Monday, March 15, 2010

விண்ணை தாண்டி வருவாயா

விண்ணை  தாண்டி வருவாயா பார்க்கும் பாக்கியம் எனக்கு சென்ற வாரம் கிடைத்தது.

எப்படியாவது அமெரிக்காவில் கதை களத்தை செட் செய்வதில் கெளதம் மேனன் கில்லாடி. அமெரிக்கா ஆசை இன்னும் விட்டு போகவில்லை போல் உள்ளது. ( நான் மட்டும் என்னவாம், என்று நீங்கள் கேட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல ).

கேரளா எனக்கு மிகவும் பிடித்தமான இடம். மாநிலம். இது வரை குடும்பத்தோடு பல முறை சென்று வந்த அனுபவங்களை, விட்டு, ஒரு படி மேலே, சென்று பார்த்த அனுபவம் கேமரா காட்சிகளை விழுங்கியுள்ளது.

பெங்களூரில் ஈஸ்டர்ன் ஷோரூம் கடையில் ( ஓனரா ) அடிக்கடி பார்க்கும் பாபி அந்தோனி, இதில் அப்பா வேடத்தில் வித்தியாசமாக இருக்கிறார்!

நல்ல வேலை குஷி படம் மாதிரி சிறு வயது முதல் பழக்கம், நல்ல நண்பர் என்று போகும் என்று ப்லேஷ்பேக் வரும் என்று நினைத்தேன்.

க்ளைமேக்ஸ் புரியவில்லை. யாராவது விளக்கினால் தகும்.

எனக்கு படம் பிடிக்கவில்லை. ஆனால் சிம்புவின் நடிப்பை பாராட்டியே ஆக வேண்டும்.

--
Regards
Vijayashankar

2 comments:

Vijayashankar said...

காதல் என்பது வெறும் உருவத்தை பார்த்து வரும் கத்திரிக்காய் என்று அப்படம் தெளிவாக சொல்லுகிறது.

சிலர் மனசு என்பார்கள்... சரி வெளிப்பான ஹீரோ மாதிரி ஆளும், ஜெயராம் வர்ணித்த பெண்ணும் மனசு ஒத்துப்போய் கல்யாணம் செய்வார்களா?

பனித்துளி சங்கர் said...

நல்ல பகிர்வு நண்பரே .

மீண்டும் வருவான் பனித்துளி !