நல்லதோ கெட்டதோ நேரடியாக சொல்லிவிடுவது உத்தமம். சம்பந்தப்பட்டவர்களுக்கு மன வருத்தம் இருக்காது. குத்தி காட்டுகிறீர்கள் என்று சொல்ல தோன்றாது. அன்றோடு அது மறந்து விடும். ஒரு தெளிவு இருக்கும்.
நீங்கள் எடுக்கும் ட்ரெயினிங்கில் சந்தோசப்பட்டவர்கள், மேலும் நீங்கள் நல்ல முறையில் க்ளாஸ் எடுக்கணும் என்று சொல்ல - ஐந்திற்கு நான்கு கொடுக்கலாம். சிலர் எப்படியும் இது ஓர் டுபாகூர் பீட்பேக் என்று ஐந்தோ அல்லது ஒன்று கொடுக்கலாம், ரெகுலர் அப்பரைசல் மாதிரி.
என் மனைவியின் நண்பி ஒருவர், கொடுத்த "கொங்கனி ஒப்பிட்டு" உப்புமா கிச்சடி நன்றாக இருந்தது என்று நான் ஒரு முறை சொன்னதை கேட்டு, ஒவ்வொரு முறையும் அவர்கள் செய்யும் போது ஒரு டிப்பன் பாக்ஸ் வீட்டிற்கு வருகிறது! திரும்பவும், அன்றைய டிப்பன், எங்கள் வீட்டிலிருந்து போவது வேறு விஷயம். கடைசியாக சென்றது ஒரு பிஸ்கட் பாக்கட். பீட்பேக் மகிமை.
சில சமயம் உணர்த்துதல், வேறு விதமாக எடுத்துக்கொள்ளப்படக்கூடும்!
நான் அமேரிக்காவில் இருந்த சமயம் ஒரு முறை நண்பர் எனக்கு கொஞ்சம் நாணயம் அனுப்பு என்பதை நான் தவறாக பணம் கேட்கிறார் என்று எடுத்துக்கொண்டு, அமெரிக்க நோட்டுக்கள் சிலவற்றை அனுப்ப, அவர் எதிர்பார்த்த நூமிச்மேடிசம் கலெக்சன் இல்லாமல் போனது வருத்தம் கொடுத்தது!
--
Regards
Vijayashankar
No comments:
Post a Comment