Wednesday, June 16, 2010

ஐ.டி துறை மூலம் விலைவாசி ஏறுதா ?

ஐ.டி துறை என்றாலே விலைவாசி ஜாஸ்தி செய்துவிட்ட ஆட்கள் என்ற பட்டம் இருக்கு.

வேலைக்கு போகும் போது நல்ல துணி உடுத்த வேண்டும் என்ற ஆடம்பரம் இல்லா நிலை  - துணிக்கடைக்கு வியாபாரம், மேன்மேலும் அதிகம் சம்பாரிக்க ஆசைப்பட்டு விலை அதிகமான ஐட்டங்கள் வரும். அது தான் பேசன் என்று விளம்பரம் டிவி மூலம் செய்வார்கள். கெட்டது குட்டிசெவுரு... கிளிஞ்சது அப்பன் டவுசரு என்று சொல்வார்கள். அந்த கதை தான்.

வாங்கும் சம்பளத்தை விட அதிகம் செலவு செய்ய வைக்கும்.

வீடு வாங்குவதும் அப்படிதான்...

நண்பர்கள் வாங்கினால் இடம் வாங்க தூண்டும் அபார்ட்மென்ட் வாங்க வேண்டும் என்ற ஆசை வரும். அவர்களுக்கும் ரெபரல் பீ கிடைக்கும். மாதத்தவணை கொடுக்க வங்கிகள் ரெடி.

இரண்டு வருடம் முன் ஒரு இடம் வாங்கினேன். ( நண்பர் சொல்லித்தான் ) இன்னும் விலை ஏறவில்லை. பார்ப்போம்... :-) இருப்பதற்கு சொந்த வீடு இல்லை.அது ஒரு தனி கதை. ( ஒரு ஊரில் நிலை இருந்தால் தானே? )

ஐ.டி. துறையில்  வரும் சம்பளத்தில் ( நிலையான வேலை கிடையாது ) எல்லாக்கடன்களும் கட்டியது போக, மேற்கொண்டு செலவு செய்ய ( கல்யாணம் ஆகி இருந்தால் ) பெர்சனல் லோன் வாங்குவார்கள்.

 










சேமிப்பு என்ற வழி இருக்காது.

இன்சூரன்சுக்கே (அதை ஏன் கேட்கிறீர்கள்... உயிர் மதிப்பாம்... ஹெல்த் பாலிசியாம் - எதோ நோய் வந்துவிடும் என்கிற மாதிரி... தேவையில்லாமல் சாப்பிட்டால்  - பணம் வருகிறது என்று... நோய் வரத்தானே செய்யும்? ) கடன் வாங்கி கட்டும் நிலைமை வரும்.

இதற்கு அரசாங்கம் துணை போகும். எப்படி? டேக்ஸ் பெனிபிட். இப்படி வருடம் வருமானத்தில் பாதி போய் விடும். மீதி, கஷ்டம் தான்.

நல்ல வேலை சூதாட்டம் மாதிரி ஸ்டாக் மார்கட் இருக்கு. முசோல் பண்டு இருக்கு. எப்படியும் கம்பெனி ஸ்டாக்குகள் ( குதிரைகள்? ) விலை ஏறி இறங்கிகொண்டு தான் இருக்கும். எவனாவது மடையன் இருபது வருடத்தில் ஆகும் மதிப்புக்கு இன்று வாங்க சொல்வான் டிவியில். நாங்களும் நம்பனும்.  விலை இறங்கினால்... இதெல்லாம் சகஜம் என்பார்கள். குருட்டு அதிர்ஷ்டம் என்பார்கள். அது இருந்தால் போதும்.

இங்கே நண்பனுக்கு நண்பன் தான் எதிரி. கல்யாணம் ஆகியிருந்தால் மனைவிமார்கள் மற்றவர்களை பார்த்து நச்சரித்து - வாழ்க்கையை கெடுக்க ப்லேன் கொடுப்பார்கள். அது வேண்டும், இது வேண்டும் என்று... கொடுமைங்க அது. கல்யாணம் ஆகாதவர்கள் தேவையில்லாமல் துணிக்கு, ஹோட்டல் சாப்பாடுக்கு ... என்று செலவு செய்வார்கள். மேகி நூடில்ஸ் இருக்கு சிலருக்கு. ( கேரளா நண்பர்கள் இரவில் நேந்திரம் பழங்கள் மட்டும் - நல்ல பழக்கங்க அது )  நன்றாகவே மிச்சம் செய்வார்கள். பிழைக்க தெரிந்தவர்கள்.


எவ்வளவு பணம் இருந்தாலும்... அம்மா வீட்டிற்கு கொடுக்கணும்.. சம்பளம் வரவில்லை என்றால் யாருக்கு கவலை? அது தான் நீ வேலை கிடைத்தவுடன் மாதம் லட்சங்களில் அள்ளுவியே? என்பார்கள். தங்கை குடும்பத்திற்கு அழுகனும்...

காரில் செல்வார்கள் பஸ் மூலம் செல்லும் இடத்திற்கு.... மூன்று மடங்கு பணம் கொடுத்து சினிமா பார்ப்பார்கள் - மல்டிப்லேக்சில்...

ரிசசெனில் வேலை போனால், ஒருத்தனும் பார்க்க கூட வர மாட்டார்கள். செலவு செய்ய முடியாதே!

அதென்னவோ வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கஷ்டப்பட்டு தான் பாட வேண்டும் என்ற விதி போல. கேட்கும் போதெல்லாம் என்ன பண்றது கஷ்டம் என்பார்கள். எனக்கு சில தெலுகு நண்பர்கள் இருக்கிறார்கள்... நல்ல மாதிரி - உள்ளதை உள்ளபடி சொல்வார்கள்...  அவர்கள் இனத்திற்கு மட்டும் உதவுவார்கள்.

கடைசியாக வேலை தேடுவதற்கு நண்பர்கள் உதவுவார்கள் என்ற நம்பிக்கை வாழ்கையில் வைத்துக்கொண்டு வாழ வேண்டியது தான்.

விலைவாசியாவது மண்ணாங்கட்டியாவது .

நண்பரே எங்கே போகணும், கிரெடிட் கார்ட் இருக்க பயம் ஏன்!

என்ஜாய் மாடி...

No comments: