Saturday, May 30, 2009

மீண்டும் சில்லறை

இன்று மீண்டும் ஒரு சில்லறை, அனுபவம்.

மதியம், ஒரு குழந்தை பிறப்பு விசிட் முடித்த பிறகு, ஹெப்பல் எஸ்டீம் மாலுக்கு ( பெங்களூரு இண்டர்நேசனல் ஏர்போர்ட் போகும் வழி - 27 கி.மீ. முன்) சென்றோம்.

பையனுக்கு பர்த்டே துணி வாங்கிய பிறகு, லன்ச் அங்கே ஒரு "தி வெஜிடேரியன்" ஹோட்டல் - புட் கோர்ட்டில். இரண்டு தாளி, ஒரு சாட் பில் ரூ. 198/- ஐந்நூறு கொடுத்தேன். ரூ. 2 காயின் கொடுத்து விட்டு, சும்மா இருந்தாள் அந்த பெண்! நான் நின்றுக்கொண்டே இருந்தேன், மீதி சில்லறை வரும் என்று.

"சில்லற பேக்கு" என்றேன்.
"கொட்டாயித்து" என்றாள்.
"இன்ன முன்னூறு பரு பேக்கு" என்றேன்.
"இல்லே சார் நானு சுள்ளு (பொய்) ஏலல்லா" என்றாள்.
"சரியாக செக் மாடி" என்றேன்.

அப்படி இப்படி பார்த்துவிட்டு, மூன்று நூறு நோட்டுக்கள் எடுத்துக்கொடுத்தாள்.

அந்த கல்லாவில், ஒரே ஒரு ஐந்நூறு (நான் கொடுத்தது) ப்ரெஸ்ஸாக, கிடந்தது!

----*-----

அப்புறம், உணவு நன்றாக தான் இருந்தது, பட் பத்தவில்லை, அளவு குறைவு... வயிறு பெருசு... மீண்டும் எம்.டி.ஆர். மையாஸில் ஆளுக்கு ஒரு அக்கி ரொட்டி ( பெர்சுகளுக்கு ) மற்றும் ஆளுக்கு ஒரு பூரி செட் ( சிறிசுகளுக்கு ) என முடித்து, கிழே வரும் போது, பாஸ்கின் ராபின்ஸ் ஐஸ்க்ரீம் ஆளுக்கு ஒன்று... ஒன்றிற்கு விலை தான் அதிகம் ( ரூ. 51/-) முடித்துவிட்டு, ரிங் ரோடில், அரக்கரை அடைந்தோம்.

நாளைக்கு, பாஸ்கின் ராபின்ஸ், 31% தள்ளுபடி நாள். ரூ. 310 செலவு செய்ய வேண்டும்.

1 comment:

Raju said...

அண்ணே, ரொம்ப நன்றிங்க!