Wednesday, November 18, 2015

அமெரிக்காவிலே

2007 இல் எழுதிய இதை படியுங்கள்.... 

அமெரிக்காவிலே ஒரு நண்பர் 


இந்த பதிவில் எழுதப்பட்ட நண்பர் இப்பொழுது சொந்தமாக ஐ.டி கம்பெனி வைத்து தொழில் செய்கிறார் - கன்சல்டன்சி தான்.... அப்புறம் எதோ ஒரு சிறு ஷாபிங் மால் - நியூ ஜெர்சியில் பத்து சிறு கடைகள் உடையது. அவர் கம்பெனி விலாசம் அங்கு தான் இருக்கு - மூன்று மில்லயன் டாலருக்கு, வட்டிக்கு தான் என கேள்விப்படுகிறேன் - வருடம் 4% வட்டியில் பெரிய தொகை பெறலாம் - அது தான் அமேரிக்கா - 14,000 டாலர் மாதாமாதம் 3 மில்லியனுக்கு கட்டனும் - கடை வாடகைகள் அதற்கும் மேலே வரலாம்... வரும் வாடகையிலே மார்ட்கேஜ் (மாத ஈ.எம்.ஐ) கட்டிவிடலாம். மேலும் அங்கேயே ஒரு துரித உணவகம் (பாஸ்ட் புட் ) வைத்துள்ளாராம். அதுவும் நல்ல வருமானம் கொடுக்கும் விஷயம் தான் - உணவில்லாத உயிரினம் எது?

எனது பையோ டேட்டா அவர் கையில் ஓர் நாள் மாட்டும் - வேலை கொடுப்பாரா என்று தெரியாது... நிச்சயமாக எனக்கு எந்த வித ஸ்டமக் பர்னிங் கிடையாது. வாழ்க வளமுடன்.

*****
அப்புறம் சுஜாதா தேசிகன் எழுதிய இந்த கதையும் படியுங்கள்....  என் அமெரிக்கா நண்பர் அனுபவத்தை ஒத்து போகிறது.
 

ஆகவே... ஒரு கதை பிறக்கிறது!*****

கொச்சினில் இருக்கும் நண்பர் (?) அவர். என் காலேஜில் படித்தவர். சீனியர். ஒவ்வொரு முறை பெங்களூரு வரும் பொது என்னை கூப்பிடுவார். அவர் நடத்தும் ட்ரெயினிங் கம்பெனிக்கும் பணம் தேவை (என்னைப்போல) என்று சொல்லுவார். நானும் அவரை காபியோ, சாப்பாடோ (அதிக விலை பப்பே தான்) வாங்கி கொடுத்து அனுப்புவேன். நாலு பேர் தெரிந்துக்கொண்டால் நல்லது தானே எனக்கும் ஒரு நாள் உதவி என்று நினைத்துக்கொள்வேன். இன்று காலை தான் தெரிந்தது அவர் சொந்தமாக கம்பெனி எதுவும் வைக்கவில்லை, இன்னொருவருக்கு (அவர் மூலம் தான் தெரிந்தது) வேலை செய்கிறார் என்று. இப்படியும் சிலர். பொய் பேசுவது பெரும் வியாதி... எல்லாம் சிறிது உணவிற்காகா?*****

 

 

2 comments:

Vijayashankar said...

ஆகவே... ஒரு கதை மீண்டும் பிறக்கிறது!

அமெரிக்காவிலே ஒரு தொடர்ச்சி....

sundara vadivelu said...

ரஜினிக்கே சம்பந்தி கஸ்தூரி ராஜாவால் தலைவலி.. சூப்பர் ஸ்டார் என்றாலுமே கூட, குறிப்பிட்ட சிலர் நிமித்தம் மண்டைக் கொடைச்சல் தவிர்க்க சாத்யமற்றுப் போய் விடுகிறது.. அப்படி இருக்க, நம்போன்ற நார்மல் பீப்பிள்ஸ் க்கு ?..
இது கதை என்கிற உணர்வை விட, உமக்கு நிகழ்ந்த மற்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிற யதார்த்தமான அவஸ்தைகளின் தொகுப்பாகவே உணர முடிகிறது... நல்லதொரு மாற்றம் அனைவருக்குமே சாசுவதம் .. சற்றே தாமதித்தாலும் மறுபடி ஒரு பொற்காலம் நாம் எதிர் நோக்கிய விதத்தில் சுலபாகி விடுகிற மேஜிக் நடக்கத் தான் நடக்கும்..