இன்று எனது மாமா திரு கிருஷ்ணராஜ்அவர்கள் கோவையில் காலமானார். 59 வயது. ஒரு மகள். அத்தையும் மாமாவும் ஒரு வருடமாக மாப்பிள்ளையோடு இருகிறார்கள். பேரன் பேத்தி கிடையாது. கூட பிறந்தது மூத்தவர் என் அம்மா மட்டும்.
மனசு கஷ்டமாக இருக்கிறது. என் வீட்டுக்காரி பார்க்கதேவை இல்லை என்று சொல்லி விட்டார். ஆனால் அவர்கள் பெரியப்பா இறந்தபொது மட்டும் என்னை தொந்தரவு செய்து (இதற்கும் அவர்கள் சண்டை போட்டுபோக்குவரத்து இல்லாமல் இருந்தவர்கள்) விமானத்தில் அழைத்து சென்றேன். உறவுகள் ஒரு பாலம். இது தேவையா? என்ன கொடுமை இது?
என்னை போல பி ஸ ஜ கல்லூரியில் படித்தவர். டி.எம்.இ . பி.டே.இ.இ. பால்கோ கோர்பாவில் வேலை செய்துவிட்டு, கோவை/திருப்பூர் வந்து சாயப்பட்டறை வைத்தவர். பிறகு லாஸ் ஆனவுடன் வேலைக்கு சென்றார். இருபத்து வருட கஷ்டம். சென்ற வருடம் என் தந்தை சாவிற்கு வந்த பொது தன் கடைசி தடவை பார்த்தேன். போய்விட்டு வருகிறேன் என்று கூப்பிட்டு சொல்லி சென்றார். அதுவே கடைசி. அப்போதே மனம் உறுத்தியது, ஏழெட்டு வருடம் கழித்து பார்கிறேன், என்ன இது என்று.
அத்தையை கசின் பார்த்து கொள்வாள். சித்தூர் கேரளாவில் அவருக்கு சொந்தம் உள்ளது.
இதை யாரிடம் சொல்வது, இந்த நிலைமையில் என்ன செய்வது?
No comments:
Post a Comment