Sunday, May 24, 2009

சில கேள்விகள்

சில கேள்விகள் (திரு லதானந்த் அவர்கட்கு )

யானைகள் ஊரு பக்கம் ( சிறுமுகை, சத்தி ) வருவது அதிமாகிவ்ட்டதே? ( சம்மர் )

தாய்லாந்தில் ஒரு மடத்தில், புலிகள் மனிதர்களோடு வளர்கின்றனவாம், எப்படி?

லஞ்சம் அதிமாகிறது நாட்டில்... அதனால் சம்பளம் அதிகம் செய்துவிட்டால் திருந்துவார்களா? (அமேரிக்காவில் போலீஸ சம்பளம், கிட்டத்தட்ட, ஐ.டி சம்பளம் அளவு )

இந்த சீர் செனத்தி என்கிறார்களே, கொஞ்சம் விவரமாக கூறுங்கள்.

ஊரில் என் இடத்தில, சில தேக்கு மரங்கள் நட்டுள்ளேன். நல்ல வளர்ச்சி நான்கு வருடங்களாக. எத்தனை வருடங்களில் வெட்டலாம்? காட்டிலாக அனுமதி தேவையா?

இப்போது சுப்ரீம் கோர்ட் உத்தரவு படி, சந்தன மரங்கள் வீட்டில் நடலாம், ஆனால் அரசாங்க விலைக்கு கொடுக்க வேண்டும் என்று நாத்து விற்பவர் கூறினார். உண்மையா? எத்தனை வருடங்களில் லாபம் பார்க்கலாம்?

"நடந்தது என்ன" விஜய் டிவி  நிகழ்ச்சியில், காண்பிக்கும் சின்ன குரங்கு ( சுண்டு விரல் சைஸ்) எந்த காட்டில் உள்ளது?

இன்னும் இருளர்கள், பட்டை சாராயம் காட்டில் காச்சுகிறார்கலாமே?

அரசாங்கம் யானை முடி வியாபாரம் செய்கிறதா?

வேலி ஓணானை வீட்டில் வளர்க்கிறார்களே, நாய் மாதிரி.. அது பற்றி?

மிருக பாசையில் பேசுபவர்களை ( டாக்டர் டுலிட்டில் மாதிரி) கேள்விப்பட்டுள்ளீர்களா?

கூகிள் நிறுவனம், காட்டு ஏரியாவையும் படம் பிடிக்கிறார்களே? இந்தியாவில் உங்கள் உதவி எடுப்பார்களா?

--
Regards
Vijayashankar

No comments: