Friday, May 08, 2009

பேருந்து பயணம்

நாங்கள் எங்கு சென்றாலும் கார் தான் என ஆகிவிட்ட நிலையில், பேருந்து மூலம் செல்லலாம் என்று எண்ணம் பெங்களூரில் வால்வோ பஸ் வந்த பிறகு நிகழ்வு ஆனது.

சென்ற வார இறுதியில் மெஜெஸ்டிக் வரையில் சென்று வந்தோம்.

ஒருவருக்கு இருபது ரூபாய். குழந்தைகள் உட்பட நான்கு பேருக்கு என்பது ரூபாய்.

அரக்கரை தொடங்கி மெஜெஸ்டிக் வரை பயணம்...

********

ப்லேஷ்பேக்...

அமெரிக்காவில் இருந்து திரும்பியவுடன், ஒரு முறை சாதா பஸ்ஸில் டரியல் செய்தோம்.... குமார பார்க் முதல் போஸ்ட் ஆபிஸ் வரை.... சந்தோசமாக ஆஹா என்று இருந்தோம்... போஸ்ட் ஆபிஸ் (ஜெனெரல்) அருகில் இறங்கியவுடன் தான் கவனித்தோம்... என் மனைவி பர்சில் இருந்த ஒரு குட்டி பர்சை பிக் பாக்கட்டில் தொலைத்து விட்டார். முன்னூற்றி சொச்சம் காலி. அடித்தவர் ஒரு காலேஜ் பெண்ணாக தான் இருக்கும்... பக்கத்தில் உட்கார்ந்தவர்.

நல்ல வேலை என் பாக்கட்டில் பர்ஸ் பாத்திரம்... சாளுக்கியாவில் சாப்பாடு எதோவென்று இறங்கியது... சினிமா பிளானும் கட். அந்த சமயத்தில், ஆட்டோ எடுத்து, அலங்கார் பிளாசா சென்றோம்.

அது முதல் பெங்களூரில் எங்கு சென்றாலும் ஆட்டோ தான். ( ஆகஸ்ட் 1999 இல் கார் வாங்கியவுடன், முடிந்த வரை கார் பயணம், சில இடங்களுக்கு கார் நிறுத்தம் ப்ராப்ளம் என்றபடியால் - அப்போதே சர்ச் ஸ்ட்ரீட் குளறுபடி தான் ).

திருப்பூருக்கு போனால் மட்டும், லோகல் ட்ரிப் பஸ். மனைவி ஊருக்கு போய் வருவது கார் தான் என்றாலும், சில சமயம், நான் வேண்டுமென்ற பஸ்சில் செல்ல ஆசைப்பட்டு செல்வோம்.

பஸ் பயணம் மீது ஒரு காதல் தான்...

நான்கு வருடம் நான் பி.எஸ்.ஜி டெக்கில் படித்த காலத்தில், தினமும் 1986 முதல் 1990 வரை, காலை ஏழு மணி பஸ் தான். சரியாக எட்டே காலுக்கு காலேஜ் வாசலில் இறக்கி விடுவார்கள். வீடு திரும்புவது, சாயந்திரம் ட்ரெயினில்... மதியம் வகுப்பு இல்லாவிட்டால், உடனே ஒரு மணி சி.டி.சி பஸ்!

பஸ் ஏறி உட்கார்ந்த வுடன் ஒரு மப்போடு தூக்கம் வரும். கண்டக்டர் சரியாக எழுப்பி விட்டுவிடுவார். கலங்கலான கண்களுடன், நன்றி கலந்த பார்வை செலுத்திவிட்டு இறங்குவேன்!

எக்சாம் சமயம் எல்லாம், திறந்து வைத்த புத்தகம், பாட்டு சத்தம் என படிப்பு. மதியம் எக்சாம் இருக்கும் சமயம், 12 மணிக்கு கிளம்பினால், இரண்டு மணி எக்சாம் எழுத சரியாக இருக்கும், மூன்று மணி நேரம் எழுதிவிட்டு ஆறு பத்து ட்ரெயின் பீளமேட்டில் பிடிப்பேன். ஒரு ரூபாய்க்கு வருத்த கப்பி சிப்ஸ் வாங்கினால் கொருக்கிக்கொண்டே ஒரு புத்தகம் படித்துக்கொண்டு, திருப்பூர் இறங்க எழேகால் ஆகும். பி.எஸ்.ஜி ஆர்ட்ஸ் மக்கள் சிலர் பழக்கமானது அப்படி தான். சில சமயம், சுஜாதா, சுபா, ராஜேஷ்குமார் புத்தகங்கள் துணைக்கு வரும்...

ஜி.ஆர்.ஈ., டோபுல், ஜி.மேட்., கேட் என எக்சாம் பேப்பர்கள் பற்றி பேசுவோம். அப்படி கிடைத்த ஒரு நண்பர், இப்போது என் மனைவியின் ஒன்று விட்ட தங்கை மாப்பிள்ளை. திருப்பூரில் நல்ல பணக்கார வியாபாரிகள், இப்போது கண்டுக்கொள்வதில்லை. கல்யாணம் சமயமும் தெரிந்ததாக காட்டிக்கொள்ளவில்லை. என்ன வீரா?

ஒரு முறை ஆறாம் செமஸ்டர் சமயம், அவினாஷி தாண்டி தெக்கலூர் அருகில் ஒரு பெரிய ஆக்சிடன்ட், 1989ம் வருடம். ஒரு மணி நேரம் வண்டி லேட். இரண்டரைக்கு தான் எக்சாம் ஹாலில் இருந்தேன். எப்படியோ அந்த பேப்பர் பாஸ் செய்தேன்...

****

நிகழ்காலம்,

அரக்கரை ஏறியவுடன், கடைசி சீட்டில் அமர்ந்துக்கொண்டோம். ஏசி காற்றில் குழந்தைகள் நன்றாக சந்தோஸித்தனர்! நல்ல வேலை பஸ்சில் பிக் பாக்கட்ஸ் இல்லை... ( இருக்கிறதா தெரியவில்லை )

அலங்கார் பிளாசா அருகில் இறங்கி சுற்றினோம்..... சில துணிகள், கண்டி ஸ்வீட்சில் காஜு பக்கோடா வாங்கினோம்.

மீண்டும், பத்து நிமிட நடை தூரத்தில், இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் 365 J ஏறி, வீடு சென்றடைந்தோம்!

என்ன இருந்தாலும் பேருந்து பயணம் மாதிரி கார் அல்லது ஆட்டோ பயணம் இருக்காது!

---

நன்றி
விஜயஷங்கர்
பெங்களூரு

5 comments:

Vijayashankar said...

சங்கமம் பேருந்து போட்டிக்காக எழுதியது. இங்கே லிஸ்டை பாருங்கள்.அப்புறம் புடிச்சிருந்தா மறக்காம வோட்டு போடுங்க. ;-)

Ramesh said...

பேருந்து அனுபவங்களை நன்றாக எழுதியிருகீங்க நண்பரே! வாழ்த்துக்கள்.

அளவான சொற்கள். நல்ல நடை. சொல்ல வந்த கருத்துக்கள் இனிமை. மொத்தத்தில் பரிசு நிச்சயம்.

Raju said...

ரொம்ப அருமையா, சுவையா இருக்குங்க சார்.

DIVYA said...

Very nice! Good Luck!

Vinitha said...

எதார்த்தமாக, எளிய நடையில் அனுபவம் உள்ளது...

வெற்றி பெற வாழ்த்துக்கள்!