Wednesday, January 20, 2010

தெனாவெட்டுகள் - அமெரிக்கா வாழ் இந்தியர்கள்

அமெரிக்கா வாழ் இந்தியர்கள் பற்றி நிறைய சொல்லலாம்.
நானும் அங்கிருந்தவன் தான். மனதார சொல்லுகிறேன் என்னால் முடிந்த வரை நண்பர்களுக்கு உதவியுள்ளேன். ஒரு சமயம் நண்பர் ஒருவருக்கு ( சிறிது காலம் பழகி இருந்தாலும்) ஐந்தாயிரம் டாலர்கள் வட்டியிலா கடன் கொடுத்து ஒரு வருடம் கழித்து திருப்பி வாங்கியுள்ளேன்! எதற்கு - அவர்கள் ஊரில் வீடு செட்டில்மென்ட் இருப்பதால், இவர் செல்ல முடியவில்லை... பணம் தான் சென்றது. வீடு மிஞ்சியது!

அமெரிக்கா வாழ் இந்தியர்கள் பற்றி தெனாவெட்டுகள் என்று எதானால் சொல்லுகிறேன்? தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருப்பவர்கள், மற்றவர்களுக்கு உதவி புரியாமல் அவரவர் வாழ்க்கையை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். தவறு ஒன்றும் இல்லை!

என் அண்ணனும் என்னை இன்றும் தெனாவெட்டாக இருப்பவன் என்று தான் சொல்லுகிறார். பழகிவிட்டது போல. அட்டிடூட் ப்ராப்ளம்? இது அமெரிக்காவில் இருந்து பிடித்து வரப்பட்ட நோய் போல?

ஒரு முறை நான் ரெடிங் என்ற ஊரில் இருந்த ஒரு சமயம், நிறைய ஆணி ( பக்ஸ் ) பிடுங்க வேண்டி இருந்த சமயத்தில், என் உறவினர், பதினாறு மையில்கள் கிழே தள்ளி போகும் ஹைவே பாதையில் ( ரூட் 76 ) இருந்து வரும் போது, வந்து பார்க்கிறேன் என்றார்... என் நிலைமையை சொல்லி, வேண்டாம் இப்போது, மற்றுமொரு முறை பார்க்கலாம் என்று சொல்லிவிட்டேன். கொடுக்கிற காசிற்கு வேலை செய்யும் எண்ணம் தான்! அவரும் புரிந்துக்கொண்டார். டென்சன்!

மற்றொரு சமயம், இரண்டு காரில் பத்து நண்பர்கள் வந்து ஒரு சிங்கிள் பெட்ரூமில் கொட்டம் அடித்தது தனி கதை. எல்லா வேலையும், உணவு உட்பட என்னை எதிர்பார்த்தார்கள்!

ஆனால் என் சொந்தங்கள் ( மிக பெரிய கோடீஸ்வரர்கள் ) அங்கு வந்த சமயம்... ஒரு மாதம் டூர், சொந்தங்கள் இருந்த இடத்தில மட்டும் பைல் ஆன், சில நாட்கள் இருந்தாலும் அவர்களே ஊர் சுற்றிக்கொண்டார்கள். ஹாலில் தான் படுத்தார்கள். சமையலும் அவர்களே பார்த்துக்கொண்டனர். நான் தான் ஒரு வீகென்ட் விடாப்பிடியாக நியூ யார்க், நியூ ஜெர்சியில் சில இடங்களுக்கு அழைத்துச்சென்றேன். இன்றும் அதை நினைவு கூர்ந்து சொல்லுகிறார்கள்... ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும்!

சில சமயம் புது கன்சல்ட்டேன்ட்ஸ் வரும் போது, என்னோடு ( தனியாக இருந்த சமயம் ) தங்க வைத்து ( இலவசமாக தான்! ) அவர்களை வீடு பிடிக்க உதவி செய்து ( ரெபரல் fee இல்லாமல் ) இந்தியன் ஸ்டோர்ஸ் இருக்கும் இடம் அழைத்துச்சென்று வருவேன். காசு கடன் கொடுப்பதும் உண்டு! ( கையில் டாலராக இருக்கும் - எடுத்து செலவு செய்யமாட்டார்கள் - இந்தியாவுக்கு அனுப்பனும் அல்லவா? எவனோ செலவு செய்யட்டும்! ).

இன்று காலை நண்பர் ராஜுவிடம் பேசிக்கொண்டு இருந்தேன், அவர் இருக்கும் பிரின்ஸ்டன் பகுதியில், ஒரு இந்தியரும் உதவுவதில்லையாம். அந்த மனப்பான்மையே இல்லையாம்... அவர் மனைவி வேலை செய்யும் இடத்திற்கு அழைத்து செல்லும் கார்பூல் அமெரிக்கன் ( வெள்ளைக்காரர் பெண் ) மாதம் இருநூறு டாலர் வாங்கினாலும் - நல்ல உதவி செய்கிறாராம்.....

துபாயில், சவுதி அரேபியாவில் இருந்த என் மாமா, எங்கள் ஊரில் டிப்ளமோ மட்டும் படித்த ஒருவருக்கு தனது இன்ப்ளுஎன்ஸ் மூலம் வேலை பெற்று தந்தார். ஒரு நாள் வேறு இடத்தில சம்பளம் அதிகம் கிடைத்தால் - நம்பிக்கை வைத்து அழைத்து சென்றவரிடம் சொல்லாமல் சென்றுவிட்டாராம். ( நேரடியாக முதலாளியிடம் பாஸ்போர்டை வாங்கிக்கொண்டு ) மிகவும் வருத்தப்பட்டார்!

அதைப்போலவே என் நண்பன் ஒருவன் இருக்கிறான். திடீரென்று என் வேலை நிலைமை தெரிந்துக்கொண்டு ( ஒரு கோடி ருபாய் சொந்த பணத்தை நான் இன்வெஸ்ட் செய்வது தெரியாமல் ... கிண்டல்? ) அமெரிக்காவில் மிகவும் நல்ல வேலை இருப்பதாகவும், உண்டனே விசா செய்து வர முடியுமா என்று கேட்டு மெயில் அனுப்புவான். அப்படியே பாரக் ஒபாமா எனக்கு விசா அடித்து உதைத்து அனுப்புகிற மாதிரி நினைப்பு தான்! அவனுக்கு தெரியாது இந்தியாவிலும் நான் மிக சந்தோசமாக, சவுரியங்களுடன் இருப்பது. அமெரிக்காவை விட்டு வெளியேறி விட்டேன் என்பதால், குறைந்து ஒன்று போய் விடவில்லை. அவன் அம்மா இன்றும் என் அம்மாவிடம், உங்க பையனுக்கு அடுத்த ரேன்க் தான் என் பையன் எடுப்பான் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்! நான் முதல் ரேங்கில் அவன் இருபதில், பட் எனக்கு அடுத்த ரேன்க் தானே!

சில காலம் முன் ஒருவர் என்னிடம் உதவி கேட்டார். அவர் வேலைக்கும் செல்லும் ஊரில் தமிழ் பேசும் நண்பர்கள் கிடைத்தால் சந்தோசம் என்றார். அவருக்கு தெரியாது நம் அருமை தமிழர்களை பற்றி ( அவர்கள் குடும்பம் மற்றும் வேலை என்றே இருப்பார்கள். இல்லாவிட்டால் அங்கு மிக பிரபல எழுத்தாளர்கள் வந்தால் தான் கவனிப்பார்கள்! ) மேலும் இவர்கள் தான் அமெரிக்கா நிலைமை பற்றி கருது கூறி தான் சொந்தங்கள் தவிர யாரும் அமெரிக்காவிற்கு உள் கால் ஊன்ற வழி செய்யமாட்டார்கள்.....

சிலரை இணையத்தில் கேட்ட போது, மழுப்பி விட்டார்கள்.... ட்விட்டரிலும், ப்ளாகிலும் கதை அடிக்க தானா நண்பர்கள்?

எதற்கும் இருக்கட்டும் என்று என்னோடு பனி புரிந்த கொரிய நண்பர் ஒருவரின் நம்பரை கொடுத்தேன். அவர் மிகவும் நன்றாக உதவி செய்தாராம். ஒரு முறை அதே ஆபிசில் வேலை செய்த நண்பருக்கு நண்பர் ( ஒரே கல்லூரியில் படித்தவர் வேறு ) பார்த்த போது.... முகம் திருப்பிக்கொண்டு சென்றாராம்! என்ன பயமோ! கொடிமையடா சாமி!

***

நான் 1994 இல் அமெரிக்கா வேலை விசயமாக சென்றேன். 1990 இல் மூன்று கல்லூரிகளில் எமெஸ் கிடைத்தும், ஸ்காலர்ஷிப் இல்லாததால் செல்லவில்லை. பிறகு 1995 இல் லா சாலே பார்ட் டைம் எம்பியே படித்த கதை தனி! ( முடிக்க டைம் இல்லை , முடிக்கணும்! )

1998 கல்யாணம் செய்த பிறகு, மனைவியுடன் கூட ஒரு வருடம் அங்கிருந்துவிட்டு, க்ரீன் கார்ட் கடைசி ஸ்டேஜில் இருக்கும் போது, 1999 இல் குடும்ப விசயத்திற்காக இந்தியா திரும்பினேன். 2001 வரை 485 பைல் செய்ய டைம் இருந்தது!

இரண்டாம் முறையாக 2004 இல் குடும்பத்தோடு அமெரிக்கா சென்று செட்டில் ஆகலாம் என்று தான் இருந்தேன். ஆனால் மனைவி குழந்தைகளுக்கு பிடிக்கவில்லை. ஒரு வருடத்தில் ஜி சி வாங்கியிருக்கலாம் ( எல் 1 ஏ - மேனேஜர் ) பட் மெக்சிகன்ஸ் அதிகம் இருந்த பகுதியால் வந்த வினையா தெரியவில்லை. என் கம்பெனி கொடுத்த காசு குறைவு, அதனால், தான் ஆபிஸ் அருகில் அந்த ஏரியா வீட்டில் வாடகை குறைவாக இருக்கும் நிலைமை.

மீண்டும் ஒரு முறை அமெரிக்காவில் சென்று சிறிது காலம் வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். பார்ப்போம் எப்படி நிலைமை இருக்கிறது என்று. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். தெனாவெட்டு வேண்டாமே!

3 comments:

sundaravadivelu said...

சிலருக்கு வாழ்க்கை அடர்ந்த அனுபவங்களை கொடுக்கிறது, கூடவே சில தர்மசங்கடங்களையும்...!!
யாவற்றையும் ஓர் பாடம் போல உள்வாங்கிக்கொண்டு , முன்னர் நடந்த தவறுகள் மேற்கொண்டும் நேராமல் இருப்பதற்கான மெனக்கெடல்கள் மிகவும் தேவைப்படுகிறது அநேகம் பேர்களுக்கு..
அதையும் தாண்டி தவறுகள் தவிர்க்கமுடியாத தன்மையுடன் இயல்பாக ஒன்றி விடுகிற விபரீதங்களும் நிகழக்கூடும் என்ற போதிலும் , அதனை உணர்ந்து களைவதற்கான முஸ்தீபுகள் அவசியப்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன..
கசப்பான அனுபவங்களை இந்தியாவைக்காட்டிலும் அமெரிக்கா போன்ற நாடுகள் அதிகம் ஏற்படுத்தக்கூடும் என்பதை உன் போன்ற நபர்கள் தெரிவிக்கையில் உணர முடிகிறது...
ஆனால் இந்தியாவிலேயே குப்பை கொட்டிக்கொண்டு கிடப்பவர்களுக்கு, இந்தியாவைப்போல கசப்பான அனுபவங்களை ஏற்படுத்துகிற நாடுகள் எதுவும் இருக்காது என்கிற மாயை ஒன்றுண்டு..
மேற்கொண்டும் நீ அமேரிக்கா சென்று பணியாற்ற வேண்டுமென்கிற உன் வேட்கையை அறிகையில் , அந்த நாட்டின் செழிப்பும் அதன் சுத்த ஒழுக்கங்களும் என் மனத்திரையில் நன்றாகவே ஓடுகிறதுவிஜய்

DIVYA said...

You are absolutely right in your observations!

Ramesh said...

Very well written Vijay.