Monday, July 15, 2013

வாகன ஓட்டிகளின் மூட நம்பிக்கைகள்


has written in Facebook on the nuances of the people who drive!!!!  Super Super Super!!!!!

Please share

_____
வாகன ஓட்டிகளின் மூட நம்பிக்கைகள்:
-------------------------------------------------------

• ஹார்ன்-லிருந்து கை எடுத்தால் வண்டி நின்று விடும் அல்லது விழுந்துவிடும்.

• ஹார்ன் அடித்தால் முன்செல்லும் வாகனங்கள் எல்லாம் மாயமாக மறைந்துவிடும்.

• சிக்னலில் 4 என்கிற எண்தான் 0வுக்கு சமம். 4 விநாடி என்று காட்டப்பட்டாலே வண்டிகள் விரைய வேண்டும்.

• நான்கு விநாடி காட்டப்பட்ட பின்னரும், 0-வுக்குக் காத்திருந்து, வாகனத்தை எடுக்காமல் நின்றிருப்பவன் இந்த உலகத்தில் வாழத் தகுதியற்றவன்.

• பெட்ரோல் டேங்கைப் பாதுகாக்க, ஹெல்மெட்டை அதன் மீது வைத்தே ஓட்ட வேண்டும்.

• ஹெல்மெட் அணிவதால் முடி கொட்டும். உயிரை விட மயிரே பிரதானம்.

• ஹெல்மெட்டைப் போட்டுக் கொண்டாலும், அதன் ஸ்ட்ராப்பைப் போடுவதோ, அல்லது காரில் சீட் பெல்ட் போட்டுக் கொள்வதோ ஆண்மைக்கு இழுக்கு.

• பின்னால் வருபவர்கள், நம்மை விட அறிவாளிகள். நாம் வண்டியை எந்தப் பக்கம் திருப்பப்போகிறோம் என்பதை, அவர்கள் இண்டிகேட்டர் போடாமலே அறிந்து கொள்வார்கள்.

• டூவீலரில் ரியவியு மிர்ரர் வைத்திருப்பது வண்டியின் அழகைக் குறைத்துவிடும்.

• யு டர்ன் இல்லாத இடத்தில், வாகனத்தைத் திருப்புவதால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது.

• காலை 8 மணிக்கு முன்னரும், இரவு 10 மணிக்குப் பின்னரும் சாலைவிதிகளைக் கடைபிடிக்க வேண்டியதில்லை.

• FREE LEFT என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், சாலையை அடைத்துக் கொண்டு வாகனத்தை நிறுத்துவதை, ட்ராஃபிக் போலீஸ் உட்பட எவரும் கேள்வி கேட்க முடியாது.

• சிக்னலில் வாகனங்கள் நின்று கொண்டிருக்க, அவற்றின் பின் நிறுத்துவது தேவையில்லாத வேலை. முடிந்த வரை முண்டியடித்து, முன் சென்று நிறுத்தவேண்டும்.

• ஸ்பீட் ப்ரேக்கரைத் தாண்டும்போது, வேகத்தைக் குறைக்காமலே தாண்டவேண்டும். அல்லது, ஸ்பீட் ப்ரேக்கரின் இரு முனைகளிலும் இருக்கும் சிறுவழியில் கடக்க வேண்டும்.

• பார்க்கிங்-கில் வாகனத்தை நிறுத்தும்போது எப்படி வேண்டுமானாலும் நிறுத்தி, முன் நிறுத்தியவருக்கு இடைஞ்சல் தருவது நம் உரிமை.

• கார், பைக், பஸ், லாரி, வேன் போன்ற வாகனங்களில் டிம் லைட் என்கிற ஒரு வசதி இல்லவே இல்லை. அல்லது அப்படி ஒன்றைப் பயன்படுத்துவது தவறு.

* அரசு - தனியார் பேருந்துகள் பயணிகளை இறக்கிவிட, நடுரோட்டில் மட்டுமே நிறுத்தவேண்டும். ஓரமாக நிறுத்தினால் நிற்காது.


My Comment

Super! Same applies to Bangalore too. Here Traffic Police is ornamental.... they just stand and watch and work only when the ministers, or VIP pass.

3 comments:

Unknown said...

இதை எல்லாம் படிக்கும் போது புரிந்தது ...இவ்வளவு உன்னிப்பாக கவனிப்பவர் விஜயசங்கர் ஆக இருக்க முடியாது 'CID சங்கர் 'ஆகத்தான் இருக்கணும் !துப்பறிந்தவிதம் அருமை !

Vijayashankar said...

thanks for the visit.

That post is from Parisalkaaran in Facebook.

Unknown said...

திருப்பூரில் இடது புறம் வாகனத்தில் திரும்புகிற சுதந்திரம் அறவே இல்லை.. ஏனென்றால் எதிர்ப்புறமாக வருகிற புத்திசாலி அந்த வலதுபுற ஓரத்தில் திருப்புவது தான் டிரைவிங் ரூல்ஸ் என்கிற விதமாக ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக அந்த வலது ஓரத்திலேயே தான் தனது வண்டியை திருப்பிக் கொண்டு வருவான்.. அந்த ரோட்டுத் திருப்பத்தின் நடுமய்யத்துக்கு வந்து திருப்ப வேண்டுமென்கிற ஓர் மிக சாதாரண அறிவு கூட வேலை செய்வதில்லை.. அந்தத் திருப்பத்தில் நிகழ்கிற டூவீலர் விபத்துக்களின் போதெல்லாம் அந்த வலதுபுறம் பார்த்து ஓட்டிவந்த மகராசன் தான் பெரிய சவுண்டு விடுவான்.. இடதுபுறம் வந்தவன் அறிவு கெட்ட பயல் என்றும் வண்டி ஒட்டவே லாயக்கு அற்றவன் என்றும் திட்டு வாங்கிக் கொண்டு போவதைப் பார்க்கையில் .... என்னாங்கடா பொழப்பு இது என்று தோன்றும்..