திரு ஜவர்லால் அவர்கள் சில கேள்விகள் கேட்டிருந்தார்....
1. உலகத்தில் இருக்கிற எல்லாரும் செத்துப்
போய் விட்டார்கள். நீங்களும், அருகில் ஒரு அழகான பெண்ணும் மட்டும்தான்
இருக்கிறீர்கள். அப்போது நீங்கள் அவளிடம் என்ன சொன்னால் அபத்தமாக
இருக்கும்?
(௧) இங்கிருக்கிற பெண்களிலேயே நீ தான் ரொம்ப அழகு.
(௨) நம்ம குழந்தைக்கு எங்கே அட்மிச்சன் வாங்குறது?
2. மனைவியிடம் (அல்லது கணவனிடம்) சொல்லக் கூடாதது எது?
உன்னை
விட அவர் / அவள் அழகு! நீயெல்லாம் சுத்த வேஸ்ட்! உன்னை கட்டி என்ன
பிரயோஜனம். எங்கப்பா நல்லா வரன் பார்த்திருந்தார். ஜஸ்ட் மிஸ்.
3. காதலுக்குக் கண் இல்லை என்கிற
வாக்கியத்தை மட்டும் உபயோகித்து அதற்கு அர்த்தம் காதலுக்குக் கண் உண்டு
என்பதுதான் என்று நிரூபிக்க வேண்டும். எப்படி?
காதலன் ஒருத்தியிடம், " நீ எவ்வளவு தான் அவனை விரும்பினாலும் உன் காதலுக்கு கண் இல்லை சரியாய், ஏன்னா நீ என்னை சரியா புரிந்துக்கொள்ளலே! "
No comments:
Post a Comment