Friday, May 29, 2009

சில்லறை

ஒரு கடையில் ஐந்நூறு நோட்டு குடுத்து சாமானம் வாங்கிவிட்டு மீதி நானூற்றி சொச்சம் சில்லறைக்கு பதில், நூறு என நினைத்து காஷியர் கொடுத்தார், குழந்தைகள் அடம் செய்ததால், சரியாக கவனிக்காமல் வீடு வந்துவிட்டேன். வீட்டில் வேறு ஒரு தேவைக்கு, ஆறுநூறு தேவைப்பட்டது. கையில் இருக்கும் என நினைத்து, பர்சை எடுத்து பார்த்தால், நூற்றி சில்லறை தான் இருந்தது. கடையில் சென்று கேட்டேன் ... காஷியர், நூறு தான் கொடுத்தேன் என்று அடித்து சொல்லிவிட்டான்.

மேலும் ஒரு நாள், நான் பிரெட் வாங்க சென்றேன். நூறு ருபாய் கொடுத்தேன், மீதி சில்லை, ஐந்நூறு என் நினைத்து அதே கேஷியர், நானூறு மற்றும் சில்லறை கொடுத்தான்.

இது தான் விதி என்பதா?

1 comment:

Benivolent said...

Good Article...

By
www.benivolent.com
webdevelopment
SEO Process
Application Development
PHP Development