Monday, March 03, 2014

அவன்

நண்பன்டா ....  அவன்...


கல்லூரிக்கு பிறகு அவன் இத்தனை காலம் கோவையில் பிஸினஸ் செய்வதாக சொல்லிக்கொண்டு இருந்தார். தவறுதலாக லிங்க்டின் அழைப்பில் உண்மை வந்தது.
 
அந்த நண்பர் 6 வருடங்கள் நிஜமாக பிஸினஸ் செய்துவிட்டு விசா கோர்ஸ் மூலம் அமெரிக்கா சென்று இப்போ இன்போசிஸில் டெக்சாஸ் க்ளையண்ட். எப்படியோ நல்லா  இரு!
 
கோவை சென்றபோதெல்லாம் அவன் இந்தியா போன் நம்பரை கால் பண்ண முடியலே. மெயில் காண்டெக்ட் மட்டுமே. அப்போ என்னை இந்தியா வரும்போது மட்டுமே அழைத்துள்ளான்.

குடும்பக் காரணத்திற்காக நான் இந்தியா 99 திரும்பிய நேரம் அவன் அமேரிக்கா புறப்பட்டு சென்றுள்ளான். அவன் வீட்டிருக்கும் ஏரியா போயுள்ளேன்.

எதற்காக இப்படி இருந்தான் என தெரியலே. இதற்கும் கல்லூரியில் வேறு டிபார்ட்மெண்ட். தமிழ் மன்றம் மூலம் பழக்கம்.

ஒருவன் எதற்காக நல்ல நிலைமையில் இருப்பதை வெளியில் காட்டிக்கொள்வதில்லை? அவனிடம் வேறு ஒரு குறையும் இல்லை.

அமெரிக்காவை பற்றி மிகவும் கேவலமாக சொல்லிக்கொண்டு திரிந்தவன் அவன். நான் அமெரிக்க பல்கலைகழகத்திற்கு அப்பளை செய்ததை வெறுத்தவன். இப்போ அவன் எம்பியே.
.
லிங்கடின்னில் பார்த்தால் கல்லூரி நண்பர் ஒருவரும் அவன் க்ரூபில் இல்லே. கல்லூரி பெயர் குறிப்பிடாமல் போடோ மட்டும் வைத்துள்ளான்.

என் பிரச்சனை என்னவென்றால், சில மாதங்கள் முன் பேசியவன் முதல் முறையாக வெளிநாடு செல்கிறேன் என்றான். இதில் என்னமோ உள்குத்து இருக்கு.

ஆதங்கத்தை வெளிபடுத்த சோசியல் மீடியா தான் துணை.  இதையும் அவன் படிப்பான் உணர்ந்துக்கொள்வான். நல்லா இருடா நீ.
 

No comments: