Sunday, September 21, 2008

எழுத்தாளனுக்கு மொழி அவசியம் இல்லை

நிச்சயமாக ஒருவனுக்கு, தொழில் முறை எழுத்து (கமெர்சியல்) அல்லாமல் இலக்கியம் எழுத, மொழி அவசியம் இல்லை.

  • மொழி தெரிந்தால் எவனும் எழுதலாம். பயிற்சி எழுத எழுத வரும். நிச்சயம் பொழுதுபோக்கு என்று எடுத்துகொண்டு, ஜாலியாக எழுத வேண்டும்.
  • தொடர்ந்து படிக்க வேண்டும், எப்படி எல்லாம், கப்சா விடுகிறார்கள் என்பதை பார்க்க.
  • கமெர்சியல் காசு பண்ணும் எழுத்து என்று ஆகிவிட்டால், எல்லாம் பார்க்க கூடாது, இலக்கியம் ஆகிவிடும் ஒரு நாள்.

நானும் இருபத்தி ஆறு வருடங்கள் மேல் ஆக (எனக்கு நினைவு தெரிந்து) என் மணம்போன போக்கிலே எழுதினேன். இணையத்தில் கடந்த சில வருடங்களாக, தமிழ் பேச்சு மற்றும் மூச்சு.

ஆனால் ஜேர்மன், பிரெஞ்சை விட, எனக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் மீது காதல்அதிகம். தாய்மொழி கன்னடம். இருந்தால் என்ன? வளர்ந்த மொழி தமிழ் அல்லவா. எனக்கு தெரிந்த கெட்ட வார்த்தை சங்க காலம் உட்பட (உதாரணம்: உக்கடம்), ஒரு தமிழனுக்கு (இக்கால) தெரியுமா என்று தெரியாது.

அதே மாதிரி பாரதி எழுதிய வன்மைகள் செய்வோம் என்பது upliftment என்று கூட சிலருக்கு தெரியாது.


தன் தோன்றிகள் என்று என் அப்பா சொல்லுவார். சுயம்புகள். சிலர் அப்படித்தான். விட்டு விட வேண்டும். சிலர் ஒரு ஐடியாவினால் பல கோடிகள் விளையாட்டாய் சம்பாரித்து விட்டு, பிறகு தமிழ் மற்றும் பல மொழி சேவை செய்கிறார்கள். தவறு என்று சொல்லவில்லை.

எப்படி என் நண்பன் சல்மான் ஹாரிஸ் கரன் ஆக சினிமாவில் நாற்பது வயதில் வலம் வர முடியுமோ, அப்படி தான் கோடிகளில் சம்பாரித்துவிட்டு, வேலைக்கு ஓய்வு வாங்கி தமிழ் பால் குடித்து வாழ ஆசை. இன்னும் ஒரு ஐந்து வருடம்?

இதை எழுத வேண்டும் என்பதற்கு எழுதவில்லை. ட்விட்டரில் வந்த சில துளிகள் தூண்டின.

நண்பர் ரமேஷ் அவர்கள் அவருடைய Paulo Coelho தொடர்பு பற்றி எழுதுகிறார். உண்மை. எழுத்தாளர்கள் வாசிக்க வேண்டிய ஒன்று.

No comments: