Wednesday, February 24, 2010

பாலாஜி மகிமை

நண்பர் ஸ்ரீதர் நாராயணன் எழுதிய பதிவு படித்தேன்...

"கடவுள்களின் கார்னிவெல்"


தெலுங்கு பிட்டாக்களின் மகிமை. இரண்டு சங்கம், நான்கு கோவில்கள் என்பது அவர் கணக்கு. கூட்டம் அதிகம், குடும்பங்கள் சகிதமாக அமெரிக்காவில் குடியேறுபவர்கள்...

சேன் ஹோசே கோவில் எங்கு இருக்கிறது? நான் அங்கு பல முறை சென்றும், நான்கு மாதங்கள் குடும்பத்தோடு இருந்தும் ஒரு கோவிலும் கண்ணில் படவில்லை. ஒரே ஒரு முறை நண்பர் வீட்டின் அருகில் வியாழன் இரவு - பாபா பஜன் என்று அழைத்தார்கள், சென்று உணவு அருந்தி வந்தோம். ( பிட்சா பிரசாதம் உட்பட ) ... லிவர்மோர் தான் பல முறை சென்று வந்தோம்.

சிகாகோவில் இரண்டு பிரதான கோவில்கள் உள்ளன அல்லவா?

அப்புறம் ப்ரிஜ்வாடர் கோவில் "வாழ்க வளமுடன்" பக்தர்கள் நடத்துவது அல்லவா?

யு.கே. - பெர்மிங்கேமிலும், லண்டனிலும் - பாலாஜி மகிமை தான். இலவச உணவும் உண்டு. பிரசாதம் மட்டும் ஒரு ருபாய், கோவில் உள் கொடுப்பார்கள் அங்கேயே சாப்பிடக்கூடாது!

--
Regards
Vijayashankar

No comments: