ஜெயமோகன் வசனம் எழுதிய அங்காடித்தெரு படம் அடுத்த வாரம் ( மார்ச் 26 , 2010 ) ரிலீஸ் ஆகிறது என்று அறிந்தேன்.
இது ஒரு காதல் படங்கள் சீசன். அந்த காலத்தில் பாரதிராஜா தான் ஹிந்து கிறிஸ்டியன் காதலை வித்தியாசமாக காட்டினார் ( அவ்வளவு எதிர்ப்பா? சில நண்பர்கள் இந்த மத காம்பிநேசனில் காதல் திருமணம் செய்து நன்றாக வாழ்கிறார்கள்! ) மேலும் கல்லூரிகள் விடுமுறை காலம். நல்ல மெச்செஜ், உணர்வுப்பூர்வமான படங்கள், எக்காலத்திலும் வெற்றி பெரும்! பள்ளி காலத்தில் டிராமா போட்ட ( நடிப்பு மற்றும் டைரக்சன் ) அனுபவம் - மெச்செஜ் இருந்தால் தான் எடுபடும்! கேளிக்கை என்ற கோட்பாட்டில், வெற்றி பெற சில காம்ப்ரமைஸ்கள் செய்து ( குத்துபாட்டு, சண்டைகள், தேவை இல்லாத காமடி ) படம் வெற்றி பெற செய்வதை விட, வெய்யில் போன்ற படங்கள் வெற்றி பெறுவது ( நாடோடிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்... ) காலத்தின் கட்டாயம்! அங்காடி தெரு ஒரு வித்தியாசமான படைப்பாக இருக்கும், நிச்சயம்..,,, ஸ்ட்ராங் கூட்டணி - வசந்த பாலன் மற்றும் ஜெயமோகன் ( நான் கடவுள் பற்றி இன்றும் எகனாமி டைம்ஸில் சிலாகித்து எழுதியிருக்கிறார்கள்... ). ட்ரெயிலர் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
--
Regards
Vijayashankar
2 comments:
nice introduction for movie.
எனக்கு படம் பிடிக்கவில்லை. வெயில் வந்த போது தவமாய் தவமிருந்து செய்த தாக்கம் இருந்தது மக்கள் ரசித்தார்கள்… தோல்விகளை ஓவராக ஆராதனை செய்வது தேவையில்லை. காசு கொடுத்து பார்ப்பவர்களுக்கு மசாலா இல்லாவிட்டாலும் ஒரு சின்ன மெசேஜ் வைத்தால் ( கொஞ்சம் வெற்றியும் கூட ) நன்று.
நீங்கள் ட்ராபிக் சிக்னல் (ஹிந்தி) பார்த்திருக்காவிட்டால், பாருங்கள் ஒரு முறை… அது ஏற்படுத்திய தாக்கம், வலி இதில் கொஞ்சம் கூட இல்லை.
அங்காடி தெரு பார்த்த பிறகு, ட்ராபிக் சிக்னல் இரண்டு முறை பார்த்துவிட்டேன். கலை. :-)
இரண்டு விக்கிபீடியா ஆர்டிகிள் வைத்து ஒரு புத்தகமே உலகத்தரமாக எழுதிவிடும் இந்த காலத்தில், எங்காவது இன்ஸ்பிரேசன் எடுத்திருந்தால், அதற்கு இணையாக உழைப்பு வேண்டும்.
யோகி ஒரு விதிவிலக்கு.
Post a Comment