Friday, April 17, 2009

பெங்களூரும் வெய்யிலும்

நான் பிறந்து (கோத்தகிரி) வளர்ந்த திருப்பூர் வெய்யிலை இப்போது பெங்களூரில் பார்க்கிறேன். பாட்டி வீட்டிற்க்கு பெங்களூர் வரும் சமயம் ( 70's - 80's) இவ்வளவு வெய்யில் இருந்தது இல்லை.

சென்னையில் இருந்த வரை ஏசி இருந்தது. பெங்களூரில் எதற்கு என்று இருந்து விட்டோம். இப்போது தெரிகிறது. ஏசி வாங்கலாம் என்றாலும், கம்பிகளை அறுத்து ஏசி பிட் செய்யணும். வீட்டு ஓனர் ஒத்துக்கொள்ளவில்லை.

இப்போது குழந்தைகளும் வீட்டில் விடுமுறையில் உள்ளனர். எப்போதும் டிவி தான். கொடுமை. வெய்யில் குறைந்தால் வெளியில் விளையாட செல்கிறார்கள்.

ட்ராயிங் க்ளாசுக்கு அனுப்பினோம். அங்கு பேன் காற்று குறைவு, உப்புசம் என்று போகவில்லை. ஆயிரம் ரூபாய் கட்டியது பனால்.

தினமும் மனைவி ஸ்நாக்ஸ் வாங்ககிறார், வாரும் ஒரு முறை வாங்கியது இப்படி ஆகிவிட்டது. ரிசசென் காலத்தில் இப்படி...

எல்லோரும் இப்படி தான் பெங்களூரில் இருக்கிறார்களா?

No comments: