Tuesday, January 27, 2009

ஆறு வார்த்தையில் ஆறு கதைகள்

குழந்தை வீரன் கொல்லுகிறான், நாளைய மாவீரன்! சுதந்திரம்!

படிக்க காசில்லை, ஸ்காலர்ஷிப். கம்ப்யூடர் வேலை. கொடுக்கிறான்.

கையால் நெய்தால் கதர். ஏழைகளின் பட்டு. அரசியலாடை.

தாய்நாடு பிடிக்கவில்லை. அமெரிக்க சிடிஜனாகிறான்! தாய்நாடு வரவேற்கிறது.

கல்லூரியிடத்திற்கு கையூட்டு. படித்தவுடன் கலெக்டர். மீண்டும் கையூட்டு.

உணவில்லை. திருடுகிறான். பழக்கமாகிறது. அரசியல். மந்திரி. திருடுகிறான்.
--
Regards
Vijayashankar
"அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு. " - குறள் எண் : 513

No comments: