Friday, July 10, 2009

தன்னம்பிக்கை, தாழ்வுமனப்பான்மை

தன்னம்பிக்கை,  தாழ்வுமனப்பான்மை குறித்து ஒரு பதிவு படித்தேன்...

"தாழ்வு மனப்பான்மையைப் பற்றி..."

இவ்வாறாக நான் அங்கு பதிலுரை இட்டேன்.

பெரியவர்கள் கூப்பிட்டு பேசுவது என்பது தலைக்கனம் இல்லை. ( சிலர் வேண்டுமென்ற கூட செய்யலாம், அது வேறு.. ). பவ்யம் என்பது பார்த்தாலே தெரியும். நீங்கள் வெளிநாட்டில் வேலை செய்தால், அந்த சமயம் சிலர் ( உங்களுக்கு தெரியாத ) நபர்கள் உங்கள் குடும்பத்திற்கு உதவியிருந்தால் அவர்கள் பேச விளிக்கலாம்!

சரி உடை விசயத்தில், ஊருக்கு தகுந்த உடைகள் அணிவது மரபு. ( அப்புறம் , சாமியார்கள் ஒரு கெட்டப் வேறு வைத்துக்கொள்ள வேண்டும்! மொட்டை அல்லது முடி... தாடி மற்றும் காவி  ).

சிறு வயதில் திருப்பூரில் நண்பர்கள் எல்லாம், லுங்கி மற்றும் டி ஷர்ட் தான் விளையாடும் சமயத்தில், பருவ வயதில்... அப்போது விடாப்பிடியாக பேன்ட்ஸ் தான் அணிவேன்... அது ஒரு காலம்!

அமேரிக்காவில் சில நண்பர்கள் கல்யாணத்தில் கோட்டு சூட்டு அணிந்து தான் செல்ல நேரிடும். கட்டாயம் வேறு.... ( டக்சிடோ )  நம் மனப்பிராந்தியை அப்போது மனப்பான்மையாக வெளியிடக்கூடாது..

--
அன்புடன்
விஜயஷங்கர்
பெங்களூரு

No comments: