சில நேரங்களில் சிலவற்றை மறப்பது நன்று. செலக்டிவ் அம்னீசியா!
நல்லனவற்றை நினைப்பதற்கு தான் இந்த கால வெளியில் அவகாசம் உண்டு.
முதல் ரேங்க் எனபதும் ஒரு மாயை. என்னைவிட, மற்றவர்கள் சிறப்பாக செய்யவில்லை என்பது ஆனது. இல்லையா?
ப்ளஸ் டூவிர்க்கு பிறகு காலேஜில், சில பேப்பர்களில் தான் முதல் மதிப்பெண் பெற்றேன். என்னை விட என வகுப்பில் நான்கு பேர் அதிகமாக பெற்றாலும், வேலை என்று வந்த போது முதலில் ஒரு வைராக்கியத்தோடு, காலேஜிலியே கேம்பஸ் இன்டர்வியுவில் வேலை பெற்றேன். அது மனதிற்கு அதி ஆனந்தம்.
அதுவும் ப்ரோக்ராமிங் லேபில் எல்லோருக்கும் உதவிய சமயம், அற்புதம்! இன்று அத்தொழிலில் இருக்கும் பலர் ( பி.எஸ்.ஜி ) என்னை நிச்சயம் நினைத்துக்கொள்வார்கள்.
டில்லி ட்ரெயினிங் மற்றும் ஹைதராபாத் போஸ்டிங்.... முதல் சம்பளம் கையில் வர, நான்கு மாதங்கள். சேர்த்தாற்போல் ஐந்தாயிரம் ரூபாய்கள் என் அம்மா கையில் கொடுத்தது, இன்னும் உடலில் சிலிர்க்க வைக்கிறது. பத்தொன்பது வருடம் முன்னாள் நடந்தது.
என் பர்சில் இன்று வரை சில நூறாவது நிற்கிறது. அது என் தன்மானத்தால் தான். தேவையில்லா சிலவுகளை செய்வதில்லை. நான் தான் நண்பர்களுக்கு ட்ரீட் கொடுத்திருக்கிறேன்... ரிடர்ன் எதிபாராமல்!
செல்வம் மிக முக்கியம். எதற்கும். அது மாயை இல்லை. பணமில்லாமல் படிக்க முடியாது, கல்யாணம், காட்சி, குழந்தைகள்...
எல்லோரும் சொல்கிறார்கள் வேலை கிடைக்கும் என்பதற்காக ஒரு யோகா குரு ( குமுதமில் எழுதுகிறார் ) இடத்திற்கு சென்றேன். அறுநூறு வருட ஆலமரம், ஒரு லிங்கமிருக்கும் குளம்.... ஈஷா யோகா மாதிரி ( இது எல்லோரும் காப்பி செய்வது தான்! ) சரியான கூட்டம். அங்கு தான் தெரிந்தது பணத்தாசை பிடித்த கூட்டம் என்று. யோகி ராம்சுரத்குமார் (பாலகுமாரன்!) கண்டுபிடித்த ஆளாம்! பேசத்தெரிந்த பேதை. சேவையில் நில்லுங்கள், அது தான் அத்மா திருப்தி என்கிறார், இது புத்தி இருப்பவர்களுக்கு தெரியும்.. ராகசுதா என்ற நடிகையும், சாமியாரிணி ஆகிவிட்டாள் அங்கு! அது மாயை! மூன்று லட்சம் கொடுத்து, 21 நாள் இனனர் அவேகனிங் என்று எல்லாம் படிக்கிறார்கள். கலி காலம்!
ரவிசங்கர் "ஆர்ட் ஆப் லிவிங்" ப்ரோக்ராமிலேயே தெரிந்து விட்டது, பிரனயாமத்தை வைத்து பில்டப் என்று... அது எனக்கு ஒரு க்ளப் மாதிரி பெரிய தலைகள் - காண்டேக்ட்ஸ் கிடைக்க வழி... சென்னை ஆழ்வார்பேட்டையில்.
பி எ ரோமன் இன் ரோம் என்று சும்மாவா சொன்னார்கள்!
( என்ன தான் குருவாக கல்லா கட்டினாலும், இந்த டாய்லெட் விசயம் மாத்திரம் சுத்தமாக இருக்காது ... அவ்வளவு கூட்டம, கொஞ்சமாவது குளிர் காலத்தில் விவஸ்தை வேண்டாம்? )
1 comment:
அருமை... சிந்திக்க வைக்கும் மாயை.
இந்த காசு பிடுங்கும் சாமியார்களை நம்பாதீங்க! இந்த ஆளை எங்க அம்மாவும் ( அப்பா கூட ) வீட்டிற்கு கூட்டிட்டு வந்து தங்க உருத்திராட்சம் எல்லாம் கொடுத்திருக்காங்க.
நாமக்கல்லிலே விறகு பொறுக்கிட்டு இருந்த பையன், இப்போ ஆஹா இந்த நிலைமையில்? எல்லாம் கலி காலம் தான் பாஸ்! யாரோ ரெண்டு மூணு பேர் கூட சேர்ந்து சில ஸ்லோகங்களை படிச்சுட்டு... ரொம்ப தான் உடான்ஸ்...
அப்புறம் அந்த பிட்டி இடம், கோவில், லோகல் கிராமத்திலிருந்து அகப்படுதப்பட்டது... திருப்பி கேட்டால், கூட இருக்கும் ரவுடிகள் அடித்து துவைத்து விடுவார்கள்! பாவம். இப்போ அந்த ஊர் பெரிய மனுசர், கான்பிடண்ட் க்ரூப் என்று ரியல் எஸ்டேட் கம்பெனி வைத்திருக்கிறார்! தெலுங்கு ஆள். எங்க பாஸுக்கு சொந்தம்... ரொம்பவும் பயப்படுகிறார்! சாமியார் பாவம் வேண்டாமென்று!
இன்னும் கொஞ்சம் மோசமான விஷயம், டாய்லெட் தவிர... வெளிநாடுகளில் இருந்து வரும் பாரினர்களுக்கு கஞ்சா, மாவா போதை சப்பளை.... ஈசியாக அங்கு உள்ளே யாரும் நுழைய முடியாது! ஒரு விஷம ஏரியா... கோட்டை போல. மாட்டிகிட்ட வெளியே வர முடியாது.
ஒரு முறை நானும் நண்பரும் அங்கு சென்றோம். ஐந்தாயிரம் கொடுத்து ஈ.எஸ்.பி கோர்ஸ் எடு என்று ( கிரெடிட் கார்ட் ஒக்கே ) நிறைய வற்புறுத்தல்....
பிட்டி ஆலமரம், கோவில் நன்றாக இருக்கும்! சுயம்பு என்று சொல்லி ஒரு கல்லை காட்டியிருப்பார்களே...
Post a Comment