Thursday, March 18, 2010

மரக்குதிரை

ரேசன் கார்டு வாடகைக்கு
ரேசன் எடையில் தில்லுமுல்லு
கம்ப்ளயின்ட் கொடுக்க சென்றார்
கவர்ன்மென்ட் ஆபிஸ் அருகே
டீக்கடையில் கூசாமல் லஞ்சம்
ஆயிரம் ருபாய் சட்டை போட்டிருக்கும்
ஆறாயிரம் ருபாய் சம்பள அதிகாரி


புகார் கொடுக்க செல்லுமிடத்தில்
ஏழை பெண்ணின் கற்புக்கு
விலை பேசும் காவல் அதிகாரிகள்

கோவிலுக்கு சென்றால்
தரிசனம் செய்ய லஞ்சம்
பூசாரிக்கு கையூட்டு
பிரசாதம் கொடுக்க
விரக்தி அடைகிறார்

வீரிட்டு வரும் அழுகை
அடக்குகிறார் தனிமையில்
பீறிடுகிறது இதயம்
வேகமாக செல்கிறார்
எம்.எல்.ஏ கட்டிய பாலம் மீது
இடிந்து நொறுன்குகிறார் சேர்ந்து
கான்றேக்டரின் தவறில்

ஆட்டோவிற்கு அதிக காசு
அவசரமாக விரைந்திட
அரசு ஆஸ்பத்திரியில்
அல்பாயுசில் பரலோகம்
செல்கின்றார்
கவனிக்க டாக்டரின்றி
பாவம் நம் நாயகன்



***

வடகரைவேலன் எழுதிய

கதம்பம் - 15/03/10 படித்தேன்.

இது அதில் வரும் ஒரு கவிதைக்கு மாற்று.

Like I said to Writer Payon once... this is my self styled paraphrase. :-)

2 comments:

Unknown said...

this is the symbol of our rotten indian society.. and you please tell vijay, about american society., i hope u know well simultaneously as ours..

Raju said...

nalla poem. better than original. :-)