Wednesday, February 10, 2010

கேர்ட் ரைஸ் பதிவு + தமிழ் படம்

'தமிழ் படம்' (சினிமா) பார்த்த போது சிரித்த சிரிப்பு,  ஜவர்லால் அவர்களின்  "கேர்ட் ரைஸ்' பதிவு கொடுத்தது…

இங்கே  படியுங்கள்

ஜொனபொன்டாவில் அட்வான்ஸ்ட் இங்க்லீஷ்

நான் ஜொனபொன்டா உடனே போய் ஆக வேண்டும்! ( மனதில் மின்னலடிக்குது 'வேட்டா' கோச்சிங் ஆபர்சுனிட்டி )

//நண்பர் விஜயசங்கர் ஆனந்த பவனில் எத்தனை நேரம் நின்றாரோ?//
காணும் பொங்கல் அன்று பரோட்டா மட்டும், சாதம் இல்லை கூட்டம் இல்லை!
குழந்தைகள் விருப்பம் – லேயர் லேயராக தமிழ்நாட்டில் தான் வரும், பெங்களூரில் அட்டை மாதிரி இருக்கும்!
சுட்டு வைத்தது பத்து நிமிடத்தில் சூடேற்றி வந்தது. என்ன ஐஸ் க்ரீம் தான் – பக்கத்து கடைக்கு சென்று வாங்கி வர லேட் செய்தார்கள்.

***

தமிழ் படம் மிகவும் ரசித்த மசாலா. பூர்ணிமா தியேட்டரில் சென்ற சனி சாயந்திரம் நாலரை மணி சோவுக்கு  ( குடும்பத்தோடு ) சென்றோம். பக்கத்து கடையில் வாங்கிய வெஜ் பப்ஸ் , சிப்ஸ், தண்ணீர் பாட்டில் சகிதம் உள்ளே சென்றோம். எழு மணிக்கு வெளியே வந்து பார்க் செய்த ( ஒரே கார் ) எடுக்க - நூறு பைக்குகள் செல்லும் வரை வெயிட்டிங்.

அலை கடலென கூட்டம் இருக்கும் என்று பார்த்தால், பால்கனியில் நாங்கள் நால்வர் மட்டும்! குழந்தை இருவருக்கும் சேர்த்து ஒரு டிக்கட் தான்! ( மீண்டும் சென்னையில் டிஸ்கவுன்ட் டிக்கட் வாங்கிய ஞாபகம் ) ஐநாக்ஸில் இந்த ட்ரிக் செல்லாது!

படம் அட்டகாசம். மிர்ச்சி சிவா சூப்பராக நடிக்கிறார். வாய்ஸ் மாடுலேஷன் ஓவர். அந்த பவுலிங் பரதனாட்டியம் அருமை! ப்ளேஷ் பார்வர்ட் சைக்கிள் சுத்துவது, ஒ மகசியா பாடல் ( சுத்தம்... புரியாத சந்தங்கள்... ), வில்லன் ட்விஸ்ட் ( பாட்டி! ), ஒரு ஹீரோவையும் விட்டு வைக்கவில்லை. கொஞ்சம் தெலுங்கு ஹீரோகளையும் கலாய்துள்ளார்கள் ... அப்புறம் தேவை இல்லாத குத்து டேன்ஸ். அசிங்கம். ராமராஜன் நக்கல் - மேலே உள்ள படம் படத்தில் கட்டு. ராஜ்கிரண் நக்கல் ( சோலையம்மா... ) ... வில்லன்களை கொல்லும் விதம் - ஆங்கில ஸ்பூப் படத்தில் கூட இப்படி யோசித்து இருக்க மாட்டார்கள். வசனகர்த்த சந்துருவும் (ப்ளாகரான) , டைரக்டர் சி.எஸ்.அமுதனும் சூப்பர்.

ஒவ்வொரு சீனையும் அனுபவித்து எடுத்துள்ளார்கள்.

மொத்தத்தில் பாசை புரியாத அனைவருக்கும் புரியும் படம் தமிழ் படம். வெற்றி படம்.

No comments: