Saturday, October 11, 2008

சினிமா - மலரும் நினைவுகள்!

சினிமா - மலரும் நினைவுகள்! நண்பர் ரமேஷ் எழுதிய பதிவு சினிமா பற்றி. என்னையும் எழுத சொன்னார்.

இது எனது பதில்கள்.

===========================================================

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

முதலில் நினைவில் இருப்பது எம்.ஜி.ஆர். படம். நல்ல நேரம். யானை எல்லாம் வரும். ஒரு குலநடை அருகில் பாம்பு வரும்...சிறு வயது ஒரு ஐந்து இருக்கும். இன்னும் நினைவில் உள்ளது. கோத்தகிரியில் பார்த்தது. இருட்டு. பயம். பாப்கார்ன். ஜாலியாக இருந்தது. அப்புறம் தங்கைகள் இருவர், அண்ணனோடு சண்டை போட்டு கார்னர் சீட் பிடித்தது, மறக்கவில்லை. முழு படம் ஞாபகம் இல்லை.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சுப்ரமண்யபுரம். பெங்களூர். ஒரு சுமாரான தேயடர்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

கில்லி. டிவி. நான் ரசித்த படம். முதல் சீனில் இருந்து எனக்கு பிடித்தது. சினிமா என்றால் ஒரு நல்ல திரைக்கதை வேண்டும். செய்துள்ளார். தமிழ்நாடு கொலைவெறி வாசம்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

விஜயகாந்த் நடித்த செந்தூரபூவே. இன்னும் நினைவில் உள்ளது. ஆபாவாணன் படம்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

விருமாண்டி ஒரு கமல் படம், சமீபத்தில்
டிவிடி பார்த்தேன். சண்டியர் என்பது ஒரு ஜாதி குறிக்கிறது என்று சொல்லி பெயர் மாற்றினார்கள். படமெல்லாம் சண்டியர் வசனம்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

பாய்ஸ். அந்த காமிரா 360 டிக்ரி காட்சி. அருமை. அந்நியனில் ரிபீட்.


6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

டைம் இல்லை. குமுதம், விகடன் மற்றும் ப்ளொக்ஸ்.

7.தமிழ்ச்சினிமா இசை?

ரஹ்மான், ஒரு முறை 'உயிரே ' கேட்டு பார்க்கவும்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி படங்கள். ஆங்கிலத்தில் ச்லீப்லேச்ஸ் இன் சியாட்டில். தெலுங்கில் கங் லீடர். மலையாளத்தில் ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா. ஹிந்தியில் ருடாலி.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை. பல சைஅன்ஸ் பிக்சன் எழுதியுள்ளேன். ஒரு படம் செய்ய ஆசை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நன்றாக இல்லை... ஒரே ட்ரெண்ட் வருது. சீசனல். ரசனை குறைவு. ஐந்து பட்டு. குத்து. பைட்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ரொம்ப சந்தோசம். புத்தகங்கள் படிப்பேன்.

என் வாசகர்கள் எழுதுங்கள். என்னிடம் சொல்லுங்கள்.

No comments: