உண்மையான அழகு பார்ப்பவர் கண்ணில் இருக்கு. அதை மறுக்க முடியாது. உலக பெரிய முதன்மை பணக்காரர்கள் வரிசையில் நான்கு இந்தியர்கள். இது போதும் உலகில் வளம் மிகுந்த நாடு என்று பறை சாற்றிக்கொள்ள. சிம்பிளாக இருப்பது நம் வழக்கம். நீங்கள் வெளிநாட்டில் ( ஏன் நானும் கூடத்தான் ) குப்பை கொட்டியதால் இந்திய மீது இது ஒரு இழி மோகம் ஆகிவிட்டது . ஆத்தூர் செந்தில் குமார் , திருச்சியில் ஒரு செந்தில் என அமெரிக்காவில் வாழ்ந்த இந்தியர்கள் புலம் பெயர்ந்து நாட்டுக்கு உழைப்பது உங்களுக்கு தெரியவில்லையா? ஏன் நான் இன்னும் டெவலப் ஆன நேசன் என்று சொல்லப்படுகிறோம், இந்த தாழ்வு மனப்பான்மையால் தான்!
இந்த மாதிரி பேசுபவர்களை கேட்டு தான் அமெரிக்கா மோகம் குறைந்து இந்திய வந்து சேர்ந்தேன். மீண்டும் மீண்டும் அதை கேட்பது புளித்த மோர் போல இருக்கு.
தொடர்புடைய பதிவு
தொடர்புடைய பதிவு
***
இனி அமெரிக்காவில் இப்போது நிறைவேறயுள்ள ஒரு முக்கியமான இன்சூரன்ஸ் திட்டம் பற்றி. மூன்று கோடி மக்கள் பயன் பெற போகிறார்கள்.
அமெரிக்காவில் வேலை செய்யும் கம்பெனிகள் தான் இந்தியர்களுக்கு முழு இன்சூரன்ஸ் கட்டுது ( குறைந்த பட்சம் 90% ). இந்திய வம்சாவளியினர் சொல்வதை நம்ப வேண்டாம்.
பத்து டாலர் ( இன் நெட்வர்க் ) கோ பே குறைத்து கட்ட இருபது டாலர் பெட்ரோல் செலவு செய்யும் மக்களை அறிவேன்.
மூன்று கோடி மக்கள் முக்கியமாக கறுப்பினத்தவர் ( ஆப்ரிக்கன் அமெரிக்கன்ஸ் ) மற்றும் ஸ்பானியர்கள் ( மெக்சிகன்ஸ் ) இன்சூரன்ஸ் இல்லாமல் க்வேகளிடம் சென்று கஷ்டப்படுவதை ஒபாமா பார்த்துள்ளார்.
இது நிச்சயமாக நல்ல திட்டம். இதை முதல் படியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள் நண்பர்கள். இந்தியாவிலும் இதே மாதிரி நல்லது நடக்கும் வாய்ப்பு உண்டல்லவா?
யார் தடுக்கிறார்கள்.... பண முதலைகள்... அதிக லாபம் சம்பாரிக்கும் டாக்டர் கூட்டங்களும், மருந்து கம்பெனிகளும்..
--
Regards
Vijayashankar
No comments:
Post a Comment