உப்புக்குச் சப்பாணி என்றால் என்ன?
என்னை பொறுத்தவரை, நாம் செய்யும் கஷ்டமான வேலைக்கு மற்றவர்கள் சொந்தம் கொண்டாட வைத்தால், அது உப்புக்குச் சப்பாணி! ;-)
சாப்ட்வேர் தொழிலில் இது நிறைய நடக்கிறது.
யாரோ செய்யும் வேலைக்கு கஸ்டமர் முன் நிற்கும் ஆள், பெருமை தட்டி செல்வது போல? இல்லையா?
இன்று காலை ரமேஷ் என்ற என் நண்பர், தொழில் முறை கூட்டு வைக்க ஒரு இன்வேச்டார் தேவை என்ற முறையில் நான் நினைப்பதாக அவர் வருத்தம் கொண்டார், நான் என்ன உப்புக்குச் சப்பாணியா? இது கேள்வி!
என்னுடைய புதிய நிறுவன ஆரம்பிக்கும் முயற்சியில் அவருக்கும் பங்கு உண்டு, இருந்தாலும், முழு முயற்சி என்னுடையது. ஒவ்வொரு நாளும் எடுக்கும் முடிவுகள் அவரிடம் நான் தெரிவிப்பது இல்லை.
பணம் இல்லாவிட்டால், எல்லாமும் உப்புக்குச் சப்பாணி தான்.
--
Regards
Vijayashankar
"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின். " - குறள் எண் : 969
No comments:
Post a Comment