கோபால் என்ற நண்பன் ஹைதராபாத்தில் பழக்கம். பத்தொன்பது வருடங்கள் முன் ... ஒரு வருட காலம் இரு பெட்ரூம் வீட்டில், நான்கு பேர் இருந்தோம். பேச்சிலர் வாழ்க்கை வாழ்ந்தோம்.... பிரிந்தோம். பின்னொரு சமயம் சந்தித்த சமயம் சொல்கிறேன்....
இன்று புட் வேர்ல்ட் சென்ற போது, அவனையும் அவன் மனைவியையும் சந்தித்தேன்.
ஆள் மிகவும் மாறிவிட்டான். மனைவி கொஞ்சம் மாடர்னாக இருந்தார்.
நல்லாயிருக்கியாடா? என்றதற்கு, தான் கதை சொல்ல ஆரம்பித்தான்.... அவன் ஹைதராபாத்தில் நாங்கள் வேலை செய்த கம்பெனியில் டார்கெட் எட்டவில்லை - பிசினஸ் இல்லாததால் வேலை விட்டு துரத்திடிக்கபட்டவன் - சத்யம் என்று அந்நாளில் சொல்லப்பட்ட கம்பெனியில் இருந்து.
அவன் வீட்டில் ஒரே பிள்ளை. அப்பா இல்லை அப்போது. அவர் விட்டுப்போன சொத்து - சென்னை வீடு தவிர வேறு வருமானம், பென்சன். அம்மாவிற்கு மட்டும் உதவியது. எப்படியோ, நகை விற்று பணம் அனுப்பிக்கொண்டு இருந்தார் அம்மா. இப்போது அவரும் இல்லை.
குடி பழக்கம், போதை மருந்து பழக்கம் அவன் தங்கியிருந்த பி.ஜி. வீட்டில் ஆரம்பித்து மிகவும் சீரழிந்து.. சென்னைக்கே திரும்பிவிட்டான்.... அங்கு அவன் அம்மா பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு வேலையும் இல்லாமல் அடிக்கடி போதை மருந்து மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டான். அங்கு பிடிக்கப்பட்டவர் தான் தற்கால மனைவி லதா. பொருத்தம்!
முப்பதாவது வயது ஆன பின் கல்யாணம். பெங்களூர் மாமனார் வீட்டில் அடைக்கலம்... கால் சென்டரில் வேலை என்று வாழ்க்கை போகிறது என்றான். இருவரும் வேலை செய்கிறார்கள். இன்னும் குழந்தை இல்லை.
சரி என்று விடைபெற்றேன், என் ஐட்டங்களை பில் செய்தேன். நான் பிளாஸ்டிக் பேகை எடுத்து புறப்படும் சமயம் - அவனும் அவன் மனைவியும் ட்ராலியில் பிராந்தி பாட்டில் கோககோலா மற்றும் சிப்ஸ் எடுத்து வந்தார்கள். லதா சொல்லிக்கொண்டு இருந்தார், இந்த வாரத்திற்கு இது போதும் என்று.
திருந்தாத ஜென்மங்கள் என்று நினைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
***
சில வருடங்கள் முன்,
சென்னை ரயில்வே ஸ்டேசனில் ஒரு முறை குடி போதையில் அவனை பார்த்தேன். பிளாட்பார்மில் விழுந்து கிடந்தான்... அண்ணனோடு இருந்ததால், பார்த்தும் பார்க்காத மாதிரி வந்துவிட்டேன்.
***
வேறு ஒரு நண்பன் அழைத்திருந்தான். கோபால் பற்றி சொன்னேன். கோபாலின் அப்பா உயிலில் கோபாலுக்கு குழந்தை பிறந்தால் தான் அந்த குழந்தை கல்யாண சமயம் வீட்டை விற்க முடியும் ( இப்போது சென்னையில் நான்கு கோடிகள் பெறுமாம் , வாடகை மட்டும் எண்பதாயிரம் வருகிறதாம்... ) என்று எழுதி விட்டு சென்றுள்ளார். அதுவரை அவர் தம்பி தான் பராமரிப்பு, வாடகை பணம்மட்டும் கோபாலுக்கும் அம்மாவிற்கும்...
விதி எங்கோ அழைத்து செல்கிறது....
No comments:
Post a Comment