Wednesday, March 10, 2010

நல்ல கவிதை

நல்ல கவிதை எது என்று
நண்பர் கேட்க
இது என்ன புது சோதனை
என்று நினைத்து
பழைய பாடலுக்கு புது அர்த்தம்
தேடுவதாக எண்ணுகிறேன்
என்றேன்
புன்முறுவல் பூத்தார், பிறகு
ஏன் என்றார்...
காசுக்காக வார்த்தைகளை விற்பது
கவிதைகள் இல்லை
மனம் சொல்வதை
பிசிறில்லாமல் 
மொழி சந்தம் பிழை தேடாமல்
தாளத்திற்கு வார்த்தைகளை கோர்க்காமல் 
சொல்வது கவிதை என்றேன்
அவர் மீண்டும்
புன்முறுவல் பூத்தார்!


மு.மேத்தா நா.காமராசன் போன்றோர்
வார்தைகடையல்களை எல்லாம்
நல்ல கவிதை இல்லை என்றனர்
வாலியோ ஒருபடி மேலே போய்
தெரியாத வார்த்தைகளை
கவிதை என்று சூளுரைத்தார்...
இதையே தான் வைரமுத்துவும்
சங்கு சக்கர சாமி
ஜிங்கிஜிங்குனு ஆடிச்சாம் என்று
வீட்டில் உலை கொதிக்கவைக்க
தாள கவிதையாக எழுதினார்!

அவரவர் மனதில் நிற்பது கவிதை
அது கம்பர் எழுதினாலும் தகும்
நான் எழுதினாலும் (!) நிற்கும்.

1 comment:

Savitha said...

nalla irukku Vijay sir.