நேற்று வேலை விசயமாக டெல்லி சென்று வந்தேன். ஒரு நாள் பயணம். ஆக்ரா, ஜெய்பூர், உதய்பூர், என்று குடும்பத்தோடு செல்லெலாம் என்று ஒரு எண்ணம். தாங்கும் இடம் காரணமாக தள்ளி போட்டேன். அடுத்த முறை அழைத்து செல்வேன். கூடிய விரைவில்!
மிகவும் ஆச்சிரியமான மாற்றங்கள் ஜி.எம்.ஆர். ஏர்போர்ட் கட்டுகிறார்கள். ரொம்ப காலம் கழித்து ஒரு முன்னேற்றம். குர்கவ் சைடில் அட்டகாசமான வளர்ச்சி.
ஜலவாயு விஹார் என்ற இடத்தில் நண்பர் இருக்கிறார். ஆயிரம் வீடுகள். செக்டார் 30. ஒரு நாள் கூட தண்ணீர் பரிசனை வரவில்லை என்றார். நான் சொன்னேன் பெயரில் தானே ஜலம் இருக்கிறது என்று!
பெங்களூரில் இருந்து கிளம்பியது எழு மணி. எழுந்து ரெடியானது மூணு மணி. குளித்துவிட்டு டாக்ஸ்யக்கு வெயிடிங். வீடு டிரைவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. நாலரை மணி. மெயின் ரோட்டுக்கு சென்றேன். காலை நாலு மணி, நாய்களின் பயம், நடை. அனுமாஷ்யம். பால் வண்டி... எஸ்.ராமகிருஷ்ணனின் கதை போல.
குழந்தைகள் தூங்கி கொண்டு இருந்தார்கள். வீட்டு கதவு திறந்து வெளியேறும் போது இருவரும் ஓடி வந்து பை சொன்னார்கள். கண்களில் நீர் பணித்தது. ப்ளைட் ட்ராவல் என்றாலே பயம்.
ஒன்றரை மணி நேரம் பயணம். தூக்கம். வழியில் பல ஆக்சிடண்ட்ஸ். கலக்கம்.
புதிய ஏர்போர்ட்டில் பாச்சென்ஜர் வெயிடிங் ஏரியாவில் புது டோய்லட் வந்துள்ளது. வாசம் தாங்கவில்லை. ஒரு கடை இடத்தை மாற்றியுள்ளார்கள், எடியுரப்பா திட்டியதால், உண்டனடி நிவாரணம். ஆனாலும் இந்த செக்கூரிட்டி செக்கிங் ஆட்கள் தொல்லை தாங்கலீங்க. ஒரு லிட்டர் தண்ணீர் (காய்சியது) கொண்டு போகவிடவில்லை. நூறு மில்லி மட்டும் தான் என்றார்கள். ஆனால் கோக் கேன்கொண்டு போகலாம், என்ன ஞாயம் சார் இது..
நான் சென்றது ஜெட் லைட். காபி மட்டும் இருபது ருபாய். காலையில் ஆறுமணிக்கு எழுபது ரூபாய்க்கு இரண்டு இட்லி ஒரு வடை, மற்றும் ஜூஸ் எல்லாம் சேர்ந்து நூறு செலவு... கொடுமை... ஏழைகளுக்கு இல்லை ஏர்போர்ட். எதற்கு இப்படி எம்.ஆர்.பி. தவிர விற்க விடுகிறார்கள்? ஆசை. பேராசை. அதிக வாடகை.
இரண்டரை மணி நேரம் பயணம். டெல்லி இறங்கிய போது பத்து மணி. நண்பர் டாக்ஸி அனுப்பி இருந்தார். அறை மணி நேரத்தில் அவர் அலுவலகம் சென்ற அடைந்தேன். வெய்யில் இல்லை. ஆம்பியன்ஸ் மால் வழியாக, அருமை.
புது ஆபிஸ் தொடங்கியுள்ளார். என் புது கம்பனிக்கு அங்கு செட் செய்ய யோசனை. பாதி ஆபிஸ் கிடைக்கும், வாடகைக்கு ஸ்டாக். நல்ல டீல் போல தெரியுது. ஆனால் கூலிக்கு ஆள்? செலவு செய்ய யார், இது தான் கேள்வி. சென்ற முறை கஷ்டப்பட்டது ஞாபகம் வந்தது. ஆறு வருடம் முன்பு. கோவை. இருபத்தைந்து லட்சம் நஷ்டம். இந்த முறை யோசிக்க வேண்டும்.
ஒரு மணி நேரம் நண்பருடன் விவாதம். பிறகு நியூஸ் பேப்பர் . கிரிக்கெட். சைட். வீட்டிற்க்கு போன்.
அங்கு ஒரு பிளாட்டினம் என்று ஒரு ஹோட்டல் சாப்பாடு. ஜீரா ரைஸ். கோபி கரி. சப்பாத்தி. மூங் டால். ஸ்வீட்ஸ்... க்ரீம் தயிர். டெல்லி எருமைகள்! வெஜிடேரியன்.
பக்கத்தில் ஓம் ஸ்வீட்ஸ் என்று ஒரு கடை. பெங்களூருக்கு ஒரு கிலோ ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் வாங்கினேன்.
அப்புறம் அவர்கள் வீடு வரை சென்றேன். பெங்களூர் வந்த போது நண்பர்கள்... டி.பி.எஸ் ஸ்கூல் பக்கத்தில் உள்ளது. பெரிய ஏரியா.
மீண்டும் மூன்று மணிக்கு ஆபிஸ். இன்னொரு நண்பர் மீட்டிங். நூறு ருபாய் போட்டால் வருடத்தில் ஆயிரம் எடுக்கும் ஆசை. என் விளக்கம் என்று ஓடியது.
ஐந்து மணிக்கு டாக்ஸ்ய் வந்தது. விடை பற்று ஏர்போர்ட் ஆறு மணி. ட்ராபிக். என்.எச்.8.
இரவு எழு மணி ப்ளைட். ஜெட் லவுஞ்சில் கொஞ்சம் ஸ்நாக்ஸ். ஆறு பன்னீர் பஜ்ஜி. இரண்டு கார்ன் சான்ட்விச். இரண்டு டோமடோ சான்ட்விச் ஒரு பைன் ஆப்பிள் ஜூஸ். இப்படி ஸ்நாக் மட்டும் நொறுக்கினால், எப்படி உடம்பு இறங்கும் என்கிறாள் மனைவி.
ப்ளைட் ஒன்பதரைக்கு இறங்கியது. பத்து மணிக்கு டாக்ஸ்ய். வீடு சேரும் போது பதினொன்றரை.
சரி எதற்கு தமிழில் இந்த பதிவு? ரொம்ப நாள் ஆச்சுங்க அது தான்...
No comments:
Post a Comment