***
அன்புள்ள ஜெயமோகன்
நான் சென்ற ஜூன் 20 200 அன்று சுந்தர ராமசாமியுடன் நடத்தபப்ட்ட விரிவான பேட்டியை டிடியில் பார்த்தேன்
நான் ரசித்த சிறு துளிகள்...
- எழுத்தாளனுக்கு வாசிப்பனுபவம் மிக முக்கியம்.
- எழுதுங்கள், எழுதிக்கொண்டே இருங்கள், வேண்டுமென்றால் கிழித்துப்போடுங்கள் … எழுத வரும்…
அவருடைய எழுத்துக்கள் இணையத்தில் அனைத்தும் உள்ளனவா?
மிகவும் நேசித்துவிட்டு, எதற்காக இந்தியாவை விட்டு விட்டு அமெரிக்க வாழ்க்கை வாழ்ந்தார்? ( நான் அங்கு கிட்டத்தட்ட ஆறு வருடம் வாழ்ந்த வாழ்க்கை, பணத்தை தவிர ( திறமைக்கு கூலி ) வேறு எதுவும் பிடிக்கவில்லை.
சுஜாதாவை விட இவரின் பேச்சு ( தேவையானவை ) மட்டும் மேலாக இருந்ததாக என எனக்கு தோன்றியது. நீங்கள் அவரிடம் பழகியுள்ளீர்கள், மணிக்கணக்கில் பேசுவது என்பது, மிகுந்த படிப்பு ஆர்வம் இருப்பவர்க்கு விருந்தாகும்..
–
Regards
விஜயஷங்கர்
பெங்களூரு
அன்புள்ள விஜயசங்கர்
சுந்தர ராமசாமியுடன் நான் நெருக்கமாக பழகியிருக்கிறேன். அதையெல்லாம் அவரைப்பறி நான் எழுதிய 'சுரா-நினைவின் நதியில்' என்ற நூலில் பார்க்கலாம். அது உயிர்மை வெளியீடாக வந்துள்ளது.
அந்த பேட்டியை நான் பார்க்கவில்லை. அதைப்பற்றி நீங்கள் காலச்சுவடு நிறுவனத்தில் விசாரித்து பார்க்கலாம்.
ஜெ.
***நன்றி ஜெயமோகன். அமெரிக்காவை இந்த விசிட்டில் என்ஜாய் பண்ணுங்க!
நான் அனுப்பியே மெயிலுக்கு காலச்சுவடு இதுவரை பதில் தரவில்லை. கடைசியாக அவர்களை ராஜா மார்த்தாண்டன் இருந்த போது அழைத்தது! மிக நல்ல எழுத்தாளர் ஜெயமோகன் மூலம் அறிமுகம் ஆனது, இப்போ இல்லே.
--
Regards
Vijayashankar
No comments:
Post a Comment