Saturday, November 19, 2011

ஒரு எரிச்சல்

ஒரு எரிச்சல்... இதை படித்தவுடன்...

பேச்சு மொழி அந்த ஊருக்கு தகுந்த மாதிரி இருந்து விடட்டும்.  அழகு. எழுத்து வடிவம் ஒரே மாதிரி இருக்க வேண்டும். டொராண்டோவை ற்றோண்டோ ஆக்குவதால் பயன் என்ன? டீச்சரை ர்றீச்சர் ஆக்குவதால், என் ஆசிரியை அடிக்க வருவார். (ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை குறை கூறவில்லை.) நிறை பெற விளைகிறேன்.

இதில் கொடுமை என்னவென்றால், ப்ரேசென்டேசன் என்று சொல்லாமல் பரதீட்டு என்று தீட்டிக்கொண்டு உள்ளார்கள் சிலர்.  தமிழ் மீது உள்ள காதல் நகர்ந்து போகிறது.

ஏற்கனவே, சினிமா செய்திகளால் ஜனரஞ்சக ஊடகங்கள் கெட்டு  கிடக்கின்றன, இலக்கியம் இல்லை. தரம் குறைவு.

நல்ல வேலை ஜோதிடம், பக்தி போன்ற புத்தகங்களில் இந்த நயவஞ்சகம் இல்லை.
 

No comments: