பி.எஸ்.ஜியில் படிக்கும் போது மூன்று மாதத்திற்கு ரூ 75க்கு ட்ரெயின் பாஸ் கிடைக்கும். சில சமயம் பீளமேடு ஸ்டேசன். ஆறு மணிக்கு பேசஞ்சர். ஏலேகாலுக்கு திருப்பூர்! நான்கு மணிக்கு க்ளாஸ் முடிந்தவுடன், கேன்டீனில் அரட்டை, ஒரு மணி நேரம் லைப்ரரி என்று களித்து விட்டு செல்வேன். லேட்டானால் பெரும்பாலும், நண்பர்களோடு மொபட்டில் / பைக்கில் சென்று கோவை ரயில்வே ஸ்டேசனில் இறங்கிக்கொள்வேன். அடிக்கடி எடுக்கும் ட்ரெயின் மதியம் மூன்று மணிக்கு பிலாஸ்பூர் எக்ஸ்ப்ரெஸ், ஆறு மணிக்கு மேல், பாம்பே ஜெயந்தி... அல்லது எட்டு மணிக்கு மேல் ப்ளு ( நீலகிரி எக்ஸ்ப்ரெஸ்). உதவிக்கு - பேசுவதற்கு நிறைய நண்பர்கள் கிடைத்த சமயம்...
அங்கு கோவை ரயில்வே ஸ்டேசனில் சில சமயம் சந்திப்பது பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார். டீச்சர் வேலையை விட்டுவிட்டு முழுதாக எழுதிக்கொண்டு இருந்தார். ( இன்றும் ஐந்து நாவல்கள் எழுதுகிறாராம் ).
கோவையிலிருந்து திருப்பூருக்கு ட்ரெயின் எடுத்தால், ராஜேஷ்குமார் ரோஜா பாக்கு மென்றுக்கொண்டு பேசுவார். ( இரவு ப்ளூவில் அவர் கதை டி.டி.ஆர். மூலம். ஜி.அசோகனுக்கு பயணிக்கும் ) வித்தியாசமான தலைப்பு நாவலுக்கு வைப்பதில் கில்லாடி. ஒரு முறை சந்தித்த போது சும்மா ஒரு தலைப்பு சொல்லுங்க என்றார். திருமரண அழைப்பிதழ் என்றேன். பாக்கெட் நாவலில் அந்த தலைப்பில் ஒரு 84 பக்க கதை வந்தது. ( ஜெப்ரி ஆர்ச்சரின் ட்வெல்வ் ரெட் ஹெர்ரிங்க்ஸ் கதை போல இருக்கும் ).
அதன் பிறகு வேலை, டெல்லி , செகந்திராபாத், யு.எஸ். என்று சென்று பெங்களூர் திரும்பும் வரை, மிக சில எழுத்தாளர்கள் எழுத்தையே படித்தேன். லீவில் ஊருக்கு வரும் போது குமுதம், விகடன் போல சிலது கிடைக்கும்.
இமெயில் மூலம் நான் நிறைய விவாதம் செய்தது எழுத்தாளர் சுஜாதாவுடன்.
இப்போது மிக பிரபலம் அடைந்த எழுத்தாளர்கள் பலரோடு போன், ப்ளாக் கமண்ட்ஸ் என்று நின்று விடுகிறது!
3 comments:
it s very nice to read yr past experiences vijay.. your thirsty with writings and famous writers are all so interesting..
ஓ!
ஆச்சர்யமா இருக்கு விஜய்! நீங்க நிறைய எழுதலாமே...
நன்றி நண்பரே! எழுதவேண்டும் என்று ஆசை தான். நேரம் கிடைப்பதில்லை. முயற்சிக்க வேண்டும்.
Post a Comment