அமெரிக்காவில் வேலை தேடுகிறேன்
உதவி தேவை.
*****உதவி தேவை.
நண்பர்களே... அமெரிக்காவில் வேலை தேடுகிறேன்.
ஐந்து வருடங்கள் 1994-99 அங்கு வேலை செய்துள்ளேன், மிச்சம் ஒரு வருடம் எச் 1 விசா இப்போது கிடைக்கும் என்கிறார்கள். கையில் வேலிட் பி 1 விசா இருக்கு. கொஞ்ச நாளா விசனப்பட்டுகிட்டு இருந்தேன். இன்னைக்கு வா.மணிகண்டன் பதிவு "சொர்க்கமே ..." படிச்சேன்... ஒரு உந்துதல்... துள்ளல்னு கூட சொல்லலாம்.
அமெரிக்காவிலே யாரவது வேலைக்கு எடுத்துக்கொள்வார்கள் என்றால்... மேலாளர் போன் நம்பர் அல்லது இமெயில் கிடைக்குமா?
நெருங்கிய நண்பர்கள் யாரும் உதவுவதாக தெரியவில்லை. எல்லோரும் ஒரு விதமாக (இந்தியா திரும்பியதை... என் கஷ்டம் எப்படி அவர்களுக்கு தெரியும்?) தான் பார்க்கிறார்கள்....
பி. எஸ். ஜி லே எஞ்சிநீரிங் படிச்சவுடன்... ஐ.டி. தொழில்... இப்போ 25 வருஷமாச்சு... கஷ்டப்பட்டு தான் சொந்த முயற்சியில் இவ்வளவு வெற்றி. குடும்பத்தில் அனைவரும் உதவி செய்தார்கள்.
என்னுடைய லின்க்டின் ப்ரோபையில் இங்கே பார்த்து... எனக்கு சரியான ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ணவும். இவ்வளவு நாள் யாரிடம் கேட்பது என்ற மனக்குழப்பம்....
நமக்கு இந்தியாலே ஒன்னும் இப்போ அமைய மாட்டேங்குது .... எட்டு வருஷமா சொந்தமா முயற்சி பண்ணுறேன், செலவு தான் அதிகம் ஆகுது வரும்படி குறைவு தான்.
ஒன்னுலே வெற்றி. ஏழில் தோல்வி. sharonsoftsys.com
இருக்கிற காசை வைத்து தான் வாழ்க்கை ஓடுது... எவ்வளவு காலம் தான் இந்த மாதிரி இருக்கிறது.
அஞ்சு வருஷம் அங்கிருந்தது... இன்னும் ஒரு அஞ்சு வருஷம் இருக்க ப்ளான் இருக்கு.
மற்றபடி எப்போ வெளிநாட்டில் இருந்தாலும்.... எனக்கு ராமராஜன் பாட்டு தான் மனசிலே ஓடுது... ரூவாய் ரூவாய் தான், டாலர் டாலர் தான். திருப்பூர்லே பனியன் கம்பெனி வச்சி கடைசி காலத்திலே செட்டில் ஆகணும்... பெங்களூர் சொத்தை கட்டி மேய்க்கிறது கட்டுபடி ஆகாது.... எதோ சொல்லனும்னு தோணிச்சு...
உங்களுக்கு கஷ்டம் வைக்க எனக்கு இஷ்டமில்லை.
உதவுறது உங்க இஷ்டம்... என் கஷ்டம் தீர்ந்தால் நலம்.
No comments:
Post a Comment