜி.சி.டி யில் நடந்த தமிழ் மன்ற போட்டியில் கதை ( தலைப்பு மட்டும் கொடுத்தார்கள் - மருதானிக்கனவுகள் ), மற்றும் கவிதை போட்டியில் - ஏதோ ஒருபரிசு.
அதோடு சரி... பிறகு 2006 முதல் எழுத்துப்பணி ப்ளாகில்.
***
முக்கியமாக ஆறாம் வகுப்பு முதல், செயின்ட் ஜோசப்ஸ் திருப்பூர் பள்ளியில், தமிழ் நாடகங்கள் போட்ட அனுபவம் - நண்பர் சுந்தரவடிவேலு உடன் ( பணத்தின் லீலைகள் இரண்டு முறை மேடை ஏறியது ) - மறக்க முடியாதது. தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் நாடகங்கள் எழுதி இயக்கி நடித்தேன்!
***
அதே எல்.ஐ.சி சதீஸ் ( அவுங்க அப்பா பனி புரிந்த நிறுவனம்! ) தான் ஜோதிடம், கைரேகை குறித்து படிக்க தூண்டியவன் (ர்). திருப்பூர் லைப்ரரியில் பழியாக கிடந்த சமயங்கள் அதிகம்.
***
இப்போது திருப்பூர் பரிசல் கிருஷ்ணா கதை தொகுப்பு ஒன்று வருகிறது. சங்கர் நாராயணனும் ( கேபிள் சங்கர் ) ஒரு சிறுகதை தொகுப்பு போடுகிறார்.
வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment